பிரீமியம் ஸ்டோரி

ஃப்ளாஷ்பேக் !
ஃப்ளாஷ்பேக்!
ஃப்ளாஷ்பேக்!
சேஃப்டி பின்டெரரிஸ்ட்டுகள்!
ஃப்ளாஷ்பேக்!

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நான் தூத்துக்குடி, மகளிர் கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். தோழிகள் எல்லாம் விடுமுறையில் கூட்டமாக தூத்துக்குடி பேருந்து நிலையத்துக்கு டவுன் பஸ்ஸில் சென்று, பின் அவரவர் ஊர்களுக்குப் பறந்துவிடுவோம். டவுன் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் சில பெருசுகள் வேண்டுமென்றே எங்கள் மேல் சாயும்போது, சொல்லி வைத்தாற்போல 'சேஃப்டி பின்' ஆயுதத்தை எடுத்து, ஒரே குத்து! அவ்வளவுதான்... பெருசுகளின் முகம் அஷ்டகோணலாக மாறும். எங்களின் டெரரிஸத்துக்குப் பயந்து இடத்தை விட்டு அவர்கள் நைஸாக நழுவும்போது, 'நல்லா வேணும்!' என்று நினைத்துக்கொள்வோம்!

இப்போதும் கூட்டமான பேருந்து, மின்சார ரயில்களில் மாணவிகள் கூட்டமாக நிற்பதைப் பார்க்கும்போது, 'பின்' அனுபவம் எனக்குள் குபீர் சிரிப்பை கிளப்பத் தவறுவதில்லை.

- ஆர்.சித்ரா ராஜன், சென்னை-44


'கனிய வைத்த கவியரசி'!

மதுரை பாத்திமா கல்லூரியில் நான் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படித்த சமயம். கல்லூரியின் 'முத்தமிழ் விழா'வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் 'கவியரசு' கண்ணதாசன். அப்போதுதான் 'வசந்த மாளிகை' திரைப்படம் வெளிவந்திருந்த சமயம் என்பதால், தான் எழுதிய அப்படத்தின் பாடல்களை தனது கம்பீர குரலால் பாடவும் செய்து, கூட்டத்தை மெய்மறக்கச் செய்து விட்டார் கவியரசர்.

ஃப்ளாஷ்பேக்!

விழா முடிய ஒன்பது மணிக்கு மேலானதால், மறுநாள் முடிக்க வேண்டிய ரெக்கார்ட் நோட்டை எங்களால் முடிக்க இயலவில்லை. சம்பந்தப்பட்ட, கண்டிப்பான விரிவுரையாளரைச் சமாளிக்கும் பொறுப்பை 'கிளாஸ் மானிட்ட'ரான என்னிடம் என் தோழிகள் ஒப்படைத்துவிட்டனர். ஆனாலும், மேம் கிளாஸ§க்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன் வரை உருப்படியாக ஒரு ஐடியாவும் தோணவில்லை. ''பேசாம, 'இரண்டு தினம் வேண்டும். ஹெச்.ஓ.டி-யிடம் கேட்போம். வரைந்து பார்க்க ஒன்று, வண்ணம் தீட்ட ஒன்று!'னு கேட்கலாமா?'' என்று கவியரசு பாணியில் பாடிவிட்டுப் பார்த்தால், வாசலில் ஹெச்.ஓ.டி! என் தோழிகளைப் போலவே அவரும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு, ''சரி சரி... ரெக்கார்டை அடுத்த வாரத்துக்குள்ள ரெடி பண்ணிடுங்க!'' என்றார் சர்ப்ரைஸாக!

கவியரசின் கவிதை (!) கண்டிப்பையும் கனிய வைத்து விட்டது!

- என்.சாந்தினி, மதுரை


பேயறைய வைத்த முதல் மதிப்பெண்!

ஃப்ளாஷ்பேக்!

பதின்மூன்று வருடங்களுக்கு முன் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, எக்கனாமிக்ஸ் பேராசிரியை பரீட்சைத்தாள்களுடன் ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்தார். ''பெரும்பாலான மாணவிகள் காப்பி அடிச்சிருக்கீங்க... ஃபுல்ஸ்டாப், கமா உட்பட!'' என்று எள்ளும் கொள்ளுமாக வெடித்தவர், ''இங்க கண்ணகி யாரு?'' எனக்கேட்க, 'திக்'கென்றிருந்தது எனக்கு. எல்லோருக்கும் எக்னாமிக்ஸ் கசக்க, எனக்கு மட்டும் பிடித்த பாடம் அது! என்னைப் பார்த்துதான் பலரும் காப்பி அடித்திருந்தனர்! 'இப்ப நாமளும் காப்பி லிஸ்ட்டுல மாட்டிக்கிட்டோமே?' என்று அவமானத்தால் கூனிக்குறுகி எழுந்து நின்றேன். ஆனால், ''நீதாம்மா ஃபர்ஸ்ட் மார்க்'' என்று மேம் வாழ்த்தினார். என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் முதல் மதிப்பெண் வாங்கிய அந்த சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க முடியாமல், நான் பேயறைந்ததுபோல சில நொடிகள் நின்றிருந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது!

- வி.கண்ணகி, சென்னை-78

ஃப்ளாஷ்பேக்!
 
ஃப்ளாஷ்பேக்!
ஃப்ளாஷ்பேக்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு