Published:Updated:

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !

பிரீமியம் ஸ்டோரி

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
புல்லரிக்க வெச்ச தேசபக்தி !

சிலுசிலுனு செம ஜில் சீஸன், சின்ன, பெரிய மழை, ஃபென்டாஸ்ட்டிக் கிளைமேட்னு நாம போய் இறங்கினப்போ குட்டி ஊட்டியா இருந்துச்சு மயிலாடுதுறை! 'இந்த முறை எங்க காலேஜுக்கு சான்ஸ் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்'னு வித்தியாசமா பழங்கள் வச்சே கோலம் எல்லாம் போட்டு, நன்றியோட வரவேற்ற மயிலாடுதுறை ஏ.வி.சி. இன்ஜினீயரிங் காலேஜ் கேர்ள்ஸ்... அதைவிட சூப்பர்ப்!

'கேம்பஸ் திருவிழா' பேனர் எல்லாம் மழையில நனைஞ்சிருந்தாலும், ஆடிட்டோரியத்துல செம ஹாட்டா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க கேர்ள்ஸ்! காலேஜ் சேர்மன் ரத்தினகுமார், பிரின்ஸிபால் நளினி, அகமதாபாத் பல்கலைக்கழத்துல இருந்து வந்திருந்த கெஸ்ட் சோமநாத் சேட்டர்ஜினு விழா செம ஜோரா தொடங்குச்சு.

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !

''எங்க காலேஜ்ல நடக்கற முதல் கல்ச்சுரல் இது! எங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து கலக்கப் போறாங்கனு நினைச்சிருந்தேன். ஆனா, 'ஜென்ட்ஸ் நாட் அலவ்டு'னு சொல்லியிருக்கறதால எனக்கே இங்கே பேச மட்டும்தான் சான்ஸ்!''னு சேர்மன் செம ஹியூமரா பேச, சீஃப் கெஸ்ட்ஸ் எல்லாம் மேடையை விட்டு ஆடியன்ஸ் ஸீட்டுக்கு இறங்கி வர, நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.

சோலோ டான்ஸ் போட்டியில பாம்பு மேக்கப்போட வந்து பாம்பு மாதிரியே (!) நாக்கை நீட்டி நீட்டி ஆடின அந்தப் பொண்ணுக்கு, கண் இமைக்காம கிளாப்ஸ் மழை பொழிஞ்சாங்க ஆடியன்ஸ்.

தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் வரிசைகட்ட, 'இந்த காலேஜ் பசங்களுக்கு செம தேசபக்திபா!'னு புல்லரிக்கிற அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலயும் எப்படியாவது ஒரு தேசபக்தி மெசேஜ்ஜை புகுத்தி நம்மள அடிக்கடி சல்யூட் அடிக்க வச்சுட்டாங்கப்பா. விசாரிச்சப்போதான் தெரிஞ்சது ஏ.வி.சி. காலேஜோட எல்லா ஃபங்ஷன்லயும் ஏதாவது ஒரு தேசபக்தி மெஸேஜ் இருக்கணும்கறது எழுதப்படாத விதினு! கிரேட் மச்சி! (இதெல்லாம் காலேஜ் லாங்குவேஜ்... அம்மணீஸ் கண்டுக்காதீங்க!)

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
புல்லரிக்க வெச்ச தேசபக்தி !

'ஆட்ஸ் ஆப்ட்'ல டாபிக் எல்லாம் டக்கரா இருந்துச் சுல?! பிச்சாவரம் பிச்சை ஓடு, திருப்புவனம் கிழிஞ்ச ஜீன்ஸ், கும்பகோணம் குங்குமப்பூனு எல்லா அட்டு டாபிக்கையும்கூட சிக்ஸராதான் அடிச்சாங்க கேர்ள்ஸ்! ஆன் ஸ்டேஜ் போட்டிகள் ஒருபக்கம் பரபர... ஆஃப் ஸ்டேஜ் போட்டிகள் இன்னொரு பக்கம் சரசரனு காலைப்பொழுது செம வேகமா ஓடிடுச்சு!

மதிய செஷன்... அதைவிட தூள்! 'நாங்க எல்லாம் கலா மாஸ்டரோட கஸின் சிஸ்டர்ஸ்'ங்கற ரேஞ்சுக்கு, குரூப் டான்ஸ் போட்டியில கலக்கோ கலக்குனு கேர்ள்ஸ் கலக்கினதுல, 'அட மக்கா... உங்களுக்கு இம்பூட்டுத் தெறமையா'னு வாயடச்சுப் போயிட்டோம் நாம! அதுவரைக்கும் பென்ச்ல சமர்த்துப் பொண்ணா உட்கார்ந்திருந்த பொண்ணுங்க எல்லாம், கூட ஆடி பட்டையைக் கிளப்ப, 'நாங்களும் யூத்தாம்பா'னு ரீ-என்ட்ரி நதியாவா டான்ஸ்ல தூள் கிளப்பிட்டாங்க லெக்சரர்ஸ்! 'செம ரிலாக்ஸேஷன்!'னு ஜட்ஜஸ் சைடும் அதுக்கு வெல்கமிங் ரியாக்ஷன்!

இடையில, 'நீளமான முடி உள்ளவங்க வாங்க'னு ஸ்பாட் பிரைஸ§க்காக அறிவிக்க, ஓடி வந்துச்சு ஒரு டஜன் கும்பல்! கூந்தலை அளந்து அளந்து (!) நாம் டெலீட் பண்ணதுல, ஃபைனல் கன்டஸ்ட்டன்ட்ஸா (!) நின்னாங்க ரெண்டு பேர்! அதுல ஒருத்தர்... மேம்! இந்தப் போட்டிக்கு ஆடியன்ஸ்தான் ஜட்ஜஸ்ங்கறதால, மேமுக்கே எல்லாரும் மார்க் போட (இன்டர்னல் மார்க் ஃபியர்?!), கடைசியில ரெண்டு பேருக்குமே பிரைஸ் கொடுத்து, 'நச் நாட்டாமை!'யானோம் நாம!

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !

விழா முடிவுல விருந்து வழங்க வந்திருந்தார் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அண்ணாத்துரை. ''நாங்க எல்லாம் காலேஜ்ல போடாத ஆட்டமா?! அப்படித்தான் நீங்களும் இன்னிக்கு என்ஜாய் பண்ணியிருப்பீங்க. 'அவள் விகடன்' உங்களுக்கு கொடுத்த இந்த வாய்ப்பை தொடக்கமா வச்சு, இன்னும் நிறைய மேடைகள்ல நீங்க ஏறணும்!''னு வாழ்த்தி, முகம் மலர பரிசு கொடுத்தார் சார்.

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
 

வெயிட் வெயிட்... 'சூப்பர் டிபார்ட்மென்ட் விருது'பத்திதானே கேட்கறீங்க? வின்னர்ஸ்... ஐ.டி. கேர்ள்ஸ்! பரிசு வாங்க ஸ்டூடன்ட்ஸ்கூட அந்த டிபார்ட் மென்ட் ஸ்டாஃப்ஸ்-ம் ஆர்வமா வந்ததுதான் செம டாப்!

- கேம்பஸ் டீம்
படங்கள் மு.நியாஸ் அகமது, எம்.ராமசாமி

புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
 
   
   
புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
புல்லரிக்க வெச்ச தேசபக்தி !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு