Published:Updated:

புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!

புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!

பிரீமியம் ஸ்டோரி

சுத்தம் சோறு போடும்... அசுத்தம்?
புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!
புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!
புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன்'!

கரு.முத்து

'ஃபுட் பாய்சன்' - என்ன முரணான வார்த்தை?! உயிர் வளர்க்கும் உணவும், உயிர் போக்கும் விஷமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அப்படி இணைந்து மிரட்டுவதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியே!

'திருமண வீட்டில் சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி... நூறு பேர் மருத்துவமனையில் அனுமதி',

புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!

'பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பத்து குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு'

- இதுபோன்ற செய்திகளை அவ்வப்போது பார்க்கிறோம்.

வெளியூரில் ஏதாவது பாடாவதி ஹோட்டலில் சாப்பிட்ட சாப்பாடு காரணமாக வீடு திரும்பியதும் வாந்தி, வயிற்றுப்போக்கு என்று அவஸ்தைப்பட்ட அனுபவமும் பலருக்கு இருக்கலாம்.

உண்ட உணவு உடலுக்குள் போய் ஒவ்வாமல், விஷமாக (ஃபுட் பாய்சன்) ஆவது தான் இத்தகைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்.

உள்ளூரில் மட்டுமல்ல... உலகெங்கும் மிரட்டிக் கொண்டிருக்கும் பெரிய பிரச்னை இது. மொத்தம் 250 ரக ஃபுட் பாய்சன்கள் இருக்கின்றன என்று சொல்லும் ஆய்வுகள், 'அவற்றில் 81 சதவிகிதம் கொஞ்சம் சிரமம் கொடுத்து அல்லது ஒன்றும் செய்யாமலே சரியாகிவிடும். மீதம் உள்ள 19 சதவிகிதத்தின் விளைவுகள் அதிகபட்சமாக மரணமாகக்கூட இருக்கலாம்' என்று அழுத்திக் கூறுகின்றன.

ஆனால், இதைச் சாதாரணமாக எண்ணி மருந்து கடையில் ஒரு மாத்திரையை வாங்கி போட்டுவிட்டு போய் விடுகிறார்கள் நம்மில் சிலர். எனவே அந்த விபரீதத்தின் முக்கியத்துவம் காரணமாக, 'ஃபுட்பாய்சன்' பற்றிய முழுமையான தகவல்களை நம் வாசகிகளுக்குத் தெரிவிக்க வேண்டி, 'வயிறு' என்ற நூலை எழுதியவரும், பிரபல குடல்நோய் மருத்துவருமான கும்பகோணம் எஸ்.செல்வராஜை சந்தித்தோம்.

''சமையல் செய்யும்போதும், சாப்பிடும்போதும் செய்யும் சின்னச் சின்ன தவறுகளால் உணவில் தொற்றுகிற, உருவாகிற வைரஸ், பாக்டீரியா, பூஞ்சணம், காளான் வகைகள் மற்றும் புழுக்கள் ஆகியவைதான் உணவை விஷமாக மாற்றுகின்றன. அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்ற பொருட்கள், காய்கறிகள், பால் பொருட்கள், நிறமிகள் ஆகியவை மூலம்தான் இது நடக்கிறது. காரணம், இவற்றை நாம் சரியாகக் கையாளாததுதான். இறைச்சியை சுத்தமாக கழுவிஇருக்க வேண்டும். ஆனால், அதை வாங்கும் இடத்தில் மிருகக் கழிவுகளோடு அது கலந்திருந்து, சரியாக சுத்தம் செய்யாமல் சமைத்தால், அந்த இறைச்சியில் இருக்கும் வைரஸ் உள்ளே போய் உணவை விஷமாக மாற்றிவிடுகிறது.

காய்கறிகளைத் தோட்டத்தில் பறிக்கும்போது, அது மற்ற கழிவுகளோடு கலந்திருந்து, நாம் சரியாக சுத்தம் செய்யாமல் சமைக்கும்போதும் இப்படி நேர்ந்துவிடுகிறது. காய்கறிகளை பொறுத்தவரை அதன் உள்ளே இருக்கும் சில வகை புழுக்கள் இந்த வேலையைச் செய்கின் றன.

பால் பொருட்களின் மீது தொற்றும் சிலவகை பூஞ்சணங்களாலும், சிலவகை பொருட்களில் உருவாகும் பாக்டீரியாக்களாலும் இந்த விஷத்தன்மை ஏற்படுகிறது'' என்று விளக்கிய செல்வராஜ், உணவுப் பொருட்களை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்...

புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!

''இறைச்சி, மீன் ஆகியவற்றை சமைக்கும்போது நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கூடவே, நம் கைகளையும் நன்கு சுத்தம் செய்துவிட்டே, சமைக்க வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை இரண்டு மணி நேரத்தில் சமைத்துவிட வேண்டும். சமைக்காத இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்தால், மற்ற பொருட்களுடன் வைக்காமல் தனியே வைக்க வேண்டும். அதை ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்து சமைப்பதும் கூடாது. ஃப்ரிட்ஜில் தேவையில்லாமல் வைத்திருக்கும் எந்தப் பொருட்களையும் தூக்கி எறிய தயங்கக்கூடாது.உணவை இரண்டு நாள், மூன்று நாள் வைத்திருந்து சாப்பிடுவதும் கூடாது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அல்லது சூடு செய்யப்பட்ட தண்ணீரையே அருந்த வேண்டும். பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் முன், நன்றாகக் கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்'' என்று அறிவுறுத்தியவர், ஒருவேளை ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டார்.

''சாப்பிட்ட 30 நிமிடத்திலிருந்து அதிகபட்சம் 48 மணிநேரத்துக்குள் இதற்கான விளைவுகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். வயிற்றுப்போக்கும் வாந்தியும்தான் இதன் பிரதான அறிகுறிகள். வயிற்றுப்போக்கு தொடர்ந்தால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, உயிருக்கே ஆபத்தாக முடியும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடன் கடும் தலைவலி, ஜுரம் ஆகியவையும் இருக்கும். குழந்தைகள், வயதானவர்களுக்குத்தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை வியாதிக்காரர்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படுத்திவிடும். இரண்டு நாட்களுக்கு மேல் தொடரும் வயிற்றுப்போக்கால் மூளைக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

சிலவகை வைரஸ்களால் ஏற்படும் ஃபுட் பாய்சன் மலம் வழியாக குழந்தைகளுக்கு பரவியதாக இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பசியே இருக்காது. இதன் தொடர்ச்சியாக மஞ்சள்காமாலை வருவதற்குகூட வாய்ப்புகள் உண்டு.

பாக்டீரியாக்களால் வரும் ஃபுட் பாய்சன் குடலை பாதிக்கும், குடல் வீக்கத்தை உண்டு பண்ணும். உணவு செரிக்காமல் தங்கும். பூஞ்சணம் மற்றும் காளான்களால் ஏற்படும் ஃபுட்பாய்சன் செரிமான மண்டலத்தை பாதித்துவிடும். சிலருக்கு சிறுநீரகத்தை செயலிழக்க செய்துவிடும்'' என்று அந்த விபரீதத்தின் எல்லா வகைகளையும் விவரித்தவர், அதற்குக் கொடுக்க வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

''ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கெட்டியான சாப்பாடு கொடுப்பதை நிறுத்திவிட்டு, திரவ உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். அதிகப்படியான வயிற்றுப் போக்கு இருந்தால் உப்பு - சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகும் குறையவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்" என்று சொன்ன செல்வராஜ்,

''திருமணம், விசேஷம் என்று பெரிய விருந்துகளில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகள், சரியாக சுத்தம் செய்யப்படாமலிருக்கலாம் என்பதால், அங்கெல்லாம் அசைவ உணவு சாப்பிடாமல் தவிர்க்கலாம். அதேபோல சில ஓட்டல்கள், தள்ளுவண்டிகள், ஃபாஸ்ட்புட் கடைகள், ஐஸ்கிரீம், சாலட் என திறந்த வெளியில் விற்கும், ஈ மொய்க்கும் உணவு பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, சுத்தமானவற்றையே சுவைப்பது நல்லது. சுத்தம் சோறு போடுமென்பது இதுதான்!'' என்று 'பஞ்ச்' வைத்தார் டாக்டர்!

புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!
 
புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!
புரட்டி எடுக்கும் 'ஃபுட் பாய்சன் '!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு