Published:Updated:

'கோடைக்கு கூழ்... வாடைக்கு களி !

'கோடைக்கு கூழ்... வாடைக்கு களி !

பிரீமியம் ஸ்டோரி

கோடைக்கு கூழ்... வாடைக்கு களி!
'கோடைக்கு	 கூழ்... வாடைக்கு களி !
'கோடைக்கு	 கூழ்... வாடைக்கு களி !
நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்

ஆர்.குமரேசன்

" 'உணவே மருந்து... மருந்தே உணவு' என்ற உலகம் போற்றும் உன்னத உணவு முறை நமது பாரம்பரிய உணவு முறை. குடும்பத்தின் ஆரோக்கியத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. அதற்காகத்தான் நமது பாரம்பரிய உணவு முறைகளைப் பற்றி பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறோம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகள் ஆய்வாளர் இராம.சுப்பிரமணியம்.

"நம் பாரம்பரிய உணவு முறையைத் தேடி இன்று உலக நாடுகள் வந்துகொண்டுஇருக்கின்றன. பெரு நகரங்களின் நட்சத்திர விடுதிகளில் இப்போது அதிகமாக விற்பனையாவதும் பாரம்பரிய உணவுகள்தான். ஆனால், நம் வீட்டு அடுக்களைக்கு அவையெல்லாம் அந்நியமாகப் போய் அதிக காலமாகிவிட்டது.

'கோடைக்கு	 கூழ்... வாடைக்கு களி !

முப்பது வருடங்களுக்கு முன் எல்லோர் வீடுகளிலும் தினை, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம் போன்ற சிறு தானியங்களை மாவாக்கி, கருப்பட்டி கலந்து உருண்டை பிடித்து வைத்திருப்பார்கள். இதை 'பொரிவிளங்காய் உருண்டை' என்பார்கள். அதுதான் இன்று ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டசத்து பானங்களாக திரிந்துபோயுள்ளது.

சிறு தானியங்களையும், நிலக்கடலை, மொச்சை, கொள்ளு மாதியான பயறு வகைகளையும் உணவில் பெருமளவு பயன்படுத்தினாலே நோய்கள் வராது. இப்போது கிடைக்கும் உடனடி உணவுகளைவிட, இவையெல்லாம் ருசியாதும்கூட. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமான நம் உணவின் ருசி, நம் காலத்திலேயே அழிந்துவிடாமல் காப்பதோடு, சந்ததிகளின் நாவுகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

'கோடைக்கு கூழ்... வாடைக்கு களி' என்று கேழ்வரகு, கம்பு போன்ற ஒரே தானியங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றியவர்கள் நம் முன்னோர்கள். சிறு தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. நாம் அரிசியை எந்தெந்த வகையில் பயன்படுத்துகிறோமோ, அதேபோல சிறு தானியங்களை சோறு, இட்லி, தோசை, அடை, புட்டு என்று வகைவகையாகச் செய்து சாப்பிடலாம்'' என்று யோசனைகள் சொன்ன சுப்பிரமணியம்,

"காலையில தினமும் நீராகாரம் சாப்பிடும் பழக்கம்இருந்தாலே பாதி நோய் பக்கத்தில் வராது. இப்போது அடிக்கடி சீதோஷ்ணம் மாறுவதால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை சளி தொந்தரவு அதிகமாயிருக்கும். அடிக்கடி சாப்பாட்டில் கொள்ளு ரசம், கொள்ளு தொக்கு என்று சேர்த்துக்கொண்டாலே இந்த தொந்தரவு இருக்காது. அதேபோல எல்லோர் வீட்டு அடுக்களையிலும் அஞ்சறைப் பெட்டி என்று ஒன்று இருக்க வேண்டும். அதில் மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள், வெள்ளைப்பூண்டு கட்டாயம் வேண்டும். இவை ஒவ்வொன்றும் உணவு... ஒவ்வொன்றும் மருந்து!

நொதித்தலும், சிதைத்தலும் நடந்தால்தான் அது உணவு. ஆனால், 'இது அஞ்சு வருசம் வரைக்கும் கெட்டுப் போகாது' என்று சொல்லப்படும் பண்டங்கள் எப்படி உணவாகும்? அப்படிப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை செரிப்பதற்கு நம் உடம்பில் இருக்கும் என்சைம்களும், சுரப்பிகளும் அதிக பிரயத்தனப்படும். அதனாலேயும் நோய்கள் வரும்! ஆக, பாரம்பரிய உணவுகளால் மட்டும்தான் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும்!'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

'கோடைக்கு	 கூழ்... வாடைக்கு களி !
 
'கோடைக்கு	 கூழ்... வாடைக்கு களி !
'கோடைக்கு	 கூழ்... வாடைக்கு களி !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு