Published:Updated:

விரதம்...சரியா.தவறா?

விரதம்...சரியா.தவறா?

பிரீமியம் ஸ்டோரி
விரதம்...சரியா.தவறா?
விரதம்...சரியா.தவறா?
விரதம்...சரியா.தவறா?
லாவண்யா

விரதம், கடவுளின் அருள் கொண்டு வந்து சேர்க்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் இன்னொரு பக்கம், உடலுக்கு உணவு தர மறுக்கும் இந்த விரதம், உடல் நலத்துக்கு ஏற்றதா, இல்லையா என்பது பற்றிய கேள்விகளும் பல! இங்கு அது தொடர்பான ஆழமானதொரு விளக்கமளிக்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம்!

"ஒரு நல்ல டிரைவர், தன் காரிடமே சண்டை போடக் கூடாது. அதேபோல புத்திசாலியான ஒரு மனிதன் தன் உடம்போடு சண்டை போடக்கூடாது. விரதம் என்பது சிலரைப் பொறுத்தவரையில் உடம்பை ஒழுங்குபடுத்துவது. ஆனால், அது நடைமுறையில் பலரின் முறைப்படி உடம்புடன் சண்டைப் போடுவதாகத்தான் உள்ளது.

விரதம்...சரியா.தவறா?

பொதுவாக, 'நீங்கள் பட்டினி கிடந்தால்தான் அருள் தருவேன்' என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. சாதாரணமாகவே ஒரு குழந்தை பட்டினி கிடப்பதை அதன் தாய் விரும்ப மாட்டாள். அப்படியிருக்க, உலகத்துக்கெல்லாம் தாயாக இருக்கிற கடவுள், நீங்கள் கொலை பட்டினி கிடக்க வேண்டும் என்று விரும்புவாரா என்ன?!

சொல்லப்போனால், மனிதனுடைய ஒருவகையான பிடிவாதமான எண்ணம்தான் இந்த விரதம். அதாவது, சில விஷயத்தை அடைய முடியாத குழந்தைகள் சாப்பிட மறுத்து சண்டித்தனம் செய்வார்கள். சாப்பிடாமல் சண்டை போட்டால் அம்மா அதை தந்துவிடுவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதேபோல சில பேர் கடவுளிடம் சண்டை போட, விரதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

கடவுள் என்ன கொடுக்கவில்லையோ அதில் ஒரு நியாயம் இருக்கும். அவர் என்ன தந்தாரோ, அதிலும் ஒரு நியாயம் இருக்கும். அதை விட்டு, கடவுள் எனக்கு தராததை நான் விரதம் இருந்து வாங்கி விடுவேன் என்று எண்ணு வது தவறு.

'அப்போ முன்னோர் சொல்லி வச்சிருக்க விரதங்களையெல்லாம் தவறுனு சொல்றீங் களா..?' என்று சிலர் பதறுவார்கள். அப்படியில்லை. தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தால் யாராக இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள். அதேபோல, நம் உடம்பில் இயங்கிக்கொண்டே இருக்கும் அஜீரண மண்டலமும் தளராமல் இருக்க, அதற்கு ஓய்வு தேவை என்ற அடிப்படையில்தான் இந்த விரத அமைப்பே ஏற்படுத்தப்பட்டது.

முழுக்கவே உண்ணாமல் இருப்பது, பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்வது, திரவ உணவை மட்டும் சாப்பிடுவது என விரத்தில் பல முறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. கந்த சஷ்டியின் ஆறு நாள் விரதத்தில், முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு என ஆறு நாள் வரை வளரும். இந்த மிளகு, உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு! பிரதோஷ கால விரதத்துக்குக் காரணம், பிரதோஷ நேரமான அந்த அந்தி-சந்தி நேரத்தில்தான் நோய்க்கிருமிகள் உண்டாகும். அந்தச் சமயத்தில் உடம்பில் உணவு இருப்பது நல்லதற்கல்ல என்பதற்காக!

விரதம்...சரியா.தவறா?

அதேபோல, 'முருக பக்தராக இருந்தால் மாதம் ஒரு முறை கிருத்திகைக்கு விரதம் இருந்து உன் உடம்பை சுத்தப்படுத்திக் கொள், வைணவராக இருந்தால் மாதம் ஒருமுறை ஏகாதாசி அன்று விரதம் இருந்து கொள்' என்று முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். ஆனால், நாமோ இப்போது எல்லா விரதங்களையும் இருந்து, எல்லா இறைவனையும் அடைய முயற்சித்தால், உடல்நலம் பாதிக்கப்படும்தானே?!

'உபவாசம்' என்பதுதான் விரதத்துக்குரிய சொல். உபவாசம் என்பதற்கு முழுமையான அர்த்தம் இறைவனோடு நெருங்கி வசிப்பது. அதாவது, இறைவன் மீது முழு பக்தியோடு இருக்கும்போது எந்த உணவும் தேவைப்படாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆக, உணவு தேவைப்படாத நிலைதான் விரதமே தவிர, 'நான் சாப்பிடவில்லை' என்ற எண்ணத்துடன் பட்டினி கிடப்பது விரதமல்ல.

அப்படி வலுக்கட்டாயமாக 'நான் விரதம் இருக்கிறேன்' என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், 'தான் மட்டும் பட்டினி கிடக்க வேண்டியிருக்கே, மற்றவர்களெல்லாம் சாப்பிடுகிறார்களே' என்று நினைப்பும், தொடர்ந்து கோபமும்தான் வரும். இதனால் இரிட்டேஷன் ஏற்படும். விரதம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடம்பில் சர்க்கரை அளவு மாறும். சிலருக்கு அசிடிட்டி ஏற்படும்.

எனவே, விரதம் இருப்பதற்கு முன் அதற்கு உங்கள் உடலும் மனமும் தகுதியாக இருக்கிறதா என்பதை அறியுங்கள். இருப்பின், ஆரோக்கியமான விரதமிருங்கள்!

என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால், விரதம் என்பது மென்மையாக இருக்க வேண்டுமே தவிர வன்முறையாக இருக்கக்கூடாது. பிறரை துன்புறுத்துவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம் தன்னை துன்புறுத்திக் கொள்வதும். உடலுக்கு எதிரான இந்த விஷயம் கடவுளுக்கும் எதிரானது.

பொதுவாக சித்தர்களும் புத்தர்களும் விரதத்தை விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை. பக்தர்கள்தான் அதை பிடிவாதமாக கையாளுகிறார்கள். கடும் விரதத்தை எந்த கடவுளும் ஏற்றுக் கொள்வதுமில்லை!''

யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?

விரதம்...சரியா.தவறா?

விரதம் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துச் சொல்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

தங்கள் வயது, அன்றாடம் பார்க்கும் வேலை, தினசரி உட்கொள்ளும் மாத்திரை மற்றும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி போன்ற விஷயங்களின் அடிப்படையில்தான் விரதம் இருக்கவே முயற்சிக்க வேண்டும்.

எல்லோரும் எல்லா சமயத்திலும் விரதம் இருக்கக்கூடாது. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் விரதத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஒருநாள் முழுக்க எந்தவித உணவையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உடலுக்கு நல்லதல்ல. மூளைக்குத் தேவையான குளூக்கோஸ், மாவுப் பொருட்களில் உள்ளது. எனவே, தானியங்கள், பழங்கள், பால் இவற்றில் ஏதாவது ஒன்றை விரத நாளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விரதமென்ற பெயரில் உடலின் நீர்ச்சத்தை இழந்துவிடக் கூடாது.

விரதம்...சரியா.தவறா?
 
விரதம்...சரியா.தவறா?
விரதம்...சரியா.தவறா?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு