பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள் !
ராசி பலன்கள் !
ராசி பலன்கள் !
நவம்பர் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மேஷம் கடினமாக உழைக்கும் குணமும், நல்லதை நினைக்கும் மனமும் கொண்டவர்கள் நீங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக் குள் வரும். 17-ம் தேதி முதல் 19-ம் தேதி காலை 9.30 மணி வரை அவசர முடிவுகளைத் தவிருங்கள். சூரியன் 7-ல் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வரலாம். உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமைக்கு உதவுவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் தருணமிது.

ரிஷபம் 'வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பிக்கலாம்' என்ற கொள்கையை கடைபிடிப்பவர்கள் நீங்கள். புதன் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சுக்கிரனால் கணவருடன் கருத்து வேறுபாடு, உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 19-ம் தேதி காலை 9.30 மணி 21-ம் தேதி வரை வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை. மேலதிகாரியின் ஆதரவு உண்டு. மதியுகத்தால் வெற்றி பெறும் வேளையிது.

மிதுனம் 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்றிருக்கும் நல்லவர்கள் நீங்கள். சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பாராத வெற்றி கிட்டும். சொத்து, வாகன சேர்க்கை உண்டு. ராகுவும் கேதுவும் சரியில்லாததால் வீண் பயம் ஏற்படலாம். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளையிது.

கடகம் 'விட் டுக் கொடுப்பதால், எப்போதும் கெட்டுப் போவதில்லை' என்ற கொள்கையைக் கடை பிடிப்பவர்கள் நீங்கள். குரு பகவான் வலுவாக இருப்பதால் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதுத் திட்டங்கள் நிறைவேறும். பணபலம் உயரும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். புது வீடு வாங்குவீர்கள். 24-ம் தேதி எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். கேது 12-ல் நிற்பதால் வேலைச்சுமை, சலிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொந்தரவுகள் நீங்கி சாதிக்கும் காலமிது.

சிம்மம் ஆழமாக யோசித்து, அதிரடியாக செயல்படும் குணமுடையவர்கள் நீங்கள். சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். பூர்விக சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். உடல் உபாதை வந்து விலகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். தலை நிமிர்ந்து நடக்கும் நேரமிது.

கன்னி சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர் கள் நீங்கள். கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. கணவர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பாச மழை பொழிவார். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். புதுச் சொத்து வாங்குவீர்கள். ஜென்மச் சனி நடப்பதால் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். திட சிந்தனையால் வெல்லும் காலமிது.

துலாம் தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் நீங்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனுக்கு உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். கணவரின் வருமானம் உயரும். 2-ல் சூரியன் நிற்பதால் வீண் கோபம் வேண்டாம். அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் அமையும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கனவுகள் நனவாகும் காலமிது.

விருச்சிகம் தலைமைப் பண்பு அதிகம் கொண்ட நீங்கள் தலைக்கனம் இல்லாதவர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் முகப் பொலிவு கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வருமானம் உயரும். கணவரின் அனுசரணை அதிகரிக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 2-ல் ராகு நிற்பதால் கோபம், டென்ஷன் ஏற்படலாம். வீடு கட்ட கடன் கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகனுக்கு வரன் அமையும். 3-ல் குரு நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புது பொறுப்புகள் தேடி வரும். நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரமிது.

தனுசு வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான செயல்திறனும் கொண்டவர்வர்கள் நீங்கள். சனி பகவான் வலுவாக நிற்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். வெளியூர் பயணம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். கணவர் உங்களின் தியாகத்தை மதிப்பார். மழலை பாக்கியம் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனம் சீராகும். 8-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்காலம் குறித்த கவலை கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பதவி உயர்வு உண்டு. தோல்வியிலிருந்து விடுபடும் வேளையிது.

மகரம் மூளை பலமும் முற்போக்கு சிந்தனையும் உடையவர்கள் நீங்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் மனவலிமை கூடும். பணவரவு உண்டு. விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். 11-ம் தேதி முதல் மற்றும் 12-ம் தேதி மதியம் 2 மணி வரை யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். ராகுவால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டும் தருணமிது.

கும்பம் அடக்குமுறைக்கு அஞ்சாத நீங்கள், அன்புக்கு அடிமையாகிவிடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவர் சுறுசுறுப்பாக இருப்பார். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உதவுவார்கள். 12-ம் தேதி மதியம் 2 மணி முதல் 14-ம் தேதி மாலை 6 வரை எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில், சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் வேளையிது.

மீனம் ஏற்றிவிட்ட ஏணிப்படியையும், கடந்து வந்த பாதையையும் எப்போதும் மறவாதவர்கள் நீங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவரின் வருமானம் உயரும். வேலை தேடிக் கொண்டிருந்தவர் களுக்கு நல்ல நிறுவனத்தில்இருந்து அழைப்பு வரும். 14-ம் தேதி மாலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத் தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டும். அதிரடி முன்னேற்றம் தரும் காலமிது.

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் !
 
ராசி பலன்கள் !
ராசி பலன்கள் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு