பிரீமியம் ஸ்டோரி

நமக்குள்ளே...
நமக்குள்ளே...
நமக்குள்ளே...

சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களுக்குப் பயணப்பட்டார் மார்கன் ஸ்பர்லாக். ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போய், அங்கே கிடைக்கும் 'உலக சுவை'யுள்ள (?) ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளை ஒரு கை பார்ப்பதுதான் அவருடைய திட்டம். கிட்டத்தட்ட 20 நகரங்களில் இப்படி டேரா போட்டவர்... பர்கர், பீட்சா, ஃபிரெஞ்சு ஃப்ரை, மில்க் ஷேக், சோடா, மினரல் வாட்டர் என்று கிடைத்ததையெல்லாம் வெளுத்துக் கட்டினார்.

மூன்று வாரங்களிலேயே... 11 கிலோ எடை கூடியது; கொலஸ்ட்ரால் 10 புள்ளிகள் எகிறியது; இதயம் தாறுமாறாகத் துடித்தது; மூச்சுவிட சிரமப்பட்டார்; கல்லீரல் பாதிப்புக்குள்ளானது.

உடன் இருந்த நண்பர்களும், பரிசோதித்த டாக்டர்களும் கவலையோடு இதை மார்கன் ஸ்பர்லாக்கிடம் விவரிக்க... அவரோ, 'வெற்றி... வெற்றி...' என்று கூச்சலிட்டார்!

தன்னுடைய முயற்சியில், வெற்றி கிடைத்தால் யார்தான் கொண்டாட மாட்டார்கள்?

ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட் மோகம் அமெரிக்காவில் ஆரம்பித்து உலகையே ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், 'இத்தகைய உணவுகள், மனித குலத்தையே நிரந்தர நோயாளிகளாக்கிவிடும்' என்று ஆரம்பத்திலிருந்தே பலரும் அலறல் போடுகிறார்கள் உலகம் முழுக்கவே. ஆனால், அந்த உணவுகளைக் கடைபரப்பும் நிறுவனங்கள், பல கோடி டாலர்களை அள்ளிவிட்டு, விளம்பரங்களை தூள் பரத்த... அந்தச் சத்தத்தில் எதிர்ப்பு குரல்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இதற்கு நடுவேதான்... இந்த உணவுகளின் யோக்கியதையை மக்களின் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காக தன்னையே பணயம் வைத்து, களத்தில் இறங்கி 'வெற்றி'க் கூச்சல் போட்டார் மார்கன் ஸ்பர்லக். அடிப்படையில் திரைப்பட இயக்குநரான இவர், இந்த முயற்சியை அப்படியே குறும்படமாக்கி வெளியிட்டபோது, 'ஃபாஸ்ட் ஃபுட்'டின் மறுபக்கத்தைப் பார்த்து அமெரிக்காவே அதிர்ந்தது!

உணவு என்பது... நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஒன்றாக இருந்தவரையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவே 'கௌரவ'த்தின் அடையாளம்... ஃபேஷன்... என்றெல்லாம் மாறிவிட்டதுதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் வழி திறந்து வைத்திருக்கிறது.

''காலநிலை மற்றும் வாழும் இடம் ஆகியவற்றுக்கு ஏற்ற உணவுப் பழக்கம்தான், மனிதனுக்கு நல்ல உடல் நலத்தைத் தரும். இன்றைக்கு 90% நோய்கள் தவறான உணவுப் பழக்கத்தினால்தான் வருகின்றன. உலகம் முழுவதும் பசியால் இறந்தவர்களைவிட, தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் இறந்தவர்களே அதிகம். ஆகவே, உணவுப் பழக்கத்தை முறைப்படுத்துவதுதான் நம்மை கடைசிவரை காப்பாற்றும் ‘அமிர்த சஞ்ஜீவினி'யாக இருக்கும்'' என்று நிபுணர்கள் அறிவுரைகளைச் சொல்லிக்கொண்டுள்ளனர்.

அதற்கு தகுந்தாற்போல் உங்களை மாற்றிக் கொள்ளத்தான்... 'உணவு சிறப்பிதழ்'. சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் தோழியரே!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே...

ஆசிரியர்

நமக்குள்ளே...
-
   
   
நமக்குள்ளே...
நமக்குள்ளே...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு