Published:Updated:

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

பிரீமியம் ஸ்டோரி

செய்திகள் யோசிப்பது..!
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !
பாலபாரதி, எம்.எல்.ஏ.

'சண்டிகர் நகரில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பை காரணம் காட்டி, போலீஸால் அலைக்கழிக்கப்பட்ட சிறுநீரக நோயாளி சுமித் வர்மா அநியாயமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்திருப்பதோடு... இரண்டு லட்ச ரூபாய் நஷ்டஈடும் வழங்கச் செய்துள்ளார் பிரதமர்.'

செய்திகள் யோசிப்பது.... !

''கடுமையான கண்டனத்துக்கு உரியது இச்சம்பவம். ஓர் உயிருக்கான பாதுகாப்பே... மற்றோர் உயிரைப் பறிப்பதற்கு காரணமாகியிருப்பது, நாமெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக, அரசியல்வாதிகள்!

நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமருக்கு பாதுகாப்பு மிக முக்கியம். அதேசமயம், ஓர் உயிரின் மதிப்பு அதைவிட முக்கியம். அப்படி ஒன்றும் அந்த நபர் துப்பாக்கியோடு அந்த மருத்துவமனை வளாகத் துக்குள் வரவில்லையே? டிரிப்ஸ் ஏறிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டுதானே அங்கு அழைத்து வரப்பட்டார். அதைக் கூடவா அங்கிருக்கும் போலீஸாரால் புரிந்து கொள்ள முடியாது? பிரதமரின் வருத்தம்... போன உயிரை மீட்டுத் தந்துவிடுமா?

பொதுவாகவே, காவல்துறை என்பது ஆளும்கட்சியினரில் சொல்லுக்கேற்ப ஆடும் கைப்பாவையாகத்தான் இருக்கின்றது. ஆளும்கட்சிகளின் பெருங்கூட்ட நிகழ்ச்சிகள் எனில், அதைக் காரணம்காட்டி நசுக்கப்படும் மனித உரிமைகள், அவிழ்க்கப்படும் அநியாயங்கள், பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள்... இவை எல்லாவற்றையும் 'பார்த்துக்கொள்ளும்' பொறுப்பைத்தான் காவல்துறை சிரமேற்றுச் செய்கிறது.

செய்திகள் யோசிப்பது.... !

ஜனநாயகத்தின் ஒரு அங்கமான நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையே தாக்குவது, நாட்டின் உயரிய எழுத்துச் சுதந்திரம் கொண்ட பத்திரிகையாளர்களைத் தாக்குவது, வளரும் சமுதாயமான மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டால் கை கட்டி வேடிக்கை பார்ப்பது... என சுயமாகச் சிந்திக்காமல், கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில்தான் காவல் துறை வைக்கப்பட்டுள்ளது!

சில, பல ஆண்டுகளாகவே... பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு 'பாதுகாப்பு' என்ற பெயரால் போலீஸ் நடத்தும் கெடுபிடிகள், பொதுமக்களுக்கு எத்தனை எத்தனையோ அவஸ்தைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதுபற்றிய குமுறல்களும் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன. என்றாலும், அதன் மோசமான விளைவு எப்படி இருக்கும் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில்தான் சுமித் வர்மாவின் உயிர் பறிபோயிருக்கிறது!

இந்நிலை இனியும் தொடர்ந்தால்... போலீஸ் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதை கூட மறைந்துவிடும் - ஜாக்கிரதை!''

செய்திகள் யோசிப்பது.... !
 
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு