Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

பிரீமியம் ஸ்டோரி

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
"தவறான இனிஷியலால் ஒரு குழப்பம்... தீர்க்க என்ன வழி?"

"நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற பெண். எனக்கு 22 வயதில் மகன் இருக்கிறான். பிறந்ததிலிருந்து என்னுடனேயே வைத்து வளர்த்து, படிக்க வைத்திருக்கிறேன். சிறு வயதில் பள்ளியில் சேர்க்கும்போது, எங்கள் கூட்டு குடும்பத்தில் உள்ளவர், தன் பெயரை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து சேர்த்து விட்டார். அதனால், அதுவே அவனுக்கு இனிஷியலாகவும் ஆகிவிட்டது. அது அப்படியே பத்தாம் வகுப்பு சான்றிதழ்களிலும் வந்துவிட்டது. ஆனால், பிறப்பு சான்றிதழில் 'தந்தையின் பெயர்' என்ற இடத்தில் என் கணவரின் பெயர்தான் இருக்கிறது.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

என் மகனுக்கு இப்போது பாஸ்போர்ட் எடுக்கவேண்டும். மேலும் என் மகன் இப்போது, 'எனக்கு உன் (அம்மா) பெயரையே இனிஷியலாக வைத்திருக்கலாமே?' என்கிறான். இப்போது அவன் சான்றிதழ்களில் என் பெயரை இனிஷியலாக மாற்றமுடியுமா?

தந்தையின் பெயரைத் தவறுதலாக கொடுத்துவிட்டதால், என் மகன் பிற்காலத்தில் அவனின் தந்தைக்கு வாரிசுரிமை கோர முடியாது என்கிறார்கள் சிலர். இது சரியா?"

இந்தக் கேள்விக்கு பதில் தருகிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர்.

"இனிஷியல் மாற்றம் என்பது ஒன்றும் மிகப் பெரிய தவறோ, திருத்த முடியாத குற்றமோ அல்ல! கெஜட்டில் இப்போது உள்ள உங்கள் மகனின் முதல் எழுத்தை சட்டப்படி எளிதாக மாற்ற முடியும். சிலர் நியூமராலஜிக்காகக்கூட இன்ஷியல், பெயரை மாற்றுகிறார்கள். சென்னை, அண்ணா சாலையில் 'அரசு எழுது பொருள் கிடங்கு' இருக்கிறது. அங்கே இதுபோன்ற மாற்றங்களைச் செய்வதற்கான படிவம் கிடைக்கிறது. அதில் உங்கள் மகனைப் பற்றிய விவரங்களையும், இனிஷியல் (அல்லது பெயர்) மாற்றத்துக்கான முக்கிய காரணத்தையும் எழுதிக் கொடுத்தால், ஒரு மாதத்தில் கெஜட்டில் உள்ள பெயரை உங்கள் விருப்பப்படி மாற்றி, அதற்கான ஆவணங்களைக் கொடுப்பார்கள். அப்படி இன்ஷியலையோ பெயரையோ மாற்றிக்கொண்ட பின்பு, ஏதாவது ஒரு பிரபல பத்திரிகையில் 'இதுவரை அப்படி இருந்த என் பெயர், இனி இப்படி மாறுகிறது' என ஒரு சிறு விளம்பரம் கொடுக்க வேண்டும். அவ்வளவே! முழு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடும்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

புதுப் பெயர் (புதிய இன்ஷியலுடனான பெயர்) கெஜட்டில் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் உங்கள் மகனிடம் இருக்கும்போது பாஸ்போர்ட் பெறுவதில் பிரச்னை வராது. ஆனால், அவருடைய தந்தையின் சொத்துக்கு வாரிசுரிமை கோருவதில்தான் ஒரு சிறு பிரச்னை. உங்கள் மகனை, 'என் மகனாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்' என தந்தை சட்டப் பிரச்னையை எழுப்பினால் மட்டும் சொத்தினைப் பெறுவதில் சிக்கல் உண்டாகும். அதுபோன்ற சூழல் வந்தால் மேஜராக உள்ள உங்கள் மகன் நீதிமன்றத்துக்குச் சென்று, தான் அவருடைய வாரிசு என்பதை நிரூபித்து தீர்ப்பு பெற வேண்டியிருக்கும். தற்போது டி.என்.ஏ. டெஸ்ட் வரை அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில், உங்களுக்குச் சாதகமான தீர்ப்பே நிச்சயம் கிடைக்கும். எனவே, எந்தக் கவலையும் வேண்டாம்".


"ஆறு வருடங்களாகியும் 'குவா குவா' சத்தம் கேட்கவில்லை..."

"என் மகனுக்குத் திருமணமாகி ஆறு வருடமாகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. மகனும் மருமகளும் மருத்துவமனை படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, பெரியவர்கள் கோயில்களாக சுற்றிவருகிறோம். மகனின் ஜாதக அமைப்பில் குழந்தை பாக்கியத்துக்கு இடமில்லையென்றும், மருமகளின் ஜாதகப்படி குழந்தை பாக்கியம் உண்டு என்றும் இருக்கிறது. இந்த ஜோதிட குழப்பத்தில் மேற்கொண்டு தெளிவு பெற விரும்புகிறேன்"

இந்தக் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் திட்டக்குடி (கடலூர்) ஜோதிடக் கலைஞர் மகேஷ்ராம்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !

"வம்சவிருத்தி என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் ரகமல்ல. திருமணமாகி இருபது வருடங்களுக்குப் பிறகுகூட புத்திரபாக்கியம் கிடைக்கப் பெறுபவர்களை கண்கூடாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?!

பொதுவாக குழந்தை பாக்கியத்தைத் தீர்மானிப்பதில், ஜாதக பலாபலனில் 'பாவகம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பாக்கியம் மட்டுமல்ல... கலை ஈடுபாடு, அரசியல், புகழ், பெரும் உழைப்பில்லாத போதும் செல்வம் வரும் வழிகள் என பல்வேறு கிரியை தொடர்பான பலிதங்கள் 5-ம் பாவகத்தோடு சம்பந்தப்பட்டவை. இந்த பாவகம் மற்ற பாவகங்களோடு தொடர்பு கொண்டிருக்கும் ஜாதக அமைப்பை பொறுத்து, குழந்தை பாக்கியத்தைக் கணிக்கும் முறையை சாஸ்திரத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஜாதகதாரர் பெண் எனில், ஐந்தாம் பாவகம் 2, 3, 5, 7, 9, 11 போன்ற பாவகங்களோடு தொடர்பு பெற்றிருப்பின் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. இதுவே 5-ம் பாவகம் உள்ளவர், 4, 8, 12-ம் பாவகங்களோடு தொடர்பு கொண்டிருந்தால் புத்திர பாக்கியத்துக்கு ஜாதகத்தில் இடமில்லை. தொடர்பிலிருக்கும் பாவகங்கள் 6 அல்லது 10 எனில் கர்ப்பத்தில் பல பிரச்னைகள் கண்டு புத்திரபாக்கியம் தாமதமாக வாய்க்கும்.

அதேவகையில் ஆண் ஜாதகத்தில், 5-ம் பாவக அதிபதி 4, 8, 12 பாவகத்தோடு தொடர்பு கொண்டிருப்பின் புத்திரபாக்கியம் இருக்காது. இந்தத் தொடர்பு பாவகங்கள் 3, 6, 10 போன்றவைகளாக இருப்பின் பல்வேறு பிரச்னைகளுக்குப்பின் சாவகாசமாய் புத்திர பாக்கியம் கிட்டும். மற்றபடி இந்தத் தொடர்பிலிருக்கும் பாவகங்கள் 1, 2, 5, 7, 9, 11 என்றால் மட்டுமே ஜாதகதாரருக்கு புத்திரபாக்கியம் நிச்சயம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஒருவேளை உங்கள் மகனின் ஜாதகப்படி புத்திர பாக்கியம் இல்லையெனினும், உங்கள் மகன் மற்றும் மருமகள் ஜாதகத்தின் கூட்டுப் பலனில் புத்திரபாக்கியம் கிட்ட வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கவும். அது சாதகமாக இருந்தால்... உங்கள் வீட்டில் குவா குவா கேட்கும்.. கவலை வேண்டாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
 
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
கேட்பவரெல்லாம் கேட்கலாம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு