கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிண்டிக்கு குடும்பத்துடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். அப்போது காசி தியேட்டர் ஸ்டாப் வர, "காசி எல்லாம் எறங்குங்க..." என்று சவுண்ட் கொடுத்தார் நடத்துனர். உடனே, எங்கள் வீட்டு வாண்டு, "பாட்டி... உன்னதான் சொல்றாங்க... சீக்கிரம் எறங்கு..." என்று பதற, அதை மதித்து விசில் கொடுக்காமல் பாட்டி இறங்குவதற்காக காத்திருந்தார் நடத்துனர். அவரிடம், ''நீங்க வண்டிய எடுங்க சார்... எங்க பாட்டி பேர் 'காசி'. அதனாலதான் அவங்களை நீங்க இறங்கச் சொல்றீங்களோனு நினைச்சுட்டு வாண்டு பதர்றான்...'' என்று நாங்கள் விளக்கம் கொடுக்க, டென்ஷன் மறந்து சிரித்துவிட்டார் நடத்துனர்.
- வே.அருணாதேவி, சென்னை-32
உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
'குட்டீஸ் குறும்பு,' அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002
|