Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!
வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150

''அடிச்சே... அப்பாகிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்!''

ஒருமுறை என் தம்பியைப் பற்றி, கணவரிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தேன். என் இளைய மகள் குறுக்கிட்டு, "அம்மா... நீ அன்னிக்கு மாமாவை கெட்டவங்கனு சொல்லி திட்டினே... இப்போ நல்லவன்னு சொல்ற..?" என ஒரு வருடத்துக்கு முன்பு பேசியதை நினைவு வைத்து என்னைக் கேட்க, திகைத்துவிட்டேன். மற்றொருமுறை, என் மாமியாரைப் பற்றி கணவரிடம் புலம்புவதை என் மகள் கவனித்திருக்கிறாள். ஆனால், அதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ஒருமுறை எங்கள் வீட்டுக்கு மாமியார் வந்திருந்த நேரம், அவளுடைய சேட்டை அதிகமாக

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

இருக்கவே... அவளை மிரட்டுவதற்காக அடிக்க வருவது போல பாவலா செய்தேன். உடனே, "என்னை நீ அடிச்சேனா... அப்பறம் பாட்டியைப் பத்தி அப்பாகிட்ட நீ சொன்னதையெல்லாம் நான் சொல்லிடுவேன்" என்றாளே பார்க்கலாம். விக்கித்துப்போன நான், நிலைமையைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

நீதி குழந்தைகளை வைத்துக்கொண்டு நல்ல விஷயங்கள் பேசுகிறோமோ இல்லையோ, புகார், புறணி என அற்ப விஷயங்களைப் பேச வேண்டாமே!

- சூர்யா, நெய்வேலி

அவசர ஆட்டோவை அப்போதே விரட்டுங்க!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

வெளியூர் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு குடும்பத்துடன் ஆட்டோவில் சென்றோம். ஆட்டோக்காரர் அதிக வேகத்தில் செல்ல, "ஸ்டேஷனுக்கு ரெண்டு கிலோ மீட்டர்தானே..? இன்னும் ஒரு மணி நேரமிருக்கு... ஒண்ணும் அவசரமில்ல!" என்றோம். அவரோ தொடர்ந்து அதே வேகத்தில் செல்ல, ஒரு பேருந்தில் மோதப்போய், நூலிழையில் தப்பித்தோம். மீண்டும் அதே பரபரப்பில் அவர் வண்டியை ஓட்ட, "ஏம்ப்பா... நாங்களே மெதுவா போகச் சொல்லும்போது உனக்கு ஏன் இந்த அவசரம்..?" என்று கொதிப்புடன் கேட்டோம். அவரோ, "மெதுவாப் போனா எம்பொழப்பு என்னாகுறது. சீக்கிரமா உங்கள எறக்கி விட்டுட்டு அடுத்த சவாரியப் புடிக்க வேணாம்? சும்மா பேசிக்கிட்டே இருக்காம கம்முனு வாங்க" என்று எகிறினார். உடனே ஆட்டோவை நிறுத்தி இறங்கிக் கொண்டு, பேசிய தொகையை கொடுத்துவிட்டு, வேறு ஆட்டோவில் ரயில் நிலையம் சென்றோம்!

நாங்கள் இந்த முடிவெடுக்க காரணம்... எங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்துதான். இப்படிப்பட்ட ஒரு பரபர ஆட்டோவில் சென்றபோது 'சடன் பிரேக்' போட்டதில் ஆட்டோ கவிழ்ந்து, தூக்கி வீசப்பட்டு, இடும்பு எலும்பு நொறுங்கி விட்டது அந்தப் பெண்ணுக்கு. அதனால், அவர் பட்ட பாடும், செய்த செலவும் சொல்லி மாளாது.

- நளினி ஜெயபால், மொடக்குறிச்சி

தகவல் சொல்லும் வேப்பிலை!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

ங்கள் குடியிருப்புக்கு புதிதாக குடிவந்திருந்த அந்த கன்னடக் குடும்பத்தை பார்க்கச் சென்றிருந்தேன். 'காலிங் பெல்' அடித்ததும் கதவைத் திறந்த அப்பெண்மணி, "உள்ளே வராதீர்கள்" என்றார் ஆங்கிலத்தில். நான் புரியாமல் திகைக்க, வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடி வரப்பார்த்த தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையை சட்டென்று கையில் தூக்கியவர், "குழந்தைக்கு அம்மை போட்டிருக்கு. அதனால்தான்..." என்றார். உடனே அங்கிருந்து திரும்பினேன்.

முன்பெல்லாம், இம்மாதிரியான சமயங்களில் வீட்டு வாசலில் வேப்பிலையை செருகி வைப்பார்கள். அதை ஏதோ... மூடநம்பிக்கையாகத்தான் பலரும் பேசிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், வெளியாட்களுக்கு தகவல் சொல்லும் நம் முன்னோரின் அறிவுநுட்பத்தை அன்றுதான் நேரடியாக உணர்ந்தேன்.

- ப்ரீத்தா ரங்கசாமி, சென்னை-28

தாலியைத் திருடிய பழுத்த சுமங்கலி!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

ன்று கார்த்திகை வெள்ளிக்கிழமை என்பதால், அம்மன் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிராகாரத்தைவிட்டு வெளியே வந்தபோது, எழுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். தண்ணீரை அவருடைய முகத்தில் தெளித்து, முதலுதவி செய்து "என்னாச்சு?" என்று விசாரித்தோம். "என் வயசு பொம்மனாட்டி ஒருத்தி விபூதி, குங்குமம் கொடுத்தா... பழுத்த சுமங்கலியா இருக்காளேனு வாங்கி நெத்தியில இட்டுண்டேன். அப்புறம் என்ன நடந்ததுனே தெரியல...' என்று திணறித் திணறிச் சொன்னவர், கழுத்தில் புதிதாக தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றைப் பார்த்து அதிர்ச்சியுற்று, 'அய்யோ... மோசம் போயிட்டேனே! ஆறு பவுன் தாலிக் கொடிய கழட்டிட்டு, இப்படி மஞ்சக் கயித்த கட்டிவிட்டிருக்காளே...' என்று அழ, கூட்டமே கூடிவிட்டது.

தாலியைத் திருடினாலும் சென்ட்டிமென்ட்டாக மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டிருந்த அந்த திருடியின் செயல், விநோதமாக இருந்தது. ம்... எப்படியெல்லாம் ஏமாத்த ஆரம்பிச்சுட்டாங்க!

- ஐஸ்வர்யா, சென்னை-33

புகைக்கும் ஓட்டுனரை ஓட்டுவது யார்?

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

'புகை பிடிக்கக் கூடாது' என்று பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். அன்று நான் சென்ற பேருந்தின் ஓட்டுனரே புகை பிடித்தபடி 'டிரைவ்' செய்துகொண்டிருந்ததுதான் கொடுமை. அருகில் நின்றுகொண்டிருந்த நான் உட்பட பயணிகள் பலரும் புகைப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தினோம். அவர், எதையுமே காதில் வாங்கவில்லை. மனதுக்குள் திட்டித் தீர்த்தவாறே அவரவர் நிறுத்தங்களில் இறங்கிப் போனோம். வீட்டுக்கு வந்தபின்தான் கவனித்தேன்... அவர் சிகரெட் பிடிக்கும்போது பறந்த தீப்பொறியில் என் சேலையில் ஓட்டை ஏற்பட்டதை! நல்லவேளையாக சேலையில் ஓட்டை விழுந்ததோடு தப்பித்தோம். வேறு ஏதாவது விபரீதம் நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

இத்தனைக்கும் பேருந்தில் புகைபிடிக்கக் கூடாது என்று சட்டம் போட்டு பலகாலம் ஆகிறது. ஆனால், இவரைப் போன்றவர்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. பேருந்துக்கு மட்டுமல்ல... பயணிகளின் உயிருக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை இதுபோன்ற ஓட்டுனர்களுக்கு யார் உணர்த்துவது?!

- சாந்தி ஜெயக்குமார், புதுக்கோட்டை

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
-
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism