Published:Updated:

வாசகிகள் பக்கம்

வாசகிகள் பக்கம்

வாசகிகள் பக்கம்

வாசகிகள் பக்கம்

Published:Updated:

வாசகிகள் பக்கம்
வாசகிகள் பக்கம்
வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சர்க்கரைப் பொங்கலுக்கு தொட்டுக்கொள்ள 4 ஸ்பூன் சர்க்கரை!"

ஏன் இந்த முதியோர் இல்லங்கள்?

ன் குடும்பம், தன் கணவர், தன் குழந்தை, தன் மனைவி என்ற சுயநலப் போக்குதான், இன்று முதியோர் இல்லங்கள் பெருகிப் போனதற்கு முழுக் காரணம். குடும்பத்துக்குள் பரஸ்பரம் புரிதல் இல்லாதபோது, முதியோர் இல்லங்களுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். அயல்நாட்டு படிப்பு, வேலை ஆகியவையும்கூட இத்தகைய இல்லங்கள் அதிகரிக்க உதவுகின்றன.

முதியவர்களின் அறிவுரைகள், வாழ்க்கை தத்துவங்கள் போன்றவற்றை இன்றைய தலைமுறையால் அக்கறையாகப் பின்பற்ற முடிவதில்லை. இதனால், தலைமுறை இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பாசம், அன்பு, நேசம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நல்லியல்புகள் தேய்ந்து வருகின்றன.

முதியவர்களும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல், பல விஷயங்களில் பிடிவாதம் பிடிப்பது குடும்பத்தினரின் வெறுப்பையே சம்பாதித்து தருகிறது.

தேவை... எல்லா தரப்பிலுமே மாற்றங்கள்!

- கிரிஜா நரசிம்மன், சென்னை-102

து... தனியார் நடத்தும் முதியோர் இல்லம். என்னுடன் சேர்ந்து இருபத்தைந்து பேர் இருக்கிறோம். சுற்றிலும் மனதை மயக்கும் மரங்கள்; பூத்துக் குலுங்கும் பூச்செடிகள்; மிகவும் வசீகரமாக, புத்தம் புதிதாக எப்போதும் மின்னும் சுத்தம்... இதுதான் அந்த இல்லம்.

வாசகிகள் பக்கம்

காலை 5.30 மணிக்கு காபி. 7.30 மணிக்கு டிபன். மதியம் 12.30 பகல் உணவு. மாலை 3 மணிக்கு டீ. இரவு 7. 00 டிபன்! பண்டிகைக் காலமா... அப்பளம், வடை, பாயசம் என்று விருந்தோ வியக்க வைக்கும். ஆனால்... உப்பு, காரம்தான் எப்போதும் மைனஸ்!

எல்லோருமே 60 ப்ளஸ். 85 வயதை எட்டிய இருவர் உள்ளனர். வயது ஏறினாலும் அவர்கள் வாய்க்கு ருசி மட்டும் வித்தியாசமாக இருக்கவேண்டும். ஒருவருக்கோ, சர்க்கரைப் பொங்கலுக்கே தொட்டுக்கொள்ள 4 ஸ்பூன் சர்க்கரை கேட்பார். எல்லாவற்றுக்கும் சர்க்கரை இருந்தால் போதும்... சப்புக்கொட்டிச் சாப்பிடுவார். இல்லாவிட்டால் எதுவும் உள்ளே இறங்காது.

மற்றொருவர் தண்ணீர் பிசாசு. நடுராத்திரியில் மழை பெய்யும் சத்தமோ என்று பார்த்தால் நம்ம ஆசாமி 'பைப்' திறந்துவிட்டு குளித்துக் கொண்டிருப்பார். பல் தேய்க்க, பிரஷ் செய்ய, வாய் கொப்பளிக்க, முகம் அலம்ப, சோப்பு போட்டு கை கழுவ தண்ணீரை செலவழிப்பதுடன், நெற்றியில் நாமம் போடுவதற்கு இரண்டு லிட்டர், அழிக்க இரண்டு லிட்டர். வழி நெடுகிலும் மலர்ப் பாதை போல், நீர் தெளிப்பு. ஆனால், இதுவரை ஜுரமோ, ஜலதோஷமோ வந்தது கிடையாது. இவர் போக்கைப் பார்த்து நமக்குத்தான் கண்ணில் ஜலம் கொட்டும். அமாவாசைத் தர்ப்பண நாள் வந்தால்... ஹோமே ஜலப்பிரளயத்தில் மூழ்கியிருக்கும்.

ஜானகி மாமி அப்படி இல்லை. காலை 6.15 மணிக்கு சங்கீத அப்பியாசம் ஆரம்பித்தால்... தொண்டை கட்டும் வரை சளைக்காமல் பாடுவார். 'எப்படி என் பாட்டு?' என்று கேட்டு, 'அதுக்கென்ன எம்.எஸ். தோற்றார்' என்று நாம் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அதற்கும் ஒரு பாட்டுப் பாடித் தீர்த்து விடுவார். மற்றபடி 'ஓ.கே'!

நம்ம சமையல் மாமா போக்கு வேறு மாதிரி. உப்பு போட மறந்ததைக் கூறினால், அவர் கத்துகிற கத்தலில் வாசலில் கூட்டமே கூடிவிடும். இவர் மனைவி லட்சுமியோ, ஒவ்வொருவருக்கும் பெரிய அடுக்களையிலிருந்து ஒவ்வொரு டம்ளராக காபியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் திருவாரூர் தேர் பவனிதான். அவர் காலில் ஆணி... என்ன செய்வார் பாவம்?

வாட்ச்மேன் பொன்னுரங்கம் விடற கதை எல்லாம், பிரபல எழுத்தாளர்களின் ஆன்மிகக் கதைகளில் வரும் சரடுகள் தோற்றுப் போகும்!

இங்கே வரும் டாக்டர், 'உங்கள் எல்லோருக்குமே பி.பி. நார்மல்' என்றுதான் எப்போதுமே சொல்வார். பி.பி. அளவு 80-130 ஃபிக்சட்.

ஆக, நாங்கள் எப்பவுமே ஓகே.

அப்ப நீங்க?

- எஸ்.ஜெயராம், அரண்வாயல்

'ஹாய் பாட்டி... ஹாய் தாத்தா..!'

ன்னுடைய பேத்தி ஸ்கூல் விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே 'ஹாய் பாட்டி, ஹாய் தாத்தா' என்று சொல்லிக்கொண்டே வருவாள். ஸ்கூல்பேக்கை அறையில் கொண்டு வைத்துவிட்டு வந்ததும் ஸ்கூல் யூனிஃபார்மைக்கூட மாற்றாமல் எங்கள் அருகில் உட்கார்ந்துகொண்டு, அன்றைய தினம் ஸ்கூலில் நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டுத்தான், அம்மா கொடுக்கும் பாலை பருகுவாள். கூடவே, 'நீங்க குடிச்சுட்டீங்களா?' என்று எங்களையும் விசாரித்து விடுவாள்.

இந்த சின்னச் சின்ன செயல்களாலேயே நாங்கள் பூரித்துப் போய் விடுவோம். என்னுடைய மகனும், மருமகளும் காட்டிய வழி இது! அவர்களுடைய அன்பு எங்களுக்கு அமுதமாக இருக்கிறது.

அலமேலு, கோவை-46.

வாசகிகள் பக்கம்

'முது'மை மொழிகள்!

ளமை, நம்பிக்கையில் வாழ்கிறது. முதுமை, நினைவுகளில் வாழ்கிறது - ஃபிரான்ஸ்

ளமையில் பட்ட அடிகள், முதுமையில்தான் உணரப்படுகின்றன - (வேல்ஸ், ஐரோப்பா)

சிறு வயதில் நீங்கள் ரோஜாப்பூவின் மீது படுத்திருந்தால், முதுமையில் முள்ளின்மேல் படுக்க வேண்டி வரும் - இஸ்ரேல்

னிதன் முதுமை அடைகிறான். நோய் இளமை அடைகிறது - எஸ்டோனியா

யோதிகர் ஒருவர் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு ரத்தினம் இருக்கிறது - சீனா

என்.ஜரீனா பானு, திருப்பட்டினம்.

முதியோர்களுக்கு... ஒரு முதியவளின் வேண்டுகோள்!

வாசகிகள் பக்கம்

வாழும் கலையறிந்து, மிச்ச சொச்ச காலத்திலும் வளமாக நாம் வாழவேண்டும் என்பதே இந்த 72 வயது முதியவளின் எதிர்பார்ப்பு.

பாலூட்டி, சீராட்டி வளர்த்த செல்வங்கள் தங்களுக்கென்று குடும்பம் அமைக்கும்போது, நம் அனுபவ அறிவைக் கொண்டு அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டுமே தவிர, நம்மையே அவர்கள் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்லதல்ல. அது இரு தரப்புக்குமே பாதகத்தைதான் உண்டாக்கும்.

வீட்டிலும், வெளியிலும் வேலை செய்து களைத்து விடும் இளைய தலைமுறைக்கு மன அழுத்தமும், சோர்வும்தான் இன்றைக்கு மிச்சமாக இருக்கிறது. இந்நிலையில்... நம்முடைய அணுகுமுறையில் கொஞ்சம் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கலந்து கடைபிடித்தால்... சூரியனைக் கண்ட பனித்துளி போல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் பிரச்னைகள்.

இளையதலைமுறையினரின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு, அவர்களின் நிம்மதியைக் குலைப்பதோடு... நம் நிம்மதியையும் ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் இஷ்டப்படி வாழவிடுவதில் நமக்கு என்ன நஷ்டம்?

நமக்கு மிகமுக்கியமாக வேண்டியதெல்லாம் இரண்டே இரண்டுதான்... உணவில் கட்டுப்பாடு, பேச்சில் கட்டுப்பாடு. உணவுக் கட்டுப்பாடு... நோயற்ற செல்வத்தையும், பேச்சுக் கட்டுப்பாடு... பெருமதிப்பையும் பெற்றுத் தரும்.

- எஸ்.எஸ்.கோமதி பிச்சுமணி, கோவை-25

வாசகிகள் பக்கம்
-
வாசகிகள் பக்கம்
வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism