"ஸ்கூல்ல படிக்கும்போதே நான் அத்லெட்டிக்ஸ்ல ஆர்வமா இருப்பேன். ஸ்கூல் பி.டி. மாஸ்டர்ஸான மோகன் சாரும், கந்தசாமி சாரும் ஊக்குவிக்க, ஸ்கூல் லெவல் காம்படிஷன்கள்ல பரிசுகள அள்ளிட்டு இருந்தேன்.
பத்தாவது படிக்குறப்ப... 'சென்னை, பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி'யில நடந்த ஒரு விளையாட்டுப் போட்டியில கலந்துகிட்டேன். அந்த அகாடமியோட 'கோச்' நாகராஜன் சார், என்னைக் கவனிச்சு, 'உனக்கு லாங் ஜம்ப் நல்லா வரும். முழு உழைப்பையும், கவனத்தையும் அதுல செலுத்து'னு ஆலோசனை சொன்னார். அதையே வேதவாக்கா எடுத்துட்டு பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். வெற்றி மேல வெற்றி தொடர்ந்துட்டு இருக்கு. ஸ்பெஷல் தேங்க்ஸ் டு நாகராஜன் சார்!"னு பரவசப்படற பொண்ணோட லேட்டஸ்ட் சாதனை, 'தேசிய பெண்கள் விளயாட்டுப் போட்டி'யில் லாங் ஜம்ப்பில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது. அடுத்து வரப்போற பாரா... டெடிகேட்டட் டு சுபாஷினியோட சாதனை லிஸ்ட்!
"மாநில அளவிலான போட்டிகள்ல பல சாம்பியன் பட்டங்கள வாங்கின நான், 2004ம் வருஷம் விஜயவாடாவுல நடந்த தேசிய அளவிலான போட்டியில பங்கேற்று, நாலாவது ரேங்க் வாங்கினேன். 2005ல பெங்களூருல நடந்த யூத் நேஷனல் போட்டியில வெண்கலம் வாங்கினேன். அடுத்தடுத்த வருஷங்கள்ல தேசிய அளவுல பல போட்டிகள்ல வெள்ளிப் பதக்கம், தங்கப் பதக்கம்னு முன்னேறினேன். 2006ம் வருஷம் 'ஸ்டேட் இண்டிவிஜுவல் சாம்பியன்ஷிப்' வாங்கினேன். மாநில அளவுல ஜூனியர் லெவல்ல, லாங் ஜம்ப்ல நான் தாண்டின 5.96 மீட்டர்தான் இப்போவும் ரெக்கார்ட்!"னு பெருமையோட சொன்ன சுபாஷினி,
"எனக்கு திருவண்ணமலைதான் சொந்த ஊர். அப்பா, போஸ்டல் டிபார்ட்மென்ட்... அம்மா, ஆசிரியை. ரெண்டு பேருக்கும் ஸ்போர்ட்ஸ்ல அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஆனா, என்னோட ஸ்போர்ட்ஸ் ரெக்கார்ட்ஸ§க்காகவே செயின்ட் ஜோசப் காலேஜோட டைரக்டர் பாபு மனோகர், எனக்கு ஃப்ரீ ஸீட் கொடுத்ததைப் பார்த்ததும்... பேரன்ட்ஸ§க்கு என் மேல அவ்ளோ பெருமை! இந்த பேரன்ட்ஸே இப்படித்தாம்ப்பா!"
அன்புடன் அலுத்துக்கொள்கிறார் சுபாஷினி!
|