Published:Updated:

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.100

'ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ!'

சிவப்பு ஷார்ட்ஸ் அணிந்திருப்பது என் மகன் ப்ரிய விக்னேஷ். கல்லூரியில் படித்துக் கொண்டே, 'மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி' முதலிடம் பெற்றிருக்கிறான்.

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

கறுப்பு ஷார்ட்ஸ§டன் நிற்பவர், அவனுடைய நெருங்கிய நண்பர் எம்.ராஜா. போலியோவால் ஒரு கால் ஊனமானவர். இருந்தும், உடல் ஊனமுற்றோருக்கான ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு 3 முறை 'மிஸ்டர் இந்தியா' கோல்டு மெடல், 4 முறை 'மிஸ்டர் தமிழ்நாடு' கோல்டு மெடலும் பெற்றுள்ளார். 35 வயதாகும் இவர், படகு பழுது பார்த்தல் தொழிலில் ஈடுபட்டு, திருமணமாகி ஒரு குழந்தையுடன் காசிமேட்டில் ஒரு குடிசையில் வசிக்கிறார். ஊனமுற்றோருக்கும் வானமே எல்லை என்பதை நிரூபிப்பவர்!

- தவமணி கோவிந்தராசன், சென்னை-1

'அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை...'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

ஷ்யாவிலிருந்து பிஹெச்.டி. செய்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்த ஹாலா என்ற பெண்மணியை, ஒருநாள் விருந்துக்காக வீட்டுக்கு அழைத்து வந்தார் என்னவர். ரசித்துச் சாப்பிட்ட அப்பெண்மணி, நம் கலாசார சேலையை உடுத்த விரும்பி, என்னுடைய காட்டன் சேலை, பொட்டு, டாலர் செயினை வாங்கி போட்டுக் கொண்டு, போட்டோவும் எடுத்துக் கொண்டார். ஊருக்கு எடுத்துச் செல்ல அதே கலர் சேலையை வாங்க கடை கடையாக ஏறி இறங்கியும் கிடைக்கவில்லை. பிறகு, என் சேலையையே ஞாபகார்த்தமாக கொடுத்தனுப்பினேன். மூன்று வருடங்களாக தவறாமல், வாழ்த்துக் கடிதம் அனுப்பும் அவருடைய அன்பை அளப்பரியது!

- ஐ.ரத்னா இளங்கோ, மதுரை-7

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

'செல்லக்குட்டி... எம்புஜ்ஜுக்குட்டி!'

ன் மகன் ராகவ் பதினோரு மாதக்குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோ. இப்போது ஒன்றாம் வகுப்பு படிக்கும் அவன் ஏதாவது ஓவராக குறும்பு செய்தால், இந்த போட்டோவைக் காட்டி, "இந்த சட்டையை எடுத்துட்டு, போட்டோவை எல்லார்கிட்டேயும் காண்பிச்சுடுவேன். அப்புறம் எல்லாரும் சிரிப்பாங்க" என்று கூறுவோம். உடனே, பயந்து அமைதியாகி விடுவான். விவரம் தெரியும் வரை... குறும்பைக் கட்டுப்படுத்த இதுதான் எங்களுக்கு ஆயுதம்.

- வி.நித்யா வெங்கட், நாமக்கல்

'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ...'

டலூர் - திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பெண்கள் மேனிலைப் பள்ளியில், 1982-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் நானும் (இடமிருந்து இரண்டாவது அமர்ந்திருக்கிறேன்), என் தோழிகள் எட்டுப் பேரும் எடுத்துக் கொண்ட போட்டோ. 27 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதன் பிறகு தோழிகளை சந்திக்கவேயில்லை.

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

ப்ளஸ் டூ முடித்தவுடன் கல்லூரியில் சேர்ந்தது நானும், விஜயலஷ்மியும்தான். இப்போது எல்லோரும் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ரொம்ப ஆவலாக இருக்கிறது.

அமர்ந்திருப்பவர்கள், இடமிருந்து...

கமலீஸ்வரி, கெஜலஷ்மி (நான்), காஞ்சனா, நீலா, விஜயலஷ்மி.

நின்று கொண்டிருப்பவர்கள் இடமிருந்து... கலைச்செல்வி, லதா, பொன்னி, கவிதா.

- எஸ்.கெஜலஷ்மி, விழுப்புரம்

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

'கொண்டையில் தாழம்பூ... நெஞ்சிலே வாழைப்பூ... கூடையில்?'

'சின்னத்தம்பி' திரைப்படம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த நேரம். தமிழ்நாட்டுக்கே குஷ்பூதான் ஃபேவரிட் ஹீரோயின். அந்த வருட நவராத்திரியின்போது எங்கள் வீட்டுக்கு புதிதாக வந்தவர்களில் சிலர், 'அட... உங்க பொண்ணு அச்சு அசலா குஷ்பூ மாதிரியே இருக்காளே' என்று வியந்தனர். 'இது எங்கள் மகளல்ல.. மகன் பாலாஜி' என்றதும், வியப்பில் வாயடைத்துப் போய்விட்டனர். அன்றைய தினம், ஆறு வயது மகனுக்கு ராதை வேஷம் போட்டு உட்கார வைத்திருந்தோம்!

- ஆர்.மாலதி, சென்னை-106

சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் உங்கள் வீட்டுப் பரணிலும் இருக்கிறதா? எடுங்கள் அவற்றை. சம்பவங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். (குறிப்பு கடிதத்தில் உங்களின் முழு முகவரி, தொலை பேசி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம். புகைப்படங்களை கண்டிப்பாகத் திருப்பி அனுப்ப இயலாது). முகவரி 'போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!' அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002

 

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
-
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism