"நான் ஒங்கள மாதிரியெல்லாம் கிடையாதுப்பா. ஒற்றுமையா உட்கார்ந்து நானும் என் மருமகளும் சீரியல் பார்ப்போம்"னு சுடிதார் போட்ட கே.ஆர்.விஜயா கணக்கா சுல்தானா மாற,
"ஏய்ய்ய்... அது எதுக்குனு எங்களுக்குத் தெரியாதா..?! சீரியல்ல எல்லாம் 'மருமகள கொல்லும் மாமியார்', 'மாமியாரை பலிவாங்கும் மருமகள்'னுதானே காட்டறாங்க. அதான்... உன்னைய விட்டுட்டு தனியா அவ மட்டும் அந்த ட்ரிக்கை தெரிஞ்சுக்கிட்டு, ஒருநாள் ஒரே போடா போட்ருவாளோனுதானே இந்த 'ஒற்றுமை' பிளான்?!"னு அக்யூஸ்ட்டை அடையாளம் காட்டினாங்க 'க்ரைம் பிராஞ்ச்' மூளை பிரின்ஸி (கீப் இட் அப்)!
"அதுல பார்த்தீங்கனா... கல்யாணம் ஆன புதுசுல பையன் தன்னோட புது பொண்டாட்டிக்கு வாங்கிக் கொடுக்கற அல்வால இருந்துதான் ஆரம்பிக்கும் மாமியார், மருமகளுக்கான கோல்ட் வார்"னு ஆரம்பிச்ச நந்தினி,
"அதுசரி... புதுசா கல்யாணம் ஆன ஆம்பளைங்க மனைவிமார்களுக்கு எதுக்கு அல்வா வாங்கிட்டு போறாங்க தெரியுமா?!"னு 'இன்வென்ஷன் ஆஃப் அல்வா கல்ச்சர்' பத்தி 'லேடி பாக்யராஜ்' ரேஞ்சுக்கு ஒரு சூப்பர் மேட்டர் சொன்னாங்கப்பா!
"புதுசா கல்யாணமான ஆம்பளைங்க ஆரம்பத்துல பொண்டாட்டிக்கு முறுக்கு, மிக்ஸர்னுதான் வாங்கிட்டுப் போனாய்ங்க. அதைத் திங்கற சத்தம் ராத்திரியில 'கறுக் மொறுக்'னு வெளியில உக்கார்ந்திருக்கற அம்மாமார்களுக்கு கேட்டு, 'நேத்து வந்தவ... என் பையன முறுக்கு வாங்கி கொடுக்கற கிறுக்கனா மாத்திட்டாளே... எம் புள்ள மாறிட்டானே...!'னு எல்லாம் சாமியாடியிருக்காங்க. நம்ம பயலுகளும் சுதாரிச்சு அல்வா வாங்கிட்டுப் போய் கொடுக்க, 'வலுக் வலுக்'னு அதைச் சத்தமில்லாம சாப்பிட்டிருக்காங்க பொண்ணுங்க (கேர்ள்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டீங்களா?!). அப்புடித்தான் வந்துச்சு இந்த அல்வா கல்ச்சர்(!)"னு நந்தினி முடிக்க, செம அப்ளாஸ்!
"வயசான காலத்துல நம்மளுக்கு என்னங்க வேணும்..? சின்னஞ்சிறுசுக... அதுக சந்தோஷந்தானே நம்மளுக்கு முக்கியம்...?"னு ஏதோ இப்பவே மாமியார் ஆயிட்ட மாதிரி பேசின வளர்மதி, "அதனால... நாம அவங்களுக்கு எந்தச் சுமையும் கொடுக்காம காசி, ராமேஸ்வரம்னு புண்ணியஸ்தலங்களப் பார்த்துட்டு, அப்படியே சிம்லா, டார்ஜிலிங்னு சுற்றுலா தலங்களையும் பார்த்துட்டு வரக் கிளம்ப வேண்டியதுதான்!"னு ரொம்ப நல்லவங்களாப் பேச,
|