அன்று வகுப்பு தொடர்பான வேலைக்காக கல்லூரிக்கு வெளியே செல்ல வேண்டி இருந்ததால், கல்லூரி வழக்கப்படி 'ஆன் டியூட்டி' என்று எழுதிய ஸ்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் எங்கள் பேராசிரியர். வேலை முடித்து நான் வகுப்புக்கு வந்தபோது, அதே பேராசிரியரின் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பாடத்தை முடித்து விட்டவர், "படிங்க..." என்று சொல்லிவிட்டு ஏதோ வேலையில் மூழ்கினார். பர்மிஷன் ஸ்லிப்பில் அவருடைய கையெழுத்துக்கு மேலே... 'என் சொத்து முழுவதையும் மாரியம்மாளுக்கு எழுதிக் கொடுக்கிறேன்' என்று எழுதி, வகுப்புத் தோழிகளிடம் சர்க்குலர் விட்டு சிரித்துக் கொண்டிருந்தேன் நான். ஒரு பென்ச்சில் சிரிப்பொலி சற்று அதிகமாகவே, "என்ன அங்க..?" என்று பேராசிரியர் எழுந்துவிட, உயிரே போய் விட்டது எனக்கு. அதற்குள் நல்லவேளையாக மணி அடித்துவிட, போன உயிர் திரும்பி வந்தது.
அதை, இப்போது நினைத்தாலும் பயம் கலந்து சிரிப்பு வருகிறது!
- எம்.மாரியம்மாள், தூத்துக்குடி
இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி
அனுபவங்களையும் எழுதி அனுப்பலாம்.
முகவரி 'ஃப்ளாஷ்பேக்',
அவள் விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை-600 002
|