Published:Updated:

அறுபதிலும் வெற்றி வரும்!

அறுபதிலும் வெற்றி வரும்!

அறுபதிலும் வெற்றி வரும்!

அறுபதிலும் வெற்றி வரும்!

Published:Updated:

அறுபதிலும் வெற்றி வரும்!
அறுபதிலும் வெற்றி வரும்!
அறுபதிலும் வெற்றி வரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறுபதிலும் வெற்றி வரும்!

ஷீலா தீட்சித்... 90-ம் ஆண்டு வரை அரசியல் பின்னணி கொண்ட, சாதாரண சமூக ஆர்வலராக மட்டுமே அறியப்பட்ட பெண்மணி. பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக 23 நாட்கள் சிறைபட்டபோது லேசாக இவரின் போர்க்குணம் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்த இவரின் போராட்டங்கள்... 1998-ம் ஆண்டு இவரை டெல்லியின் முதலமைச்சர் என்கிற பதவி வரை கொண்டு போனது. அப்போது இவருக்கு வயது சரியாக 60... தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் முதலமைச்சர்!

அறுபதிலும் வெற்றி வரும்!

சரோஜினி நாயுடு "நீங்களும் சாதாரண பெண்ணல்ல. எனவே, என்னை 'மகாத்மா' என்று அழைக்க வேண்டாம்'' என்று காந்தியே கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பெருமை படைத்தவர் 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு (இதனால், 'மிக்கி மவுஸ்' என்று அழைக்கும் அளவுக்கு காந்தியின் நட்பையும் பெற்றிருந்தார்). சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட முக்கியமான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது இவருடைய வயது அறுபதைக் கடந்திருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, 'இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்' என்ற பெருமையை பெற்றபோது 68 வயது!


அறுபதிலும் வெற்றி வரும்!

சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து, இந்தியரான ராஜீவ் காந்தியை மணந்து, இந்தியப் பெண்ணாக மாறியவர். ராஜீவின் திடீர் மறைவுக்குப் பிறகு 'காணாமலே போய்விட்டது' என்று கருதப்பட்ட காங்கிரஸை, மறுபடியும் கட்டியமைத்து, பல மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்தியிருப்பதோடு, அகில இந்தியாவையும் ஆளச் செய்திருக்கிறார். ஐம்பது வயது வரை கணவரின் (ராஜீவ் காந்தி) பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டவர், அறுபது வயதில் உலகின் சக்தி வாய்ந்த முதல் 10 பெண்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.


அறுபதிலும் வெற்றி வரும்!

அன்னி பெசன்ட் சுதந்திரத்துக்கு முன்பாக, 'சுய ஆட்சி' (self governence), 'குடியாட்சி' (people governence) போன்ற சொற்களைப் பயன்படுத்துவோர் மீது கண் வைத்த ஆங்கிலேய அரசு, அத்தகைய சொற்களை உபயோகப்படுத்தும் இந்திய இயக்கங்களைத் தடை செய்தது. இதனால்... ஆன்மிகம், தேசப்பற்று ஆகிய இரண்டையும் கலந்து, 'தன்னாட்சி இயக்கம்' (Home Rule Movement) என்ற பெயரில் சாதுர்யமாக மக்களிடம் சென்று, வெற்றியும் கண்டார் அன்னி பெசன்ட். அப்போது அவருக்கு வயது 67. அந்நியரான இவர், இங்கே வந்து 'தி கிரேட் உமன் ஆஃப் மார்டன் இண்டியா' என்ற பட்டத்தைப் பெற்றதோடு, 70-ம் வயதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் ஜொலித்தார்.


அறுபதிலும் வெற்றி வரும்!

வாங்காரி முதா மாத்தாய் 1940-ம் ஆண்டு கென்யாவில் பிறந்த மாத்தாய், ஒரு பசுமைப் போராளி. 40 வயது முதல் சுற்றுச் சூழலுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இவர், அதற்காக சுற்றிச் சுழன்றார். பசுமையைக் காக்கும் இவருடைய நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே தொந்தரவு கொடுத்ததுதான் கொடுமை. அதற்காக இவர் சளைத்துவிடவில்லை. அதிகாரம் கையில் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்று தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இணை அமைச்சராகவும் உயர்ந்தார். அப்போது இவருக்கு வயது 63. அடுத்த ஆண்டே பசுமைப் பணிகளுக்காக நோபல் பரிசு தேடி வந்தது!


அறுபதிலும் வெற்றி வரும்!

டோரிஸ் லெஸ்சிங் 1919-ம் ஆண்டு ஈரானில் பிறந்த, பிரிட்டானிய வம்சாவளிப் பெண் டோரிஸ். இலக்கியவாதியான இவர், தன்னுடைய 60 வயது வரை தன் எழுத்துக்காக வாங்கிய விருதுகள் இரண்டே இரண்டுதான். ஆனால், அதற்குப் பிறகு குவித்தவை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள்! அதில் முக்கியமானது இலக்கியத்துக்கான நோபல் பரிசு. 2007-ம் ஆண்டில் அதைப் பெற்றபோது அவருடைய வயது 80. மிக அதிக வயதில் இப்பரிசைப் பெற்ற சாதனையையும் சேர்த்தே செய்துள்ளார் டோரிஸ்


அறுபதிலும் வெற்றி வரும்!

கிரேஸ் ஹாப்பர் இன்றைய கம்ப்யூட்டர் மொழிகளின் பல்வேறு சாதனைகளுக்கும் முதல் காரணமாக இருக்கும் ஒரு சாதனை கண்டுபிடிப்பு 'கோபால்' (COBOL). 'கணிப்பொறியையும் மனித சிந்தனையையும் இணைக்க ஒரு மொழி வேண்டும்; அது ஆங்கில மொழியைப் போல எளிமையானதாக இருக்க வேண்டும்' என்று சொன்ன கிரேஸ் ஹாப்பர் தலைமையில் உழைத்த குழுவினர் உருவாக்கியதுதான் இந்த மொழி. அப்போது ஹாப்பரின் வயது 61. புகழ்பெற்ற 'நவி புரோக்ராமிங் லாங்குவேஜஸ்' குழும இயக்குநராக இருந்து, இச்சாதனையை இவர் மட்டும் படைக்காமல் போயிருந்தால்... பெண்கள் உடல் உழைப்பில் மட்டம் தட்டப்பட்டது போலவே, மூளை உழைப்பிலும் தட்டப்பட்டிருப்பார்கள்.


அறுபதிலும் வெற்றி வரும்!

மார்க்ரெட் தாட்சர் 'இங்கிலாந்து நாட்டின் ராணி மறைந்தால் என்ன மரியாதை வழங்கப்படுமோ... அதே மரியாதை, மார்க்ரெட் தாட்சர் மறைந்தாலும் வழங்கப்படும்' என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது அந்நாட்டின் அரசு. சாதாரண மளிகைக் கடைக்காரரின் மகளாகப் பிறந்த இவர், இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் எனும் அளவுக்கு உயர்ந்தார் தன்னுடைய அயராத உழைப்பால். தன்னுடைய வலிமையான ராணுவ நடவடிக்கைகளுக்காக 'இரும்பு மனுஷி' என அழைக்கப்பட்ட இவர், 60-ம் வயதில் மூன்றாம் முறையாக இங்கிலாந்தின் பிரதமரானார். இன்றும், உலகின் அதிக செல்வாக்குள்ள பெண்களின் வரிசையில் இவருக்குத்தான் முதலிடம்!

அறுபதிலும் வெற்றி வரும்!
-தொகுப்பு இரா.மன்னர்மன்னன்
அறுபதிலும் வெற்றி வரும்!
அறுபதிலும் வெற்றி வரும்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism