Published:Updated:

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

Published:Updated:

"முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை.."
நாச்சியாள்
முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..
முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் தரும் 'குளுக்கோஸ்'!

"எம்புட்டு காசு சேர்த்திருந்து என்னத்துக்கு ஆச்சு? கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை எல்லாம் கடைசி காலத்துல ஆஸ்பத்திரியில கொடுக்க வேண்டியதா இருக்கு..."

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

- இப்படி தன் அந்திம காலத்தில் புலம்பாத பெரியவர்கள் பாக்கியவான்கள்.

" 'நோயற்ற வாழ்வுதான் மிகப் பெரிய சொத்து. அந்த வாழ்க்கை வாய்க்க வேண்டுமானால் 40 வயதுக்கு மேல் உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, வாயு பண்டங்களை சாப்பிடாமல் இருப்பது, இனம் அறிந்து சேருவது, தவறான உறவு கொள்ளாமல் இருப்பது என்று எதையும் அளவோடு வைத்திருக்க வேண்டியது அவசியம்' என்றார் கவியரசு கண்ணதாசன். இதைத்தான் முதியோர் நலன் மருத்துவமும் சொல்கிறது" என்று ஆரம்பித்தார் சென்னை, பொதுமருத்துவமனையின் முதியோர் நலத்துறை டாக்டர் உஷா.

"பொதுவாக, ஒருவருக்கு வயதானால், அவர் நோயாளியாகிவிடுவார் என்று இங்கு முதியவர்களின் நலன் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. அதில் உண்மையில்லை. சொல்லப்போனால், முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஆரோக்கியமாக தங்கள் முதுமையை கழித்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம். ஆனால், கண்ணதாசன் சொன்னதுபோல நாற்பதில் சுதாரிக்கத் தவறியவர்களுக்கு, அறுபதில் சில சிக்கல்கள் எழலாம். அதேசமயம், அதற்கான சிகிச்சை, மருந்து, உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகளை மன உறுதியுடன் கடைபிடிப்பதன் மூலம் அதிலிருந்து மீளலாம்" என்ற டாக்டர், அந்த வழிமுறைகளை ஆலோசித்தார்.

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..

"சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு வயோதிகம் மட்டுமல்ல... வாழ்க்கை முறை, உணவு, பழக்கவழக்கங்கள், பரம்பரை என பல காரணங்கள் உள்ளன. ஆஸ்டியோ-ஆர்த்ரைட்டீஸ் எனும் மூட்டு வலி, கண்புரை நோய், காது கேளாமை, தூக்கமின்மை, அல்சைமர் (Alzheimer) எனும் மூளை அழற்சி போன்றவை முதுமையின் காரணமாக வருபவை.

பொதுவாக, ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ்கிறார்கள். ஆனாலும், பெண்களை மட்டும் சில நோய்கள் வயோதிகத்தில் 'ஸ்பெஷல் அட்டென்ஷன்' கொடுத்து தாக்குகின்றன. குறிப்பாக, ஆஸ்டியோபொரோஸிஸ் எனும் எலும்பு தேய்மானம், மூளைஅழற்சி, மன அழுத்தம்... இவை பெண்களை அதிக அளவில் தாக்குகின்றன.

பெண்களுக்கு 'மெனோபாஸ்' முடிந்ததும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பதும் நின்றுவிடுகிறது. எலும்பு திடமாக இருப்பதற்கு இந்த ஹார்மோன் அவசியமாதலால், அந்த வயதுக்கு மேல் அவர்களுக்கு எலும்பு தேய்மானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. இதனால் அடிக்கடி இடுப்பு வலி, முதுகு வலி வரும். அதிலும் மணிக்கட்டு, முதுகுத்தண்டு, இடுப்பு பகுதிகளில் வலி அதிகமிருக்கும். எதிர்பாராமல் கீழே விழுந்தால், எலும்பு உடைந்துகூட போகும்.

எலும்பு தேய்மான பிரச்னை 40 வயதிலிருந்துதான் ஆரம்பிக்கும். அப்போதே கால்சியம் சத்து மிகுந்த உணவுகளனான பால், சோயா, கேழ்வரகு, விட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள், கடல் உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக உடற்பயிற்சி செய்தால் இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். சிறுவயதிலேயே கர்ப்பப்பை, சினைப்பையை அகற்றியவர்கள், ஈஸ்ட்ரோஜன் சப்ளிமென்ட்டை டாக்டரின் அட்வைஸ்படி எடுத்துக்கொள்ள வேண்டும்" என்ற டாக்டர்,

" '75 வயதான அம்மாவைக் காணவில்லை, அப்பாவைக் காணவில்லை...' என்று வரும் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் 'அல்சைமர்' நோய். இதனால் மறதி முற்றிப்போய் 'எங்கு போகிறோம், என்ன சாப்பிட்டோம், நம் பெயரென்ன' எனும் அளவுக்கு அவர்களின் நினைவு பிறளும்.

இந்நோய் ஒருவருக்கு வந்துள்ளதா என்பதை பரிசோதித்துதான் தெரிந்துகொள்ள முடியும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, மூளையில் ஏதேனும் கட்டி வந்து அதை அகற்றும்போது ஏற்படுவது. இதைக் குணப்படுத்திவிடலாம். இன்னொன்று, வருடக்கணக்கில் டெவலப்பாகி முற்றிவிட்டிருப்பது. இதைக் குணப்படுத்தவும் இப்போது அட்வான்ஸ்டு மருந்துகள் வந்துவிட்டன. எல்லாவற்றையும்விட, இந்த மறதி நோய்க்கான முக்கிய மருந்து, குடும்ப உறுப்பினர்கள் தரும் பெரிய சப்போர்ட்..." என்றவர், பெண்களை அதிகமாகத் தாக்கும் மன அழுத்த நோய் பற்றிப் பேசினார்.

"கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்கள் பெருகும் இந்தச் சூழல், குடும்ப உறவுகளுக்குள் பிரச்னை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் பெண்களுக்கு, குறிப்பாக வயதான பெண்களுக்கு மன அழுத்தத்தை அதிகளவில் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர்களை மீட்க, முதலில் அவருடன் சேர்த்து வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். பிறகுதான் மருந்து வழங்கப்படும். இதிலிருந்து முதியவர்கள் விடுதலை பெற இன்னுமொரு எளிய வழி... குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஈகோ இல்லாமல் முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்து போவதுதான். வெளியே கோயில், நண்பர்கள் என சுற்றி வந்தால் மன அழுத்தம் குறையும்!" என்று சொன்ன டாக்டர் உஷா,

"நோய் வராமல் தடுப்பதும் ஒரு தற்காப்புக்கலைதான். அதற்கு, 45 வயதுக்கு மேல் பெண்கள் கண்டிப்பாக வருடத்துக்கு ஒருமுறை மார்பகப் புற்று, கர்ப்பப்பை புற்று, கர்ப்பவாய் புற்று இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை பொதுமருத்துவ பரிசோதனை செய்துகொள்வது பிரச்னைகள் வராமல் தடுக்கும், வந்திருந்தாலும் அதை ஆரம்ப கட்டத்திலேயே அறிவுறுத்தி அலர்ட் செய்துவிடும்.

எதையும் வருவதற்கு முன் தடுப்பதுதானே அவசியம்... புத்திசாலித்தனம்!" என்று நிறைவு செய்தார்.

முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..
-
முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..
முதுமைக்கும் நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism