Published:Updated:

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

Published:Updated:

"ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!"
ம.பிரியதர்ஷினி
ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!
ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உண்மைகளை உடைக்கிறார் நாராயண ரெட்டி

ம்பது வயது ஆகிவிட்டாலே... அந்தத் தம்பதிக்கு 'பிரைவஸி தேவையில்லை' என்பது இங்கு பெரும்பாலானவர்களின் எண்ணம். 'மீசை நரைச்ச கிழவனுக்கு ஆசை என்ன தேவையிருக்கு?' என்பது அந்த முதிர் ஜோடிகளை நோக்கிய நம் சமூகத்தின் கேள்வி. தங்களின் திருமணத்துக்குப் பின்பு, இருக்கும் அறைகளில் எல்லாம் தாங்கள் நிறைந்துகொண்டு, தங்களின் பொருட்களை நிறைத்துக்கொண்டு பெற்றோர் அறையையும் அந்தரங்கத்தையும் பறிப்பது, நம் குடும்பங்கள் வருந்தாமல் செய்யும் ஒரு விஷயம்!

"அது தவறு! அவர்களுக்கும் ஆசைகள், விருப்பங்கள், உணர்வுகள், ஏக்கங்கள் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்!" என்று முதியவர்களின் தாம்பத்யத்துக்கு நாம் வழிவிட வலியுறுத்திப் பேசினார் சென்னையைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி!

" 'என்ன பேசுறீங்க? அப்பா, அம்மாவுக்கு அறுபது வயசுக்கு மேல ஆகுது. இனிமே அவங்களுக்கு தாம்பத்யம் அவசியமா என்ன? பிள்ளைங்க நாங்க எல்லாம் தோளுக்கு மேல வளர்ந்துட்டோம். இப்போ போய் இத பத்தி..?' என்று எரிச்சலடைந்து கேட்பவர்களிடம் நான் ஒரு எதிர்கேள்வி வைக்கிறேன். முதுமையில் ஏன் தாம்பத்யம் கூடாது என்று நினைக்கிறீர்கள்? 'வயசாயிப் போச்சுல்ல..?' என்ற பிதற்றலைத் தவிர உங்களிடம் அதற்கான தெளிவான பதில் இருக்காது.

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

அந்தக் காலத்தில் கருத்தடை சாதனங்கள் மிகவும் குறைவு என்பதாலும், முதுமையில் கருத்தரித்துவிட்டால் அந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் அளவுக்கு உடல் தெம்பு இடம் கொடுக்காது என்பதாலும், வயோதிகத்தில் தாம்பத்யத்தை தவிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால், அதுவே காலப்போக்கில் 'முதுமையில் தாம்பத்யம் கூடாது' என்பதுபோல் நம் சமுதாயத்தால் கொள்ளப்பட்டு விட்டதுதான் இங்கு துரதிஷ்டம்..." என்ற நாராயண ரெட்டி,

"உங்களுக்கு ஒரு மருத்துவ உண்மை தெரியுமா..? ஆணுக்கும் பெண்ணுக்கும், அவர்கள் தாத்தா, பாட்டி ஆனால்கூட வாழ்நாள் இறுதிவரை தாம்பத்யம் அவசியம். தினமும் குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது போல தாம்பத்யமும் மனிதர்களின் இயல்பான தேவைதானே? அதற்கு ஏஜ் லிமிட் வைக்க நாம் யார்? முதுமை கண்ட உடல், தாம்பத்யத்துக்கு தகுதியானதல்ல என்பது, இங்கு நிலவும் அடுத்த பொய்யான பிம்பம். மனதில் ஆசையும் உடலில் ஆரோக்கியமும் இருக்கும் தாத்தாவும், பாட்டியும் தாம்பத்யம் கொள்ள எந்தத் தடையும் இங்கில்லை!" என்ற டாக்டர், அதுபற்றித் தொடர்ந்தார்.

"பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பி.பி., சுகர், ஹார்மோன் குறைபாடு, கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னைகள் போன்றவை ஏற்பட்டிருந்தால் தவிர, தாம்பத்ய எண்ணமும் அதற்கான தகுதியும் அவர்களுக்கு இறுதி வரை இருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலத்தை, தங்களின் தாம்பத்யத்துக்குமான முற்றுப்புள்ளியாக தாங்களே வலிந்து வரையறுத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறான எண்ணம்.

'மெனோபாஸ்' ஸ்டேஜில் பெண்களுக்கு உடல் வலி, மனச் சோர்வு, எரிச்சல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு மனதுக்குள் தாம்பத்ய எண்ணம் இருந்தாலும்கூட, உடல் அதற்கு இடம் கொடுக்காது. இந்த நேரத்தில் அவர்களின் இணை அவர்களைப் புரிந்துகொண்டு, அக்கால கட்டத்தை கடக்கும்வரை தாம்பத்யத்தை தள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், 'என் நிலைமையை புரிஞ்சுக்காம, என்ன மனுஷன் இவர்?' என்று அப்போது கணவனின் மேல் ஏற்படும் வெறுப்பு, பின் கடைசி வரை வெறுப்பாகவே தொடரும், தாம்பத்யம் மறுக்கப்படும்!" என்ற டாக்டர்,

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!

"சில பெண்களுக்கு கர்ப்பபை அகற்றப்பட்டு விடுவதால் ஹார்மோன் செயல்பாடுகள் இருக்காது. எனவே அவர்களுக்கு தாம்பத்யத்துக்கு வழவழப்பு தன்மையை கொடுக்கும் லூப்ரிகன்ட்ஸ§ம் சுரக்காது. இதனால் தாம்பத்தியத்தின் போது அதிக வலி ஏற்படும். இதனால்கூட சிலர் தாம்பத்யத்தை வேண்டாமென்று ஒதுக்கலாம். இவற்றுக்கெல்லாம் இப்போது செயற்கை தீர்வுகள்கூட வந்துவிட்டன. ஆக, பெண்கள் தலை நரைத்த பின்னும் தாம்பத்யம் கொள்ள, எந்தத் தடையும் இல்லை..." என்ற டாக்டர், அடுத்ததாக ஆண்களின் நிலைமை பற்றி விளக்கினார்...

"ஆண்களைப் பொறுத்தவரை எந்த நோய்களும் இல்லாது, ஆரோக்கியத்துடன் இருக்கும்பட்சத்தில் கடைசி காலம் வரை அவர்களால் தாம்பத்யத்தில் ஈடுபட முடியும். 'எழுபது வயது தாத்தாவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது' போன்ற செய்திகள் எல்லாம்தான் நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் கடக்கிறோமே?!" என்றவர், இன்றைக்கு இருக்கும் மருத்துவர்கள் பலருக்குமே இதைப் பற்றிய புரிதல் இல்லை என்பதை வேதனையோடு சொன்னார்.

"சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒரு பெரியவர் வந்தார். அதற்கு முன், தாம்பத்ய பிரச்னைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றிருக்கிறார். 'ஏன்யா... இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா?' என்று அவரை புண்படுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர். இப்படி ஒரு சில மருத்துவர்களே அடிப்படையான இந்த விஷயத்தை அசிங்கம் போல பேசும்போது, பின் பொதுமக்களின் மனநிலையை என்ன சொல்வது?

இப்படியாக அவர்களின் இயல்பான தேவை, சமூகத்தால் குற்றமாக பாவித்து மறுக்கப்படும்போது, அவர்களும் சில சூழ்நிலைகளில் குற்றவாளியாகின்றனர். 'பேருந்தில் தாத்தா பெண்ணிடம் சில்மிஷம்' என்று தங்களுக்கு வீட்டில் ஏற்பட்ட தாம்பத்ய தடுமாறலுக்கு வடிகால் தேடி, சமுதாயத்தில் அவமானச் சின்னமாகின்றனர். எனவே, அவர்களின் நியாயமான தேவைக்கு கடிவாளம் போடுவது, சமூகம் செய்யும் அநியாயம்!

அந்த காலத்தில் எல்லாம் அறுபது வயதான முதிய தம்பதிகளுக்கு, அதற்குப் பிறகும் அவர்களுக்கு வாழ்க்கை இருக்கிறது, சந்தோஷமும் இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொல்லத்தான் 'அறுபதாம் கல்யாணம்' போன்ற சடங்குகளையெல்லாம் எடுத்து நடத்தினார்கள்'' என்று சொன்ன டாக்டர் நாராயண ரெட்டி, அடுத்துச் சொன்னவையெல்லாம் ஆச்சர்யப் புதையல்தான்! அவை...

''கணவன் மனைவி இடையே எப்போதும் 'பர்சனல் டச்' இருந்துகொண்டே இருக்க வேண்டும். தாம்பத்ய திருப்தி முழுமையாக கிடைத்த தம்பதிகளுக்குள் எந்தவித சச்சரவும் ஏற்படுவதில்லை, வயோதிகத்தில் அவர்களுக்கு ஆரோக்கியம் நிலைக்கிறது, மார்பகத்தில் வருகின்ற டியூமர்கூட கேன்சராக மாறாமல் போய்விடுகிறது, ஆயுளும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன!"

 

ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!
-
ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!
ஐம்பதில் மட்டுமல்ல... எண்பதிலும் 'ஆசை' வரலாம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism