Published:Updated:

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

Published:Updated:

"சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்ல!"
ரேவதி, படங்கள் வீ.நாகமணி
சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!
சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தம்பதியின் உற்சாக வாழ்க்கை

ளம் வயதில் வியர்வை சிந்தி உழைத்ததை எல்லாம் பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், உறவுகள், நோவுகள் என பலதும் சிதறடித்துவிட, வயோதிகத்தில் பொருளாதார பாதுகாப்பில்லாமல் அல்லல்படும் முதியவர்கள் இங்கு ஏராளம். ஆனால், அந்தச் செலவுகளையும் மீறி சிக்கனமாகச் சேர்த்து, இன்று சௌகரியமாக வாழும் வயோதிக தம்பதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் ஒரு தம்பதி... சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி - அனந்தபத்மநாபன்!

முகம் கொள்ளா புன்னகை பூத்துக் குலுங்க, வார்த்தைகளும் உற்சாகமாக உதிர்ந்தன. "நாப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்ன எந்தப் பின்புலமும் இல்லாம, இருநூத்தி அம்பது ரூபா சம்பளத்துல சென்னைக்கு வேலைக்கு வந்த நான், மூணு பொண்ணுங்களையும் படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக்கொடுத்து, சொந்த வீடு கட்டி இப்போ நிறைவா செட்டிலாகியிருக்கேன்!"

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

- அனந்தபத்மநாபன் சொல்லப்போவது எளிமையான அவர்களின் வாழ்க்கையைப் பற்றிதான். ஆனால், அது நம் இளம் தலைமுறையினருக்கு திட்டமிடலும் சேமிப்பும் கைகோக்கும் வித்தையைச் சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்!

"எனக்குச் சொந்த ஊர் வடஆற்காடு மாவட்டம். அக்கா, தம்பி, தங்கைங்கனு நடுத்தர குடும்பத்துல பிறந்தேன். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதும், ஒரு ரூபாகூட இல்லாம சென்னைக்கு வந்த நான் இந்த அளவுக்கு இருக்க, உழைப்பு ஒரு காரணமா இருந்தாலும், நான் சிந்தின வியர்வை துளியையெல்லாம் மாலையா கோத்து, குடும்பத்துல இன்னிக்கும் மகிழ்ச்சி குறையாம நடத்திட்டு வர்ற பெருமை இவளைத்தான் சேரும்" என்று மனைவியைக் கைகாட்டினார்.

"சிக்கனம்னா வாயை கட்டி வயித்தக்கட்டிதான் சேமிக்கணும்னு இல்லை. அநாவசிய செலவுகளைக் குறைச்சுக்கிட்டாலே போதும். எனக்கு 18 வயசுல கல்யாணம். சிக்கனத்துல அம்மாவையும், சேமிப்புல மாமியாரையும் வழிகாட்டியா எடுத்துக்கிட்டு, வாழ்க்கையைத் தொடங்கினேன். 'கொடுத்த காசெல்லாம் வீட்டுக்கு செலவழிஞ்சுடுச்சு'னு வீட்டு ஆம்பளைங்ககிட்ட பொய் சொல்லிட்டு, டப்பா, தூக்குக்குள்ள எல்லாம் பணத்தைப் போட்டு வைப்பாங்க அவங்க. நானும் அவங்களைப் போலவே டப்பா, தூக்குகளை நிறைக்க ஆரம்பிச்சேன். இன்னிக்கு நாங்க நல்லாயிருக்கோம்!" என்றவரின் பேச்சைத் தொடர்ந்த அனந்த பத்மநாபன்...

"நாப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்ன லிக்நைட் கார்பரேஷன்ல வேலை கிடைச்சது. ரெண்டு வருஷத்துல கல்யாணம். அப்ப எனக்கு 250 சம்பளம். ஆனா, வீட்டு வாடகையோ 130 ரூபாய். அடுத்தடுத்து மூணும் பொண்ணா பிறந்துட, எப்படி சமாளிக்கப்போறோம்னு கதிகலங்கிப் போவேன். நேரம் காலம் பார்க்காம உழைப்பேன். அதுல கிடைச்சதையெல்லாம் சிதறிடாம என் மனைவி சேமிச்சாங்க. அதுதான் இந்த வீட்டுக்கான விதை" என்று வியந்து சொன்னார்.

இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கொல்லைப்புறம் என்று அளவோடு அருமையாக இருக்கிறது வீடு.

"மாதாந்திர செலவு போக மாசம் ஒரு சிறிய தொகையை சிட் ஃபண்டுல சேமிக்க ஆரம்பிச்சேன். 1980-ல 'வில்லிவாக்கத்துல ஒரு இடம் இருக்கு. வாங்கறீங்களா?'னு என் அப்பா கேக்கவும், 'மூணு பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு நிலத்துலயா பணத்தை போடறது..?'னு ரொம்ப யோசிச்சார். நான்தான் 'செலவு வந்துட்டேதான் இருக்கும். அதுக்கு நடுவுலயும் சுதாரிச்சு ஏதாவது முதலீடு செஞ்சுடணும்'னு முடிவா சொன்னேன். அப்ப அவருக்கு வந்த போனஸ் தொகையோட, என்னோட சேமிப்பு பணத்தையும் போட்டு இந்த இடத்தை வெறும் 5,000 ரூபாய்க்கு வாங்கினோம்!" என்று ராஜலட்சுமி சொன்னதும்,

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

"ஆபீஸ்ல லோன் கிடைக்கவே, 81-ல இந்த வீட்டைக் கட்டி, குடி வந்துட்டோம். லோனுக்கான தவணை... சாப்பாடு, படிப்பு செலவுனு நெருக்கிப் பிடிச்சது. அதையும், இவதான் அழகா சமாளிச்சா!" என்ற கணவரின் புகழ்ச்சியில் முக மலர்ச்சியுடன் தான் 'சமாளித்த' ஃபார்முலாவைப் பேசினார்ராஜலட்சுமி.

"தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் வீட்டுல எல்லாருக்கும் புது டிரெஸ். பெரியவ போட்டுகிட்ட டிரெஸ்ஸயே அடுத்தடுத்து வரிசையா போட்டுப்பாங்க. அதனால, துணிமணிகளுக்கு அதிக செலவில்லை. பொண்ணுங்க கேக்கற பதார்த்தங்களை வீட்டுலேயே செஞ்சு கொடுத்திடுவேன். அதனால ஹோட்டல் செலவும் இல்ல. எங்க பொண்ணுங்களும் கஷ்டத்தை புரிஞ்சு நடந்துகிட்டது, எங்களை சோர்வில்லாம முன்னேற வச்சது. பாட புத்தகத்தைகூட பழசை வாங்கித் தந்தாலும், வருத்தப்படாம, மூணு பேருமே ரொம்ப நல்லா படிச்சாங்க. காலேஜ் சேர்க்கணும்னா அதிகம் செலவாகும்னு புரிஞ்சுகிட்டு கரஸ்பாண்டன்ஸ்ல டிகிரியும் முடிச்சாங்க" என்றவரைத் தொடர்ந்தார் அனந்தபத்மநாபன்.

"98-ல எங்களுக்கு பென்ஷன் இல்லைனு தீர்மானமா தெரிஞ்சதும், 2000-ல வி.ஆர்.எஸ். வாங்கிட்டு வந்துட்டேன். அதுல வந்த பணம், இவளோட சேமிப்புகளைப் போட்டு ஒவ்வொரு பொண்ணுக்கா கல்யாணத்தை முடிச்சோம். கையில கணிசமா ஒரு தொகை மிஞ்சினதும், மாடில ஒரு போர்ஷனைக் கட்டி வாடகைக்கு விட்டு, மீதத்தொகையை வங்கில போட்டு வெச்சிட்டோம். வாடகையும், வட்டியும் எங்களை நிம்மதியா வாழ வெச்சிட்டிருக்கு!" என்று உற்சாகமாகச் சொன்னார்.

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!

நிறைவாக... "ஆடம்பர செலவுகளை குறைச்சு, சிக்கனமா இருந்து, சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருந்தவேண்டிய அவசியம் இருக்காது!" என்று தம்பதி சகிதமாக முடித்தார்கள்.

மூத்தோர் சொல் கேளீர்!

சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!
-
சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!
சேமிக்கப் பழகிட்டா... வயோதிகத்துல வருத்தமில்லை!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism