உயிலின் சிறப்பம்சமே... சம்பந்தப் பட்டவர், தன் வாழ்நாளில் அந்த உயிலை எத்தனை முறை வேண்டு மானாலும் மாற்றி எழுதலாம் என்பதுதான். உதாரணமாக, 'இனி பெருசுக்கு அப்புறம் சொத்து ஆட்டோமேட்டிக்கா நமக்கு வந்துடும்ல...' என்ற தைரியத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெற்றவர்களை/முதியவர்களை சரிவர கவனிக்காமல் விட்டாலோ, மரியாதைக்குறைவாக நடத்தினாலோ, துன்புறுத்தினாலோ, தாராளமாக உயிலை மாற்றி எழுதலாம்.
எப்போதும் உயில் எழுதுவதுதான் பாதுகாப்பானது. ஆனால், அதில் பாதுகாப்பான சில வாக்கியங்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும்" என்று அலர்ட் செய்த வழக்கறிஞர், அவற்றையும் விளக்கினார்.
" 'இந்த உயிலை யாரின் கட்டாயமும் இல்லாமல் என் விருப்பத்தின்படி, சுயநினைவுடன் எழுதுகிறேன்', 'இந்த உயிலை மாற்றவோ, ரத்து செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு', 'இந்த உயில் சாசனம் என் வாழ்நாளுக்குப் பின் அமலுக்கு வர வேண்டும்' என்பது போன்ற வாக்கியங்கள் உயிலில் முக்கியம். இவ்வாறு உயில் எழுதும்போது இரண்டு பேர் சாட்சியமாக கையெழுத்திட வேண்டும். எழுதிய உயிலை கையோடு பதிவு செய்துவிடுவது நல்லது" என்றவர், முதியவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றியும் விரிவாகப் பேசினார்.
"பெற்றோர் மற்றும் முதியோர் நலன், பராமரிப்புச் சட்டத்தை (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act) 2007-ம் ஆண்டில் மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாநில அளவில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மாவட்டம்தோறும் கிளைகள் அமைக்கப்படும். மாநில அளவில் இதன் தலைவராக, அரசின் முதன்மைச் செயலாளரும், மாவட்ட அளவில் கலெக்டரும் செயல்படுவார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சீனியர் சிட்டிஸன்கள் கணக்கெடுக் கப்பட்டு அதுகுறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். அவர்களின் சொத்து, வாழ்வாதாரத் துக்கான பாதுகாப்பு போன்றவற்றை அந்த காவல் நிலையம் உறுதிபடுத்தவேண்டும். மாதந்தோறும் இரு கான்ஸ்டபிள்கள் நேரடி யாகச் சென்று சீனியர் சிட்டிஸன்களை சந்தித்து, அவர்களுக்கு சொத்துக்கள் ரீதியாக, அக்கம்பக்கத்தினரின் அடாவடி காரணமாக எல்லாம் ஏதும் பிரச்னை இருக்கிறதா என்று கேட்டு அறிய வேண்டும். அப்படிச் செல்லும் போது ஒரு சமூக சேவகரையும் அழைத்துச் செல்லவேண்டும். ஏதேனும் பிரச்னை எனில், உரிய நடவடிக்கை எடுத்து உதவவேண்டும்.
பிள்ளைகள் தங்கள் பெற்றோரை வைத்து காப்பாற்றவில்லை என்றால், 'மெயின்டனென்ஸ் கொடுக்க வேண்டும்' என்று மாவட்ட தீர்ப்பாயத்தில் பெட்டிஷன் போடலாம். வாரிசு இல்லாதவர்கள், சொத்து யாருக்குச் செல்லவிருக்கிறதோ அவர்கள் மீது பெட்டிஷன் போடலாம். முன்பாக, சொத்துக்கள் இருந்தும் தங்களால் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்பதை அவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
|