Published:Updated:

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

Published:Updated:

ரேவதி, படங்கள் வி.செந்தில்குமார்
ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!
ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

திருவையாறு, தியாகராஜர் ஆராதனை என்றாலே... பிரபலங்களின் 'பஞ்சரத்னகீர்த்தனை' சங்கீத பிரியர்களின் காதுகளுக்கு இனிமையையும், நிறைவையும் அள்ளித்தரும். வருடந்தோறும் நேரில் சென்று ரசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தும், வசதியின்மை, நேரமின்மை மற்றும் சூழ்நிலைகளால் அந்த பாக்கியம் பலருக்கும் கிடைக்காமல் போவதுண்டு.

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

அந்த ஏக்கத்தைத் துடைக்கும்விதமாக, சென்னை, தி.நகரை 'திருவையாறு' போல இசை பூக்கச் செய்தது 'முத்ரா ஃபைன் ஆர்ட்ஸ்' நிறுவனம். அவர்களின் பதினைந்தாம் வருட இசை விழா நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் கடைசி நாளன்று இன்ஃபோசிஸ் ஹாலில் 'ஸ்த்ரீ பஞ்சரத்ன கீர்த்தனை' சிறப்பாக நடந்து கொண்டிருக்க, நிறுவனர் 'முத்ரா' பாஸ்கரிடம் பேசினோம்.

"நானும் என் மனைவி ராதாவும் சேர்ந்து இருபது வருஷத்துக்கு முன்னால இந்த நிறுவனத்தை தொடங்கினோம். நான் மிருதங்க வித்வான். என் மனைவி கர்னாடக சங்கீதத்துல டாக்டர் பட்டம் வாங்கியிருக்காங்க. முதல்ல நாலு மணிநேர கச்சேரி மட்டும்தான் வெச்சிருந்தோம். நல்ல வரவேற்பு கிடைக்க, டான்ஸ், டிராமா, பாட்டுனு நிறைய கலை நிகழ்ச்சிகளையும் வெவ்வேறு சபாக்கள்ல நடத்த ஆரம்பிச்சோம். 50 உறுப்பினர்களோட தொடங்கி, இன்னிக்கு 400 உறுப்பினர்கள் சேர்ந்திருக்காங்க" என்றார் உற்சாகத்துடன்.

மேடையில் ராதா பாஸ்கர் தலைமையில் மொத்தம் ஐம்பது பெண் இசைக்கலைஞர்கள் குழுவாகச் சேர்ந்து இசைத்த பஞ்சரத்ன கீர்த்தனை, கூட்டம் மொத்தத்தையும் தாளம் போட வைத்தது.

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

விழா முடிந்ததும், நம்மிடம் பேசிய டாக்டர் ராதா பாஸ்கர், 'திருவையாறுல முதன்முதல்ல நாகரத்தினம்மாதான் 'பஞ்சரத்ன கீர்த்தனை' ஆரம்பிச்சது. ஒரு பெண்ணோட அந்த முயற்சிய கவுரவிக்கற விதமாதான், இந்த வருஷம் 'ஸ்த்ரீ பஞ்சரத்தின' நிகழ்ச்சியையும் தொடங்கினோம்.

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!

பொதுவா பஞ்சரத்ன கீர்த்தனைனா ஒரு கட்டை சுருதிலதான் பாடுவாங்க. ஆண் பாடகர்களுக்கு இது ரொம்ப ஈஸி. ஆனா, பெண் பாடகர்களுக்கு மேல் ஸ்ருதில ஒரு அளவுக்கு மேல பாடமுடியாது. ஆனா, இங்க நாங்க எல்லாருமே பாடினது ஐந்து கட்டை ஸ்ருதிலதான். இந்த பஞ்சரத்ன கீர்த்தனையை ஆரம்பத்துலேர்ந்து முழுமையா கேட்டு ரசிக்க முடியும். நாங்க நினைச்ச மாதிரி ஆண்டவன் அருளால சிறப்பா நடந்தேறிடுச்சு!" என்றார் பெருமையுடன்.

ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!
-
ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!
ஐந்து கட்டை ஸ்ருதியில்... அசத்திய ஐம்பது பெண்கள்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism