Published:Updated:

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

Published:Updated:

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!
குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!
குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனனி

ராணி மகாராணி, குயின் எலிஸபெத் பாட்டி... பிரிட்டன் அரச குடும்பத்தின் பெண் ஆளுமை!

ஐம்பத்தி ஏழு வருடங்களாக அரியணைக் கட்டிலில் இருக்கும் எண்பத்தி மூன்று வயது வெள்ளை ரோஜா!

நான்கு பிள்ளைகளையும், எட்டு பேரன், பேத்திகளையும் கண்டுவிட்ட மூன்றாம் தலைமுறை மூத்தாள்!

எலிஸபெத்தின் வாழ்க்கை பக்கங்கள் அனைத்தும் உலகப் பத்திரிகைகளுக்குச் செய்தி. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரச குடும்பத்து வரலாற்றை எடுத்துச் செல்லும் தொடர் தீபம் அவர். அதனாலேயே பிள்ளைப் பருவம் முதலே எலிஸபெத்தை சுற்றிவிட்டது பரபரப்பும் எதிர்பார்ப்பும்.

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

அவர் பிறந்தபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகச் செல்வாக்குடன் செழித்துக் கொண்டிருந்தது. பின் அனைத்து நாடுகளிலும் எழுந்த முக்கிய அரசியல் மாற்றங்களால், அதன் செல்வாக்கு சில படிகள் சரிந்தது. குறிப்பாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவர்களின் ஆளுமை 'யுனைடெட் கிங்டம்', ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா என சுருங்கியது.

இந்த அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே வளர்ந்த எலிஸபெத், தன் பதின்மூன்றாவது வயதில், கிரேக்க சிற்றரசர் வழித்தோன்றலான பிரின்ஸ் ஃபிலிப்பின் காதலையும் உள்வாங்கிக் கொண்டார். இருபத்தி ஒன்றாம் வயதில் காதலனை கைபிடித்தார் இளவரசி. இந்தக் காதல் கல்யாணத்தில் கலகங்கள் நடந்தது தனிக்கதை!

எலிஸபெத்தின் அப்பா கிங் ஜார்ஜுக்கு இரண்டு இளவரசிகள். அவரால் அரசாளப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஜார்ஜின் மறைவுக்குப் பின் மூத்த மகளான எலிஸபெத் தலையில் கிரீடமானபோது, வயது இருபத்தி ஆறு! உலகம் எதிர்பார்த்தது போல பெயருக்கு அரச பதவி எடுத்துக் கொள்ளவில்லை எலிஸபெத். தங்கள் அரச நிழலின் கீழ்வரும் தேசங்களின் முன்னேற்றங்களுக்கு, அரண்மனை தரப்பிலிருந்து அனைத்து ஆக்கபூர்வ உதவிகளையும் முயற்சிகளையும் வழங்கினார்.

தேசம் தேசமாக தன் கணவருடன் சென்றவரை பார்க்க, பயண வழிகளில் எல்லாம் திருவிழா கூட்டம் கூடியது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கிட்டத் தட்ட 75 சதவிகித மக்கள் அவரின் நேரடி தரிசனம் கண்டனர். ஒருகட்டத்தில், ஒரு நடிகையைப் பார்ப்பது போன்ற குறுகுறு ஆவலுடன் கூட்டம் குவிய, அது அவருக்கு சங்கடத்தை தந்தாலும் தொடர்ந்து பயணப்பட்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில், பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு வாரிசுகள் அதற்கு முன் இப்படி வெளியுலகப் பறவையாக இருந்ததில்லை.

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

எலிஸபெத்தின் பர்சனல், அதிக சலசலப்புகள் இல்லாதது. மீடியாவிடம் அதிகம் பேசாத அவரின் எண்ணங்களும், ஆசைகளும் சிறிதளவே அறியப்பட்டிருக்கிறது. அவரின் அலங்கார ரசனை, அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. பிரின்ஸஸ் ஃப்ராக், அடர் நிற ஓவர்-கோட், தலையில் அலங்காரமான கிரீடம் அல்லது தொப்பி... இவைதான் அவரின் பிராண்டட் பிம்பம்!

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!

ஆழமான ஆன்மிக நம்பிக்கை உடையவர். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை எந்தச் சார்பும் இல்லாத நியூட்ரல் கிரிஸ்டல். அதனால்தான் முக்கிய வல்லரசுகளை ஆண்ட எந்தக் கட்சியின் அதிபர்களுடனும் நட்பைத் தொடர முடிந்தது அவரால்! குறிப்பாக, அமெரிக்க அரசியல் வரலாற்றின் பதினோரு ஜனாதிபதிகளும் எலிஸபெத் ஏற்படுத்திக் கொண்ட சுமுக நட்புறவு, அவருக்கான ப்ளசன்ட் அனுபவம்! கூடவே, மரியாதை நிமித்த சந்திப்புகளின்போது ட்ரூமேன் முதல் ஒபாமா வரை கிட்டத்தட்ட அந்த நான்கு தலைமுறை நாட்டாமைகளுடன் இந்த அரசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நமக்கான விஷூவல் ட்ரீட்!

அறுபத்து மூன்று ஆண்டுகளாக 'கல்யாண நாள்' கொண்டாடி வரும் எலிஸபெத் - ஃபிலிப் தம்பதி, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ரெக்கார்ட் பிரேக்! அவர்களின் நான்கு வாரிசுகளில், மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. அவர் சிம்மாசனம் ஏறிய இருபத்தி ஐந்தாம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் வரை ஜொலித்துக்கொண்டிருந்த பக்கிங்ஹாம் பேலஸின் மரியாதை, எண்பதுகளின் தொடக்கத்தில் எலிஸபெத்தின் வாரிசுகளுடைய பர்சனல் வாழ்க்கை மீடியாக்களால் கொத்திக் கிளறப்பட்டபோது, சரிந்தது. குறிப்பாக, மூத்தவரான சால்ஸ், டயானாவை மணந்தது, மண வாழ்க்கை முறிந்தது, விபத்தில் டயானா இறந்தது, சார்லஸ் மறுமணம் செய்துகொண்டது என்று சில காலத்துக்கு உலக மக்களின் பொழுதுபோக்குக்கு தீனியானது பங்கிங்ஹாம் சங்கதிகள்.

அவை படிப்படியாக தணிந்து, எட்டு ஆண்டுகளுக்கு முன் அவரின் தங்க விழா கொண்டாட்டத்தின்போது அமைதியை மீட்டெடுத்தது அரண்மனை!

அனுபவப் புன்னகையுடன் அதை ஆண்டுகொண்டிருக்கிறார் குயின் எலிஸபெத் பாட்டி!

குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!
-
குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!
குயின் எலிஸபெத்... நடமாடும் ஒரு வரலாறு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism