Published:Updated:

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

Published:Updated:

"வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!"
ஷக்தி, படங்கள் தி.விஜய்
வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!
வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

67 வயதில் அசத்தும் பிஸினஸ் பாட்டி

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

"என் செல்ல பொண்ணுங்களுக்கு பஜ்ஜி, வடை ரெடி பண்ணிட்டிருந்த அதே கைதான் இன்னிக்கு கார்களுக்கு வீல் அலைன்மென்ட் பார்க்குது, ட்யூப்ல ஏர் ஃபில் பண்ணுது, டயர் குவாலிட்டி செக் பண்ணுது. இவ்ளோ தைரியம் எப்படி வந்துச்சு தெரியுமா? அத்தனையும் என் முதுமை கொடுத்த பலம்தான்! வயசு ஆக ஆக நான் ரொம்ப ஹெல்தியா ஃபீல் பண்றேன்"

- முரண்பாடான வார்த்தைகளில் ஒரு புதிய தத்துவம் சொல்லிச் சிரிக்கிறார் லஷ்மி ராமச்சந்திரன்.

அம்மாவையும், அப்பாவையும் ஒரு சேர கணவர் உருவில் பார்க்கும் வரம் சில பெண்களுக்கு கிடைப்பதுண்டு. கை பிடித்த நொடியிலிருந்து வாழ்க்கை நெடுக மலரினில் மட்டுமல்ல... முள்ளிலும் சாமர்த்தியமாக நடக்க கற்றுத்தரும் கணவன்கள், வரம். ஆனால் அந்திமக் காலத்தில் அந்த உறவு அறுந்து உயரே பறந்துவிட, அத்தனை வருடங்கள் தனக்கு வேராக இருந்த அந்த உயிரைப் பிரிந்து, அதன் இணை உயிர் படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 'ஏதோ நடைபிணமாதான் வாழ்ந்துட்டு இருக் கேன்' என்று எத்தனையோ பெண்கள் உடைந்து போய் பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.

ஆனால், " 'அவருக்குப் பிறகும், ஆயிரம் மடங்கு நம்பிக்கையோட இருக்கேன்'னு சொல்லும் படியா வாழுறதுதான், என் கணவருக்கு நான் செய்ற உண்மையான மரியாதை!" என்று அழுத்திச் சொல்வதோடு, அப்படியே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த லஷ்மி ராமச்சந்திரன்.

கோயம்புத்தூரிலிருக்கும் ராமநாதபுரம் சிக்னலை தொட்டபடி இருக்கிறது 'டயர் ஸ்பா' ஷோரூம். கார்களுக்கான டயர் தொடர்பான விஷயங்கள் அத்தனையும் டோட்டலாக டீல் செய்யும் இந்த நிறுவனத்தின் கேப்டன், படு சாஃப்ட்டான லஷ்மிதான். அறுபத்தியேழு வயதாகும் லஷ்மி, ச்சும்மா சொல்லக் கூடாது... தான் கால் எடுத்து வைத்திருக்கும் டயர் பிஸினஸில் பின்னிப் பெடலெடுக்கிறார். நொடிக்கு நொடி உற் சாகமாகச் சுழலும் லஷ்மியிடம் 'எப்படி... இப்படி?' என்று கேட்க, பழைய நினைவுகளில் மெள் ளக் கரைகிறார்.

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

"இதுதான் எனக்குச் சொந்த ஊர். கணவர், காலேஜ்ல லெக்சரர். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிருந்த எனக்கு, எல்லா விஷயங்களையும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். அதேசமயம், அவருக்குத் தெரியாத விஷயங்களை எங்கிட்ட எந்த ஈகோவும் இல்லாம கேட்டுப்பார். ரெண்டு பெண் குழந்தைங்களோட அருமையா இருந்துச்சு வாழ்க்கை. அவரோட பணி நிமித்தமா... பத்து வருஷம் கேரளா மாநிலம் கோழிக்கோடுலயும், இருபத்திரண்டு வருஷம் கோவாவுலயும் இருந்தோம். கோவாவுல இருந்த நேரத்துல பெயின்ட்டிங், டிராயிங், எக்ஸ்ட்ரா ரெண்டு லாங்க்வேஜுனு எல்லாத்தையும் கத்துக்க சொல்லி உற்சாகப்படுத்திட்டே இருப்பார். சொல்லப்போனா, அவருக்கு நான் மனைவியா மட்டும் இருக்கக்கூடாது, எதையாவது கத்துட்டே இருக்கற மாணவியாவும்தான் இருக்கணும்னு விரும்புவார்.

எங்க பொண்ணுங்களுக்கு கல்யாணமாகி வெளிநாட்டுல செட்டிலானாங்க. மறுபடியும் நாங்க கோயம்புத்தூருக்கே வந்து செட்டிலான பிறகும்கூட, 'கம்ப்யூட்டர்ல பொண்ணுங்களுக்கு மெயில் அனுப்ப கத்துக்கோ. நாளைக்கு இந்த மெயில் கலாசாரம்தான் உலகத்தையே ஆட்டிவைக்க போறது'னு சொல்லித் தந்தார். இப்படி எனக்கு பல வித்தைகள் கத்து தந்த என் ஆதர்ச குரு, பத்து வருஷங்களுக்கு முன்னாடி மூளையில ஏற்பட்ட பிரச்னையால, மறைஞ்சுட்டார். நான் நிலைகுலைஞ்சு போயிட்டேன்" என்று சொல்லி கலங்கியவர் சட்டென்று சுதாரித்தபடி,

"கிட்டத்தட்ட ஒரு வருஷம் துக்கத்துல இருந்தேன். அப்புறம் 'எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், இழப்புகள் வந்தாலும் கடைசி வரை நின்னு போராடி, வெல்ல பிறந்தவன்தான் மனுஷன். அதனால எழுந்து நட, ஓடு'னு நான் சோர்ந்தபோதெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் என் காதுல ஒலிச்சது.

இந்த நேரத்துலதான், டயர் தயாரிப்பு கம்பெனியில வேலை பார்க்கிற என் மூத்த மருமகன் இங்கே வர்றப்பவெல்லாம், என்னோட தனிமையை உடைக்க, என்னை கலகலப்பாக்க ஏதாச்சும் பேசிட்டே இருப்பார். குறிப்பா, டயர் பிஸினஸோட சுவாரஸ்யங்களைப் பேசுவார். அந்த பிஸினஸ் பற்றிய தகவல்கள் எனக்கு ஆர்வம்தர, ஒரு கட்டத்துல அதைப் பத்தின விஷயங்களை அவருக்குச் சமமாக நானும் பேசுற அளவுக்கு முன்னேறினேன். 'அட... கிட்டத்தட்ட ஒரு எக்ஸ்பெர்ட் ஆயிட்டீங்களே? பேசாம கோவையில ஒரு டயர் டீலிங் ஷோரூம்-ஐ ஓப்பன் பண்ணிடுங்களேன்'னு அவர் விளையாட்டா சொன்னார். எனக்கோ... தனிமையில கிடக்கற என் மனசுக்கும் மூளைக்கும் ஒரு நல்ல தீனியா இருக்கும்னு தோணுச்சு. அவரோட உதவியோட ரெண்டு வருஷத்துக்கு முன்ன இந்த ஷோரூமை ஆரம்பிச்சேன்!" என்றவருக்கு அப்போது வயது 64. அதன் பின்தான் பக்கா புரஃபஷ னலிஸ்ட் ஆகியிருக்கிறார்!

"காலம் போன காலத்துல இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து, அதுல தோத்துடக்கூடாதேங்கற பயம்தான் ஆரம்பத்துல என்னைத் துரத்தி துரத்தி இயக்குச்சு. ஷோ ரூம்ல பியூன் வேலையில தொடங்கி, கல்லா வரைக்கும் எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டு செஞ்சேன். வேலைக்கு ஆள் இருந்தாலும், டயர் பேலன்ஸ் பார்க்குறது, பிரேக் செக் பண்றது, நைட்ரஜன் ஏர் அடைக்குறதுனு எல்லாத்துலயும் 'எங்க, எப்படி..'ங்கற அடிப்படை விஷயங்களை நானும் கத்துக்கிட்டேன். வேலைக்கு இருக்குற பசங்க எங்கேயாவது வெளியில போயிருந்தா... சட்டுனு டயர்ல காத்தை ஃபில் பண்ண இறங்கிடுவேன்.

இதை வெறும் பிஸினஸ் சென்டரா மட்டும் ட்ரீட் பண்ணாம, ஒரு ஹோம்லி லுக் கொடுத்திருக்கேன். சாய்ஞ்சு இளைப்பாற சோஃபா, பொழுதுபோக்க டி.வி-னு கஸ்டமர்களை கூல் பண்ற எல்லா அம்சங்களும் இங்கே இருக்குது. பிஸினஸை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துல அணுகி இருக்கிறதால நிறைய பேர் எங்களைத் தேடி வர்றாங்க. நான் இந்த பிஸினஸ§ல ஜெயிச்சதுக்கு முக்கிய தூண்கள், என்னோட நாலு ஸ்டாஃப்களும்தான். இந்த வெற்றி தர்ற உத்வேகத்துல இன்னும் நாலஞ்சு ஷோரூம் ஓப்பன் பண்ற ஐடியா இருக்குது. அதுல பெண்களுக்கு வேலை தர்ற எண்ணமும் இருக்குது" என்றவரை இடை மறித்து 'இந்த முதுமை உங்களுக்கு பாரமாவே தோணலையா?!' என்றோம் வியப்புடன்.

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!

"எனக்கு என்ன வெறும் அறுபத்தியேழு வயசுதானே ஆகுது?! இன்னும் சாதிக்க நிறைய இருக்கு. 'நமக்கு வயசாகிடுச்சே, லேசா தலைசுத்துற மாதிரி இருக்குதே'னு கவலைப்பட்டுட்டே இருந்தாதான் கூடுதலா முடங்கிப் போவோம். ஆனா, அப்படி கவலைப்படவெல்லாம் எனக்கு நேரமே இல்லை. 'காலையில பேங்க்ல பணம் கட்டணும், எக்ஸ்ட்ரா டயர் ஆர்டர் கொடுக்கணும், அடுத்த பிராஞ்ச்க்கு நல்ல இடம் பார்க்கணும்'னு ஓடிட்டே இருக்கேன். இதுக்கு நடுவுல ஃப்ரீ டைம் கிடைச்சா தஞ்சாவூர் ஓவியங்கள் வரையுறது, நிப் பெயின்ட்டிங் பண்றது, 'அவள் விகடன் சப்ளிமென்ட்ரி'யை பார்த்து வெரைட்டியா சமைக்கிறதுனு கொஞ்சம் கூல் பண்ணிப்பேன். இவ்ளோதான் இந்த லஷ்மி.

கண்ணு... இருக்குறதோ ஒரே வாழ்க்கை... அதுல என்ன சோர்வு வேண்டி இருக்கு? துள்ளி வாங்க... சாதிக்க எவ்வளவோ இருக்குது!" என்றபடி அடுத்த காரை வரவேற்க நகர்கிறார் லஷ்மி.

முதுமை ஊஞ்சலாடுகிறது... உற்சாகமாக!

 

வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!
-
வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!
வயதை விரட்டினேன்... வெற்றியை அள்ளினேன்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism