டாக்டர் வீணா ஜெகராம், மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர், திருச்சி
''பெரியவர்களையே அவதிக்குள்ளாக்கும் அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் பிஞ்சு சிசு பிறந்து சிரமப்பட வேண்டாம் என்ற அக்கறையை ஒட்டித்தான் அப்படியரு கருத்து உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. பொதுவாக அதிக உஷ்ணமான சூழல், பச்சிளம் குழந்தை தேகத்தின் 'நீர் இருப்பை' பாதிக்கும். 'டிஹைட்ரேஷன்' (Dehydration) எனப்படும் நீர் இழப்பும், மூச்சுக்காற்றின் உஷ்ணமும் குழந்தைக்குச் சிரமத்தை தரும். அம்மை உள்ளிட்ட வெக்கை நோய்கள் பரவும் காலமும் அதுதான் என்பது பெரியவர்களின் கவலைக்குக் கூடுதல் காரணமாக இருக்கலாம்.
தாயின் உடல் எந்த சீதோஷ்ண நிலைக்கும் ஈடுகொடுக்கும் வகையில் உரிய போஷாக்கும் பராமரிப்பும் இருந்தால்... குழந்தை பிறப்பு எந்த மாதத்திலிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை (பிறப்புறுப்பில் சிறு தையலை மேற்கொண்டவர்களுக்கு வியர்வையால் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்க, சுகாதார பராமரிப்பும், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையோடு உரிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதுமே போதுமானது).
|