Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
படம் து.மாரியப்பன்
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"படிக்கும்போது எட்டிப் பார்க்கும் சோர்வு... இதற்கு என்னதான் தீர்வு?"

''ப்ளஸ் டூ தேர்வுக்குத் தயாராகிவரும் என் மகள், திடீரென்று படிப்பில் சுணக்கம் காட்டுகிறாள். வழக்கமாக பள்ளியின் டாப் மாணவிகளுள் ஒருத்தியாக வளர்ந்து வந்தவள், சில மாதங்களாக ரிசல்ட்டில் சொதப்புகிறாள். கவனக்குறைவு, உடல் சோர்வு, ஞாபக மறதி, அடிக்கடி மனமும் சோர்ந்து போவது போன்ற சிரமங்களை அடையாளம் காண்கிறேன். டாக்டர் பரிந்துரைத்த எனர்ஜி டிரிங்க் உள்ளிட்ட பராமரிப்புகளால் எதிர்பார்த்த பலன் இல்லை. இதற்கு தீர்வு கிடைக்குமா?''

சேலம், ஜெயலட்சுமியின் இந்தக் கேள்விக்கு... வேலூர், ஊட்டச்சத்து நிபுணர் அனிதா தங்கதுரை பதில் தருகிறார்...

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

"வளரிளம் பருவத்தினரின் ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவுகளின் குறைபாட்டால் ரத்தசோகை, சோர்வு, பசியின்மை, கவனக்குறைவு, முடி கொட்டுவது மற்றும் தூக்கம் தூக்கமாக வரும். ஆனால், தூங்கிய திருப்தி இல்லாதது போன்ற சிரமங்கள் தோன்றும். இதற்கு மருத்துவ சிகிச்சையைவிட ஊட்டச் சத்து உணவு மூலமே நிலையான பலனைப் பெற முடியும். உடலில் ஹீமோகுளோபின் மற்றும் புரோட்டீன் மிகமிக அவசியம். இதன் அளவு குறைந்தால், படிப்பு மட்டுமல்லாது... மொத்த வளர்ச்சியுமே தடைபட்டுவிடும்.

நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால், ஆட்டிறைச்சியின் ஈரல் மூலம் இரும்புச்சத்தின் குறைபாட்டை நீக்கலாம். இரும்புச்சத்தில் முக்கிய வகையான 'ஹேம் அயன்' (Heme iron) என்பது அசைவத்திலேயே அதிகம் கிடைக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவை தினசரி உணவில் இடம்பெறச் செய்யுங்கள். சைவமாக இருப்பின் இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமுள்ள கேழ்வரகை முளை கட்டச் செய்து, கஞ்சியாகப் பரிமாறலாம். மாலை நேர ஸ்நாக்ஸாக உலர்ந்த திராட்சை தரலாம். பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் வெல்லத்துடன் பொடி செய்து கலக்கப்பட்ட நிலக்கடலையை நிரப்பித் தருவது அருமையான இரும்புச்சத்து ஊக்கி.

'எனர்ஜி டிரிங்' என்று தரப்படுபவற்றைவிட, முளைகட்டிய தானியங்களோடு முந்திரி, பாதாம், வெல்லம் ஆகியவற்றைக் கலந்து பானங்கள் தயாரித்துத் தரலாம். இரும்புச்சத்து ஆகாரம் எதுவானாலும் அதைச் சாப்பிட்டதுமே... எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற விட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உண்பது நல்லது. இரும்புச்சத்து உட்கிரகிப்புக்கு இவை உதவும்.

படிக்கும் குழந்தைகளின் ஒவ்வொரு வேளை உணவும் சரிவிகித உணவாக அளித்தல் அவசியம். இரண்டு காய்கள், ஏதேனும் தானியம் மற்றும் பருப்பு, ஒரு கீரை, ஒரு பழம், இரண்டு வேளை பால் என சரிவிகிதத்தை பராமரித்தால்... உடல்சோர்வு அவர்களை அண்டாது. குறிப்பாக முருங்கைக்கீரையில் தோசை, சப்பாத்தி, அடை என விதவிதமாகத் தரலாம்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

இளையதலைமுறை மோகம்கொண்டிருக்கும் ஃபாஸ்ட்ஃபுட் பாணியிலேயே நமது சத்தான ரெசிபிகளையும் தயாரிக்கலாம். உதாரணத்துக்கு... கோதுமை அல்லது ஓட்ஸ் பிரெட்டில் விதவிதமான காய்கறிகளைச் சேர்த்து சாண்ட்விச்சாக அளிக்கலாம். கார்ன்ஃபிளேக்ஸ், ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் அவர்கள் விரும்பும் சுவையில் சத்தான உணவு அளிப்பது எளிது. படிப்புக்கு அதிக நேரம் செலவிடும் மாணவர்களின் உணவில் எண்ணெயை முடிந்த அளவு குறைத்துவிட்டு... அவித்தது, வேகவைத்தது போன்றவற்றைத் தரலாம்.

இந்த வயதுப் பெண்களின் மாதவிடாய் ஒழுங்கையும் தாய்மார்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ரத்தசோகையை ஒட்டிய இந்த சுழற்சியில் குழப்பம் இருந்தால்... உடல் மெலிவு அல்லது திடமில்லாத எடை அதிகரிப்புடன் இருப்பார்கள். இவர்களிடம் எதிலும் எரிச்சல் தென்படும். கூடுதலாக ஹார்மோன் தடுமாற்றமும் சேர்ந்திருந்தால் மாதந்திர சுழற்சியின் குழப்படியே மாணவிகளின் படிப்பை பாதித்துவிடும். தேவையைப் பொறுத்து உங்கள் குடும்ப மருத்துவர், மனநல ஆலோசகர், கல்வி ஆலோசகர் போன்றோரின் உதவியையும் நாடலாம்.''

சாம்பாரில் இருந்து சாட்டிலைட் வரை உங்கள் கேள்வி எதுவாயினும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். 044- 42890002 என்ற 'வாய்ஸ் ஸ்நாப்' சேவையிலும் உங்கள் கேள்வியை உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நிபுணர்கள் தகுந்த விளக்கம் தருவார்கள்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
-
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism