பொங்கல் லீவ்ல டி.வி. முன்னாடி உட்கார்ந்து, தண்டமா சாப்பிட்டுத் தூங்கிட்டு இருக்காம, சேனல் ஏரியாவுக்கு விசிட் போனா இந்த சின்சியர் ரீட்டா. மங்களகரமா முதல்ல என்ட்ரி தந்தது, சீனியர் மேடம் லட்சுமி வீட்டுக்கு. கலைஞர் டி.வி-யில 'மகாலட்சுமி' சீரியல்ல மேடம்தான் மகாலட்சுமி!
'சீரியலில் முதன் முறையாக'ங்கற டைட்டில் கார்டோட வந்திருக்கற லட்சுமிகிட்ட, ''ரொம்ப நாளைக்கு முன்ன 'கதையல்ல நிஜம்'னு வந்தீங்க. அதோட 'காணவில்லை' கார்டு போட வெச்சுட்டுப் போயிட்டீங்களே மேடம்?"னு கேட்டா, படபடனு வந்து விழுந்தது பதில்.
"எனக்குத் தமிழ் சினிமாவுல ஒரு இடைவெளி ஏற்பட்டாலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு மத்த மொழிப்படங்கள்ல நிறைய சான்ஸ் வந்தது, வந்திட்டிருக்கு ரீட்டா. கூடவே, கன்னடத்துல 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியையும் பண்ணிட்டு இருக்கேன். இப்போ இந்த சீரியல்!"னு சொன்ன மேடம்கிட்ட,
"பெரும்பாலும் மனைவி, அக்கா, அண்ணினு நடுத்தர வயதுப் பெண்களை சீரியல் ஹீரோயின் ஆக்கறதுதான் சேனல் இலக்கணம். ஆனா, இந்த சீரியல்ல வித்தியாசமா வயசான 'அம்மா' கேரக்டரை ஹீரோயின் ஆக்கியிருக்காங்களே...?"னு சீரியல் ரசிகப் பெருமக்களின் ஆச்சர்யத்தை கேட்டேன்.
"அது புரொட்யூஸர் சாய்ஸ்! அதைப்பத்தி நீ அவர்கிட்டதான் கேட்கணும் ரீட்டா!"னு கைகாட்ட, அட, லட்சுமி மேடத்தோட கணவர் சிவச்சந்திரன் சார்தான் கதை, திரைக்கதை, வசனம், புரொடக்ஷன் மற்றும் கிரியேட்டிவ் ஹெட்!
|