Published:Updated:

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

செய்திகள் யோசிப்பது.... !

Published:Updated:

செய்திகள் யோசிப்பது..!
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம்

செய்திகள் யோசிப்பது.... !

செய்தி மதுரை, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் யாரும் உதவாத நிலையில், தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார் எய்ட்ஸ் நோயாளி ஒருவர். அதற்குப் பிறகான மருத்துவ உதவிகளுக்காக அந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டதுடன், மிகவும் கேவலமாகவும் நடத்தியிருக்கிறார்கள் மருத்துவ மனை ஊழியர்கள். பிறப்புச் சான்றிதழ் வேண்டி, கடும் பனிக்கு நடுவேயும் பச்சிளம் குழந்தையுடன் மருத்துவமனை வராண்டாவிலேயே அவர் தங்கியிருந்தபோதும், குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார் என்று மருத்துவமனை பதிவேட்டில் குறித்துள்ளனர் ஊழியர்கள்.

"இந்தச் சம்பவம் உண்மையாக இருப்பின், மிகவும் வருத்தத்துக்குரியது... அவமானத்துக்குரியது. இதற்கு முன்பும் இதேபோல பல அவலங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன், செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளி ஒருவருக்கான சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, அரசு மருத்துவமனைக்கு வடஇந்தியாவைச் சேர்ந்த மனநிலை சரியில்லாத கூலித் தொழிலாளி ஒருவர், கால் ஒடிந்த நிலையில் சிகிச்சைக்காக வர, அனுமதி மறுக்கப்பட்டு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்திருக்கிறார். திருச்சி, அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் பிறந்த குழந்தைகள் இறந்துபோன கொடுமையும் நடந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பரவும் இந்த அலட்சிய நச்சு, அதிகார ஆதிக்கம், லஞ்சப் பேய்... இவையெல்லாம் மனது கொதிக்கும் சினம் தரும் ஒன்று. ஆனால், சீர்செய்யக் கூடிய ஒன்றுதான். இந்தத் தவறுகளில் எல்லாம் கடைநிலை ஊழியர்களில் இருந்து முக்கிய தலைகள் வரை யார் யார் குற்றவாளியோ, அவர்களுக்கு பாரபட்சமின்றி கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கும் அச்சம் வரும். பாரபட்சம், புறக்கணிப்பு, சுரண்டல், அலட்சியம்... இவையெல்லாம் கோப்புகள் புழங்கும் மற்ற அரசுத் துறைகளில் இருப்பதே கண்டனத்துக்குரிய ஒன்று. அப்படியிருக்க, குற்றுயிரும் குலையுயிருமாக மனித உயிர்கள் புழங்கும் மருத்துவமனைகளிலும் அது குடிகொண்டிருந்தால்... கிட்டத்தட்ட கொலைக் குற்றத்துக்குச் சமமானதுதான்.

அடுத்ததாக, நம் நாட்டு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சையும் இரண்டாம் தரமாகவே உள்ளது. அதேசமயம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பும் முக்கியம்தான் என்பது மறுப்பதற்கில்லை. சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ சாதனங்கள் வழங்கப்பட வேண்டும். எய்ட்ஸ் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு 'ரிஸ்க் அலவன்ஸ்' தொகை தருகிறது. தமிழ்நாட்டில் அது இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

மொத்தத்தில் எல்லாவற்றிலும் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மட்டுமே."

செய்திகள் யோசிப்பது.... !
-
செய்திகள் யோசிப்பது.... !
செய்திகள் யோசிப்பது.... !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism