Published:Updated:

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

Published:Updated:

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
கரு.முத்து படங்கள் எம்.ராமசாமி
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இனிதான் உனக்கு வாழ்க்கை... முழுமையாக வாழ்ந்து பார்!"
அறுபதுகளுக்கு அருளும் அமிர்தகடேஸ்வரர்

டிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள், கூடப்பிறந்தவர்கள்... இப்படி தங்கள் முன்பாக வரிசை கட்டி நிற்கும் கடமைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டு 'உஷ், அப்பாடா...' என்று நிமிரும்போது... வயசு ஓடிப்போய் 58-ல் நிற்கும்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

'இனியாவது கொஞ்சம் ஆற அமர வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே' என்று நினைப்பார்கள். ஆனால், ஓய்வில்லாமல் உழைத்ததன் பயனாக உடல் களைப்புற்று, இனி வாழ்வதே சிரமம் என்ற நிலையில் துவண்டு போய்விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம்... 'இனிதான் உனக்கு வாழ்க்கை... அதை முழுமையாக வாழ்ந்து பார்!' என்று அருளையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து அனுப்புகிறார் திருக்கடையூரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அமிர்தகடேஸ்வரர்.

இந்த நம்பிக்கை... பெரும்பெரும் பணக்காரர்கள் தொடங்கி, அன்றாடம் கஞ்சிக்கே தவிப்பவர்கள் வரை பலரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால்... 60 வயதானதும், 'நீண்ட ஆயுள் கொடு இறைவா' என்றபடி அமிர்தகடேஸ்வரரிடம் சரணடைகிறார்கள் அலை அலையாக!

நாட்டில் ஆயிரமாயிரம் சிவத்தலங்கள் இருக்க, இங்கு மட்டும் ஆயுள் விருத்தி தரும் வரம் கிடைக்கும் மகிமை என்ன?

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்த கதைதான் உங்களுக்குத் தெரியுமே! விநாயகரை முதலில் வணங்காமல் அமிர்தம் கடையும் செயலைத் துவங்கியதால்... முதலில் விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து உண்டு நீலகண்டனாக மாறினார். அதற்குப் பிறகு நடந்ததுதான் இத்தல வரலாறு.

விஷத்துக்குப் பிறகு கிடைத்த அமிர்தத்தை ஒரு கடத்தில் நிரப்பி மறைத்து வைத்திருந்தார் விநாயகர். அதைக் கண்டறிந்து மகாவிஷ்ணுவும் தேவர்களும் எடுக்கச் சென்றபோது, அமிர்தம் நிரம்பிய கடம், அப்படியே சிவலிங்கமாக மாறிப்போனது. அதுதான் அமிர்தகடேஸ்வரர்.

அமிர்தத்தை மறைத்து வைத்த விநாயகர், கள்ள விநாயகராக... அந்த அமிர்தத்தை எடுத்துக் கொடுக்க நினைத்த மகாவிஷ்ணு, அமிர்தநாராயணனாக... அழிப்பதையே தொழிலாகக் கொண்ட ஈசன், சாகாவரம் தரும் அமிர்தகடேஸ்வரனாக... வீற்றிருக்கும் காட்சியே... காட்சி!

"நிறைந்த ஆயுளோடு வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையும். அதற்காக வயதுக்கு தக்கபடி இங்கே பூஜை, ஹோமங்கள் நடத்தப்படுவதுதான் தனிச்சிறப்பு. ஒரு வயது பூர்த்தியானால் அது அப்த பூர்த்தி, அறுபது வயது பூர்த்தியானால் அது சஷ்டியப்தபூர்த்தி, 80 வயதில் சதாபிஷேகம்.

இதற்கெல்லாம் இங்கே ஹோமங்கள் நடத்தப்பட்டு கலச பூஜை செய்யப்படுகிறது. கலசத்தில் இருக்கும் அமிர்த குடத்து இறைவன் அப்படி செய்யப்படுகிறவர்களை ஆயுள் விருத்தி செய்து காப்பாற்றுகிறான் என்பது ஐதீகம். அதனால்தான் வயதானவர்கள் நம்பிக்கையோடு வருகிறார்கள். அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருகிறார் இறைவன்" என்று நெகிழ்கிறார் கோயில் குருக்கள்களில் ஒருவரான கயிலை முத்துக் குருக்கள்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

கோயிலின் மண்டபத்தில்... குழந்தை குட்டி, உற்றார், உறவினர் புடைசூழ தம்பதி சமேதராக ஆயுஷஹோமம் செய்து, அறுபதாம் கல்யாணத்தையும் முடித்து எல்லோருக்கும் ஆசிகள் வழங்கிக் கொண்டிருந்தனர் சோழபுரம் நத்தத்தைச் சேர்ந்த தவமணி - கலியமூர்த்தி தம்பதியர்.

"அறுபது வயது நிரம்பியவர்களுக்கு, அவர்களுடைய வாரிசுகளே அறுபதாம் கல்யாணம் நடத்தி வைப்பார்கள். இந்தத் திருமணம் செய்து கொள்வதால் இரண்டு நன்மைகள். நாம், பிள்ளைகளுக்கு செய்து வந்தது போக, இதில் பிள்ளைகள் நமக்குச் செய்வார்கள். பெற்றோரின் திருமணத்தை பிள்ளைகள் நடத்தும் பாக்கியம் கிடைக்கிறது. அடுத்து இறைவனின் பூரண ஆசிகள் நமக்குக் கிடைக்கிறது" என்று புதுமணப் பெண்ணின் உற்சாகத்தோடு சொன்னார் தவமணி கலியமூர்த்தி.

இந்த ஒரு ஜோடி மட்டுமல்ல... கோயிலில் எங்கு திரும்பினாலும் பட்டு வேட்டி, பட்டுப்புடவை சரசரக்க புதுமணத்தம்பதிகளாக... அறுபதாம் கல்யாண ஜோடிகள்தான் வளைய வந்தன.

இது, தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான கோயில். இறைவியின் பெயர் அபிராமி. அபிராம பட்டருக்காக தனது காது தோட்டினை கழற்றி வீசி நிலவைக் கொண்டு வந்த அதே அபிராமி! இறைவன் சந்நிதிக்கு முன்பாகவே, கிழக்கு பார்த்த வண்ணமாக அமைந்திருக்கிறது அவளுடைய சந்நிதி.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

அதைக் கடந்து நடந்தால்... நூற்றுக்கால் மண்டபத்தில் வைத்து கடத்து நீரால் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள் நாங்கூரைச் சேர்ந்த கோவிந்தராஜு - விஜயா தம்பதியர். சுற்றிலும் உறவுக் கூட்டம் உற்சாக ஆரவாரம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதில் நாமும் உள்ளே கலந்து, விஜயாவிடம் பேசினோம். "வயதானவர்களை ஒதுக்கி ஓரம் தள்ளும் இந்த காலத்தில் இந்த விழா ரொம்ப முக்கியத்துவம் பெறுகிறது. நம் மனதில் இருக்கும் ஆதங்கத்தை எல்லாம் போக்கி, 'நாங்கள் இருக்கிறோம்' என்று பிள்ளைகள் ஆறுதல் கூருவதாக அமைந்திருக்கிறது இந்தச் சடங்குகள்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

அறுபது வயது நிறைந்தவர்கள் வாழ்க்கையில் ஒரு சுற்று முழுமையாக முடித்ததாக அர்த்தம். அதாவது தமிழ் வருடங்கள் அறுபது. அதன் ஒரு சுற்றுதான் இது. அப்படி முடித்தவர்கள் நிறைந்த அனுபவத்தை பெற்று எது நல்லது, எது கெட்டது என்று அறிந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களிடம் ஆசிகள் வாங்குவது நல்லது என்றெல்லாம் அனைவருக்கும் உணர்த்துகிறது இந்த விழா'' என்று சொன்ன விஜயா,

''இங்கே வந்து இப்படிச் செய்துகொள்வது, இன்று புதிதாக பிறந்தது போலிருக்கிறது" என்று உணர்ச்சிகரமாகச் சொன்னார்.

ஆம்... அது அங்கே வலம் வந்து கொண்டிருந்த ஒவ்வொரு தம்பதியின் முகத்திலும் பிரதிபலிக்கவே செய்தது!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
என்றும் பதினாறு!

'16 வயது வரைதான் ஆயுள்' என்ற வரத்தோடு பிறந்த மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறோடு பாய்ந்து வந்தான் எமதர்மன். சிறுவன், தாவிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டி அணைக்க... சிவலிங்கத்தையும் சேர்த்து பாசக்கயிறால் வளைத்தான் எமன். வெகுண்ட ஈசன், இடதுகாலால் எமனை உதைக்க... போய் விழுந்த இடத்திலேயே உயிரை இழந்தான் எமன். அதனால்தான் 'காலசம்ஹாரமூர்த்தி'யாகவும் இங்கே அமைந்திருக்கிறார் இறைவன்.

பிறகு, எமனை உயிர்ப்பித்த அதேநேரம்... 'என்றும் பதினாறாக சிரஞ்சீவியாக வாழ்வாய்' என்று மார்க்கண்டேயனையும் வாழ்த்தி வரம் கொடுத்தார் இறைவன். 'நீண்ட ஆயுள் கிடைக்கும்' என்ற நம்பிக்கைக்கு இதுவும் ஒரு காரணம்.

எப்படிச் செல்வது?

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை-யில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருக்கடையூர். சிதம்பரம், மயிலாடு-துறை, காரைக்கால் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் உள்ளன.

சென்னையிலிருந்து செல்பவர்கள் காரைக்-கால், நாகப்பட்டினம், வேளாங்கன்னி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறினால் திருக்கடையூரில் இறங்கலாம்.

ஹோமங்கள், பூஜைகளுக்கான எல்லாமும் அங்கேயே கிடைக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகளுக்கும் பஞ்சமில்லை.

கோயில் அலுவலக தொலைபேசி 04364--287429.

 

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
-
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism