Published:Updated:

என் டைரி 217 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 217 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 217 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 217 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

Published:Updated:

வாசகிகள் பக்கம்
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 217 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 217 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"அவமானத்துக்கு அழைப்பு வைக்காதே!"

என் டைரி 217 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 217-ன் சுருக்கம்

"ஆசைக்கும், ஆஸ்திக்கும் ஒரே மகள் நான். கல்லூரியில் படிக்கும்போது, காதல் வலையில் விழ, பெற்றோர் விருப்பத்தை மீறி, 'சொத்தில் நயா பைசா வேண்டாம்' என்று வீம்புடன் வெளியேறி திருமணம் செய்து கொண்டேன். விருந்தினர் போல் வந்து ஆசீர்வதித்தனர் பெற்றோர். மேற்படிப்பு, பிரசவ செலவு என அத்தனையையும் ஏற்று என்னை அருமையாகப் பார்த்துக் கொண்டார் என்னவர். அவ்வப்போது தாய் வீட்டுக்கும் போய் வந்தேன். திடீரென்று அவருடைய தொழிலில் சறுக்கல் ஏற்பட, அடிக்கடி குடும்பத்தில் பிரச்னைகள் வெடிக்கின்றன. 'உன் பெற்றோரிடம் உதவி கேள்' என்கின்றன தூரத்து உறவுகள். கடைசி வரை வைராக்கியத்தை இழக்க மறுக்கிறது ஒரு மனம். ஆபத்துக்கு பாவமில்லை என்கிறது மற்றொரு மனம். என்ன செய்வேன்?"

என் டைரி 217-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

சதி வந்தால், பிரிந்துபோன சொந்தங்களும் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படும்போது சொந்தங்கள் தலைதெறிக்க ஓடிவிடும். இன்றைய நடைமுறை நிகழ்வுதான் இது. வசதியாக இருந்தபோது, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய நீ, கஷ்டத்தையும் கையாள கற்றுக் கொள்ளவேண்டும். உன் பெற்றோரும் எல்லாவற்றையும் மறந்து, உன் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார்கள். பெற்றவர்களை புறந்தள்ளி, சொத்தும் வேண்டாம் என்ற பிறகு, கணவரின் தொழிலுக்காக பணத்தைக் கேட்பது நியாயமே இல்லைதான் என்றாலும், கடனாகக் கேட்பதில் தவறில்லை. மாதா மாதம் அதற்குரிய வட்டியைத் தருவதாக சொல். 'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்று சும்மாவா சொன்னார்கள். உன் பெற்றோர் நிச்சயம், எந்த எதிர்பார்ப்புமின்றி உதவுவார்கள். பெற்றோர் நல்லாசியுடன் உன் வாழ்க்கையில் புதியதோர் மாற்றம் நிச்சயம் வரும்.

- வசந்தா பரமசிவம், புனலூர்

னக்கோ உன் குழந்தைக்கோ ஒரு ரூபாய்கூட உன் பெற்றோர் செலவு செய்யவில்லை என்பதை உறுத்தலாக ஏன் நினைக்கிறாய்? கல்யாணத்துக்கு முன்பே பெற்றோர் பணத்தை ஒதுக்கிய நீ, திருமணமாகி குழந்தை பிறந்ததும், அவர்கள் கொடுப்பதை மட்டும் எப்படி ஏற்பாய் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் அல்லவா?

கணவர் தாங்கிப் பிடித்து வருமானம் பெருகியபோது கற்கண்டாக இனித்த வாழ்க்கை, தொழிலில் சறுக்கல் ஏற்பட்டபோது கசந்து போய்விட்டதா? துன்பமும், சோதனையும் வரும்போது, உன் கணவரின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள். அவர் நிமிர்ந்து நிற்க உன்னால் உதவ முடியுமா என்று பார். படிப்புக்கு ஏற்ற ஒரு வேலை தேடிக் கொள். ஏற்கெனவே ஒரு முறை உன்னால் உடைபட்ட உன் பெற்றோரின் மனதை மீண்டும் சுக்குநூறாக்கவோ... உன்னை ஆதரித்த கணவன் வீட்டாருக்கு அவமானம் வந்து சேரவோ... எக்காரணம் கொண்டும் வழி வகுத்துவிடாதே. பெற்றோரின் சொத்து வரும்போது வரட்டும். எப்படியிருந்தாலும் அது உனக்குத்தானே!

- முத்துலக்ஷ்மி சங்கரன், சென்னை-20

 

என் டைரி 217 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
-
என் டைரி 217 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 217 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism