Published:Updated:

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Published:Updated:

ஜோதிடம்
'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனவரி 20-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமுடைய நீங்கள், எப்போதும் நல்லதையே நினைப்பீர்கள்.

சூரியன் சாதகமாக இருப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பூர்விக சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். குருவும், சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 4-ல் செவ்வாய் நிற்பதால் உறவினர்கள் சிலர் உங்களை குறை கூறலாம். சுக்கிரன் 10-ல் நிற்பதால் கணவருக்கு அலைச்சல், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். செல்வாக்கு கூடும் காலமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ரிஷபம் விடாப்பிடியான செயல்திறனும், விட்டுக் கொடுக்கும் மனசும் கொண்ட நீங்கள், இனிமையாகப் பேசுவீர்கள்.

சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் தடைகள் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். ஓரளவு பணம் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். 8-ல் ராகு இருப்பதால் கணவர் உங்களை ஆழம் பார்ப்பார். மகனின் கோபம் குறையும். ஆனால், வாக்குஸ்தானத்தில் கேது நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். புதன் மறைந்திருப்பதால் மனக்குழப்பம், தூக்கமின்மை வந்து நீங்கும். 9-ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 10-ல் குரு நிற்பதால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரலாம். பங்குதாரர்கள் கைகொடுப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மிதுனம் அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

குரு பகவான் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். நின்று போன வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். சுக்கிரன் 8-ல் மறைந்ததால் எதிர்பாராத பணவரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். ராசிக்குள் கேது நிற்பதுடன் ராசிநாதன் புதன் ராகுவுடன் இருப்பதால் சோர்வு, உடல் உபாதை வந்து நீங்கும். 4-ல் சனி நிற்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். போராடி வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

கடகம் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள், மற்றவர்களின் மீது அதிக பாசம் வைப்பீர்கள்.

தைரிய ஸ்தானத்தில் சனி நிற்பதால் பிரச்னைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் மன உளைச்சல், டென்ஷன் இருக்கும். சூரியனும், சுக்கிரனும் சரியில்லாததால் மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஆனால், ராகு வலுவாக இருப்பதால் பக்குவமாகப் பேசுவீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். 8-ல் குரு மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக பணவரவு உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தடைகளைத் தாண்டும் தருணமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

சிம்மம் உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள், அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிட மாட்டீர்கள்.

ராசிநாதன் சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்ததால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. உடல் நலக் கோளாறு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் 22-ம் தேதி மாலை 6.30 மணி வரை அலைச்சல், டென்ஷன் வந்து போகும். கணவர் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார். குரு வலுவாக நிற்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். செவ்வாய் 12-ல் தொடர்வதால் சேமிப்புகள் கரையும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நேரமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

கன்னி சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருப்பீர்கள்.

சுக்கிரன் 5-ல் சாதகமாக இருப்பதால் பணம் வரும். சவாலான விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். கணவர் கனிவாக பேசுவார். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். 22-ம் தேதி மாலை 6.30 மணி முதல் 24-ம் தேதி வரை யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். செவ்வாய் வலுவாக நிற்பதால் உறவினர்கள் மதிப்பார்கள். ஜென்ம சனி நடப்பதால் உங்கள் மீது சிலர் பழி சுமத்தினாலும்... மீண்டு வெளியே வருவீர்கள். குரு 6-ல் நிற்பதால் உடல் உபாதை ஏற்படக்கூடும். ராசிநாதன் புதன் ராகுவுடன் நிற்பதால் சோர்வு, டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரத்தில் தயக்கமில்லாமல் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் காலமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

துலாம் நம்பி வந்தவர்களுக்கு நல்லதை செய்யும் நீங்கள், சமூக அக்கறை கொண்டவர்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள். கணவரின் ஆரோக்கியம் சீராகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். 25, 26 ஆகிய தேதிகளில் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குரு சாதகமாக இருப்பதால் அதிகார பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய தலங்கள் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் தடுமாற்றங்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நீண்டகால ஆசை நிறைவேறும் வேளையிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

விருச்சிகம் மனதில் பட்டதை 'பளிச்'சென பேசும் நீங்கள், பகுத்தறிவும் பட்டறிவும் அதிகம் உடையவர்கள்.

சனி பகவான் லாப வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து மணப்பெண் அமைவார். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் சில நேரங்களில் கணவர் சலித்துக் கொள்வார். சூரியன் 3-ம் வீட்டில் இருப்பதால் தடைபட்ட வேலைகள் விரைந்து முடியும். 27-ம் தேதி முதல் 29-ம் தேதி காலை 9 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 4-ல் குரு இருப்பதால் தாயாருடன் மோதல் வரலாம். ராசிநாதன் 9-ல் நீசமாகி நிற்பதால் முன்கோபம் வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய சிக்கல்களில் இருந்து விடுபடும் நேரமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

தனுசு புதுமையையும், புரட்சியையும் விரும்பும் நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகும் குணமுடையவர்கள்.

ராசிக்கு 2-ல் சுக்கிரன் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். 3-ம் இடத்து குருவால் சின்ன சின்ன அவமரியாதை, அலைக்கழிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. கேது சரியில்லாததால் கணவர் கோபப்படலாம். 8-ல் நிற்கும் செவ்வாயால் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். 29-ம் தேதி காலை 9 மணி முதல் 31-ம் தேதி காலை 11 மணி வரை யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த வகையில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மன உறுதியால் வெற்றி பெறும் வேளையிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மகரம் தோல்வி கண்டு துவளாத நீங்கள், கடின உழைப்பாளிகள்.

குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சுக்கிரன் சாதகமாக இருப்ப தால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புகழ், கௌரவம் உயரும். கணவர் உங்களைப் பாராட்டுவார். தங்க ஆபரணங்கள் சேரும். ஆனால், ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் சலிப்பு, உடல் உபாதை வந்து நீங்கும். கேது வலுவாக இருப்பதால் ஆன்மிகவாதிகள் உதவுவார்கள். ஷேர் லாபம் தரும். 31-ம் தேதி காலை 11 மணி முதல் 2-ம் தேதி மதியம் 2 மணி வரை எதிலும் பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். ஏமாற்றங்கள் நீங்கும் காலமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

கும்பம் கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்ட நீங்கள், மற்றவர்களது தேவையறிந்து உதவுபவர்கள்!

6-ல் செவ்வாய் வலுவாக மனோபலம் அதிகரிக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். கணவரின் நம்பிக்கையை பெறுவீர்கள். ஆனால், ஜென்ம குரு இருப்பதால் சச்சரவு வந்து நீங்கும். எதிர்பாராத வகையில் பணம் வந்தாலும் அஷ்டமத்து சனி இருப்பதால் கடன் வாங்க வேண்டியிருக்கும். 12-ல் சுக்கிரன் மறைந்தாலும் உங்கள் ராசிநாதன் சனி பகவானின் வீட்டில் அமர்ந்ததால் வேலை கிடைக்கும். ஆனால், சூரியனும் 12-ல் நிற்பதால் தூக்கம் குறையும். 2-ம் தேதி மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் விமர்சனங்கள் இருக்கும். விட்டுக் கொடுக்க வேண்டிய வேளையிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

மீனம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களே!

சுக்கிரனும், சூரியனும் லாப வீட்டில் நிற்பதால் புதிய திட்டங்கள் நிறை வேறும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அழகு, இளமை கூடும். வீடு வாங்க லோன் கிடைக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்கு வீர்கள். 7-ல் சனி நிற்பதால் கணவர் அவ்வப்போது குறை கூறலாம். உடல் உபாதை வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். 5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். 10-ல் நிற்கும் ராகுவால் ஓயாமல் உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். இடமாற்றம் வரும். வி.ஐ.பி-க்களின் ஆதரவால் வெற்றி பெறும் தருணமிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
-
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism