வெள்ளரி விதையை பால் சேர்த்து மையா அரைக்கணும். அதுல ஒரு கோலிக்குண்டு அளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தா... சிறுநீரகக் கல் கரைஞ்சு போயிரும். குணமாகுற வரை இதைச் சாப்பிடலாம்.
கோவைக்காய் கொடியை (தண்டு) இடிச்சி, கால் டம் ளர் சாறு எடுத்து, ஒரு சிட்டிகை படிகாரத்தை பொரிச்சு, அதுல சேருங்க. இதோட ஒரு சிட்டிகை சுண்ணாம்பு சேர்த்து உள்ளுக்கு கொடுத்தீங்கனா சட்டுனு கல் அடைப்பு நீங்கும், நீர் உடனே இறங்கும். இதை ஒரு அதிரடி வைத்தியம்னுகூட சொல்லலாம்.
கடைசியா எல்லாத்துக்கும் தெரிஞ்சது வாழைத்தண்டு. இதைச் சாறு எடுத்துக் குடிக்கலாம். அப்பப்போ சமைச்சு சாப்பிட்டு வந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.
நத்தைச்சூரி விதையை 10 கிராம் அளவு எடுத்து வறுத்து பொடி செஞ்சு, நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டுங்க. அதுல பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தா... கல் அடைப்பு நீங்கும். சிலபேருக்கு சிறுநீரகத்துல சதை அடைப்பும் இருக்கும். அதுக்கும்கூட இதே வைத்தியத்தை செய்யலாம்.
குறிப்பு நாஞ்சொல்லியிருக்கற பொருளுங்கள்ல பலதும் உங்க வீட்டுலயே இருக்கும். இல்லாட்டி, நாட்டுமருந்து கடையில கிடைக்கும்.
|