Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
வாசகிகள் பக்கம்
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு!

கொசுவை விரட்ட பீட்ரூட்!

ங்கள் வீட்டுச் சுட்டிப்பையன் அர்ஜுனிடம், "பீட்ரூட் சாப்பிட்டாதான் அது நம்ம உடம்புக்கு நிறைய ரத்தம் கொடுக்கும்" என்று சொல்லி சாப்பிட வைப்போம். ஒரு நாள் நாங்கள் எல்லோருமாக பேசிக்கொண்டிருந்தபோது, "இந்தக் கொசுவைச் சமாளிக்க முடியலையே? நம்ம ரத்தத்தை எல்லாம் இதுவே உறிஞ்சிக் குடிச்சிடும்

குட்டீஸ் குறும்பு!

போலயிருக்கே..." என்று கவலையுடன் அங்கலாய்த்துக் கொண்டிருந்தோம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுன், "அம்மா... நாம தூங்கும்போது பக்கத்துல ஒரு பீட்ரூட்டை வெச்சுடுவோம். அதுல இருக்க ரத்தத்தை குடிச்சுட்டு, நம்மகிட்ட கொசு வராம போயிடும்!" என்று தீர்வு (!) சொல்ல, சிரித்துத் தாளவில்லை எங்களுக்கு!

- என்.எம்.லஷ்மி, நாகர்கோவில்

பிகு பண்ணு... பிறகு தின்னு!

ன்றாம் வகுப்பில் நானும், ஐந்தாம் வகுப்பில் என் அக்காவும் படித்துக் கொண்டிருந்த சமயம். உறவினர் ஒருவர் எங்கள் வீட்டுக்குத் தின்பண்டங்களுடன் வந்திருந்தார். நான் கடைக்குட்டி என்பதால் என் கையில் அவற்றைக் கொடுத்தவுடன் ஆசையுடன் வாங்கிக் கொண்டேன். உடனே, ''ஏய்... அம்மா என்ன சொல்லியிருக்காங்க? வீட்டுக்கு வர்றவங்க ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதை உடனே வாங்காம கொஞ்சம் 'பிகு' பண்ணிட்டு,

குட்டீஸ் குறும்பு!

அம்மாவும் அப்பாவும் 'வாங்கிக்க'னு சொன்னவொடனதான் வாங்கணும்!'' என்று விருந்தினர் முன்பாகவே என் அக்கா அனைத்தையும் ஒப்பிக்க, என் பெற்றோர் நெளிய... வந்தவர்களோ, எதையும் மறைக்கத் தெரியாத மழலை மொழியில் மயங்கிச் சிரித்தனர்!

நாங்கள் வளர்ந்த பிறகு, அடிக்கடி எங்கள் அம்மா இதைச் சொல்லிச் சிரித்துக் கொள்வார்.

- நிம்மி, மதுரை

''டிராயரைக் கழட்டு.. இப்போ திட்டு!''

குட்டீஸ் குறும்பு!

ன் இரண்டரை வயது மகன் ஆதித்யாவை ப்ளே ஸ்கூலில் சேர்க்கச் சென்றபோது, அந்த பள்ளியில், ''குழந்தைக்கு 'டாய்லெட் போவது எப்படி' என்று டிரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார்கள். எனவே, ஸ்கூலில் சேர்ப்பதற்கான ஆயத்தமாக 'அதை' அவனுக்கு பழக்க, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டோம். அவனோ 'யார் என்ன சொன்னாலும் 'அதை பழகிடக்கூடாது' என்று எங்களைவிட அதிஉறுதியெடுத்துக்கொண்டவனாக, நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் 'போய்'க் கொண்டிருந்தான்!

இயலாமை, ஆத்திரத்தில் அந்தச் சமயங்களில் எல்லாம் நான் அவனைத் திட்ட ஆரம்பிக்க, அவனுக்கு அது ரெகுலராகப் பழகிவிட்டது. அன்று 'உச்சா' போய்விட்டு, "அம்மா டிராயரைக் கழட்டிவிடு" என்றவன், நான் கழற்றியபின், "ம்... இப்போ திட்டு" என்று அனிச்சையாகக் கேட்க, கோபத்தை மீறி சிரிப்பு வந்துவிட்டது எனக்கு!

- அனுபமா ராம், மங்களூர்

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி
'குட்டீஸ் குறும்பு,'
அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002

குட்டீஸ் குறும்பு!
-
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism