Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூபாய் 150 வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன!

பசும்பால் ஆகும் பாக்கெட் பால்!

ன் கொழுந்தனார் பாக்கெட் பால் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, எங்களிடம் தினமும் ஆறு லிட்டர் பால் வாங்குவார் ஒரு (பசும்)பால்காரர். "நீங்'களே பால்காரர்தான். அப்பறம் எதுக்கு எங்ககிட்ட வாங்கறீங்க?" என்று புரியாமல் கேட்க, "இவ்வளவு தூரம் வரமுடியாத எங்க ஊர்க்காரங்க சிலர், பாக்கெட் பால் வாங்கிட்டு வந்து கொடுக்கச் சொல்வாங்க. வர்ற வழிதானேனு வாங்கிட்டுப் போய் கொடுக்கிறேன்..." என்று சொல்லி எங்களின் பாராட்டு மழையில் நனைந்'தார். ஒருதடவை நானும் என் நாத்தனாரும் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, நாலு தெருக்கள் தள்ளி உள்ள ஒரு ஒதுக்குப்புற பைப்பில் எங்களிடம் வாங்கிச்சென்ற பாக்'கெட் பாலையெல்லாம் கத்'தரித்து தன்னுடைய பால் கேனில் ஊற்றி'விட்டு, அந்த குழாய் நீரையும் அந்த கேனில் பிடித்து 'கலந்து' கொண்டுபோனார் அந்த பால்காரர்.

'அடப்பாவி' என்று வாய''டைத்த நாங்கள் அடுத்தநாள் அவர் வந்தபோது விசா''ரிக்க, "என்னம்மா பண்றது..? பசும் பால் ஏன் இவ்வளவு தண்ணியா இருக்குனு எல்லாரும் சலிச்சுக்கறாங்க. இப்படி பாக்கெட் பாலையும் 'கலந்து' கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்கறாங்க. நாங்களும் பொழப்'பப் பாக்கணும்ல..?!" என்று எதிர்கேள்வி கேட்டார்!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

பசும்பாலின் தேவையிருக்கும் குழந்தை'களுக்கும் பெரியவர்களுக்கும் இப்படி போலி பசும்பால் கொடுக்கும் அவருக்கு, பால் கொடுப்பதையே நிறுத்தி'விட்டோம்! இங்கில்லை என்றால், அவருக்கு வேறு' கடை. ஆனால், நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் தோழிகளே!

- நசீமா பேகம், கூத்தாநல்லூர்

காவு வாங்கப் பார்த்த கடன்!

எங்கள் தெருவாசி ஒருவர், அவர் வியாபாரம் சம்பந்த மான ஃபைனான்ஸியர் களை எல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதை வழக்'க'மாகக் கொண்டிருந்'தார். ஒரு சந்தர்ப்'பத்தில் குறித்த தேதியில் கடனைத் திருப்பித் தர'வில்லை என்று ஆத்திர மடைந்த ஒரு ஃபைனான்'ஸியர், அந்த நபர் வீட்டில் இல்லாத நேரம் வந்து அவர் மனை'வியை மிகவும் அநாகரிக'மாகப் பேசி, மிரட்டி'விட்டுச் சென்றிருக்'கிறார். அக்கம் பக்கத்து வீட்'டுத் தலை கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அவ'மானத்'தில் கூனிக்'குறுகிய அந்தத் தோழி தற்'கொலைக்கு முயல, அவளைக் காப் பாற்றி தேற்றுவதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
உறவு மற்றும் நட்பு எல்லைகள் வீடு வரை வரட்டும். ஆனால், வியாபாரம், கொடுக்கல் - வாங்'கல் சம்பந்தப்பட்ட ஆட்களை வீட்டுக்கு அழைக்காமல், அதற்குரிய இடங்களிலேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல இதுபோன்ற விஷயங் கள் வீடு வரை வரும் அளவுக்கும் வைத்துக் கொள்ளாதீர்கள். மீறி னால், இப்படித்தான் வீட்டுப் பெண்கள் வருந்த நேரிடும்! என் இந்த மெஸேஜை 'சேவ்' செய்து வையுங்கள் ஜென்ட்ஸ்!

- எஸ்.மாலதி, முசிறி

பக்கத்து வீடு.. பக்குவத்தை தேடு!


ன்னுடைய வீட்டுக்கு அருகில் புதிதாக வீடு கட்டிய அந்தக் குடும்பத்துக்கு, கட்டட வேலைகளின்போது பொருட்களின் பாதுகாப்பு, தண்ணீர், கரன்ட் என நாங்கள் பல உதவிகள் செய்தோம். ஒருவழியாக அவர்கள் குடியேறியபோது, எங்கள் காம்பவுண்ட் ஓரமாக மரச்செடி நட குழிபறித்தார் அந்த வீட்டுப் பெண்மணி. "செடியை கொஞ்சம் தள்ளி நடுங்க. வேர் பிடிச்சா பக்'கத்துல இருக்கற எங்க போர்ல ஓடி, தண்ணி சப்ளையை நிறுத்''தினாலும் நிறுத்திடும்" என்றேன் வேண்டுகோளாக. உடனே அந்தப் பெண், "எங்க இடத்துல செடி வைக்க யாரும் தடை சொல்ல முடியாது..." என்று 'ரூல்ஸ் ரூபிணி'யாக நிறையப் பேசினார். அந்த விநாடியிலிருந்து அவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

சில நாட்களுக்குப் பின் அவர் வீட்டில் ஒரு விசேஷம் வர, என்னிடம் அந்த வந்த 'ரூல்ஸ்', "ஃபங்ஷனுக்கு எங்க வீடு போதும். பந்தியை உங்க வீட்டு மொட்ட மாடியில வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்" என்று சொல்ல, "எங்க வீட்டு மொட்ட மாடிய நீங்க எப்போ விலைக்கு வாங்கனீங்க?" என்று நான் அதிரடி செக் வைத்தேன். அதிர்ச்சியுடன் அவருக்கு 'ஃப்ளாஷ்பேக்' நினைவுக்கு வந்து வருந்த, நானும், "அன்னிக்கு நீங்க பேசின பொறுப்பில்லாத பேச்சுக்குதான் நான் எதிரியே தவிர, உங்''களுக்கு இல்ல" என்று நேசக்கரம் நீட்ட, இரு'வரும் இப்போது தீவிர ஃப்ரெண்ட்ஸ்.

பக்கத்து வீட்டார்'களிடம் நட்புடன் பழகுவதே நல்லது என அவரும் புரிந்துகொண்டார். நீங்கள்..?!

- ஜி.கே.எஸ்.பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

சிக்கு புக்கு சமயோஜிதம்!

நாங்கள் மொத்தம் ஐந்து தோழிகள். அதில் சசி என்ற தோழி எங்களை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறினாள். நாங்களும் திண்டிவனத்தில் இருந்து சென்னை, தாம்பரம் வந்தோம். அப்போது ரயிலில்தான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லி ஐந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு, ஒரு அடி முன்னால் நடந்து கொண்டிருந்தாள். நாங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம். அப்போது நகர்ந்து கொண்டிருந்த புறநகர் ரயிலில் சட்டென்று ஏறிவிட்டாள். பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது, நாங்கள் ஏறவில்லை என்பது. கையில் டிக்கெட்டை வைத்துக் கொண்டு... அலறல் போட்டுக்கொண்டே எங்களை பார்த்தாள். ''ஏய்! டிக்கெட்டை வெளியில் தூக்கிப்போடு'' என்று நாங்கள் கத்தினோம். அதிர்ச்சியில் உறைந்துபோய் எதையும் புரிந்து கொள்ளாதவளாக அவள் நின்றாள். ஆனால், எங்களின் சத்தத்தைக் கேட்டு, அவள் அருகில் நின்றிருந்த ஓர் இளைஞர், அவள் கையில் இருந்த டிக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை பிளாட்பாரத்தில் வீசினார். நாங்கள் அதை எடுத்துக் கொண்டு அடுத்த ரயிலில் சென்றோம். அந்த ரயில் வரும் வரை அவளுடைய அசட்டுக் காரியத்தை நினைத்து வயிறுவலிக்க சிரித்தோம்.

எங்களுக்காக ஸ்டேஷனிலேயே காத்திருந்தவள்... ''சமயோஜித புத்தினா... என்னங்கறத இன்னிக்கு பிராக்டிகலா புரிஞ்சுக்கிட்டேன்'' என்று வழிந்தாள்.

\ வி.பிரியா, சென்னை-11

 

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
-
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism