Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

Published:Updated:

ப்ளஸ் டூ-வுக்கு பிறகு...
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
தா.நெடுஞ்செழியன்

'ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு' பகுதியில் இதுநாள் வரை வெளிவந்த படிப்புகளின் தொகுப்பை கடந்த இதழில் வெளியிட்டிருந் தோம். இந்த இதழிலும் அது தொடர்கிறது...

தமிழ்நாடு ஃபிஸிக்கல் எஜுகேஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி (Tamilnadu Physical Education and Sports University)

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

2004-ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக்கழகம், விளையாட்டு வீரர்கள், அவர்களுக்கான கோச், டயட்டீஷியன், மேனேஜ்மென்ட் ஆட்கள் என ஸ்போர்ட்ஸ் உலகத்துக்குத் தேவையான அனைத்து பர்சனாலிட்டி களையும் தயார் செய்து கொடுக்கிறது.

இணையதள முகவரி new.tnpesu.org

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிராஃப்ட் அண்ட் டிசைன் (Indian Institute of Craft and Design)

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருக்கும் இந்தக் கல்வி நிறுவனத்தில், நூல்கண்டு தொடங்கி கல், மண், டெரகோட்டா, மரம் என்று சகல கிராஃப்ட் பொருட்கள் செய்வது பற்றியும் நிபுணர்களின் வழிகாட்டுதலோடு கற்றுத் தரப்படுகிறது. இங்குள்ள யூ.ஜி. மற்றும் பி.ஜி. படிப்புகளில் சேர்வதற்கு, அவர்கள் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம்.

இணையதள முகவரி new.iicd.ac.in

இந்தியன் ரயில்வேஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெக்கானிக்கல் அண்ட் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் (Indian Railways Institute of Mechanical and Electrical Engineering)

இந்தியன் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் இந்தக் கல்வி நிறுவனம் வழங்கும், 'ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்பரன்டிஸ்' எனப் படும் நான்கு வருட பொறியியல் படிப்பை முடிப்பவர்களுக்கு, ரயில்வே துறையில் பல உயர் பதவிகள் காத்திருக்கின்றன.

இணையதள முகவரி new.irimee.ac.in

நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (National Council for Hotel Management and Catering Technology)

இந்திய சுற்றுலா துறையால் நிறுவப்பட்டுள்ள இந்தக் கல்வி நிறுவனம், இந்தியாவில் 26 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் சேர்வதற்கு, 'ஆல் இந்தியா ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்' எழுத வேண்டியது அவசியம்.

இணையதள முகவரி new.nchmct.org

விஷ§வல் கம்யூனிகேஷன்

தொலைக்காட்சி விளம்பரத்தில் இருந்து சினிமா வரை எல்லாவற்றிலும் விஸ்காம் படித்தவர்களின் உழைப்பு நிச்சயம் இருக்கும். எனவே, அதைப் பற்றிய படிப்பை முடித்தவர்களுக்கும் தேவை அதிகமாகவே இருக்கிறது. சென்னையில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் இந்தப் படிப்புகள் சொல்லித்தரப் படுகின்றன.

மருத்துவப் படிப்பு

மருத்துவப் படிப்புக்கு மாநில (தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகள் கிடையாது) அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு பற்றி நாம் அறிவோம். ஆனால், நாடெங்கிலும் உள்ள அரசு சார்ந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான இந்திய அளவிலான 'ஆல் இந்தியா ஃப்ரீ மெடிக்கல்/ப்ரீ டென்டல் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்' எனப்படும் நுழைவுத் தேர்வையும் எழுதுவது, அந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். அதிக மருத்துவ கல்வி இடங்களை தரக் கூடிய ஒரே தேர்வு இதுதான்.

இணையதள முகவரி new.aipmt.nic.in

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் எஜுகேஷன் ரிசர்ச் (Indian Institute of Science and Education Research)

பள்ளிப் படிப்புக்கு பிறகு ஆராய்ச்சிக்காவே உருவாக்கப்பட்ட பிரத்யேக படிப்பை வழங்கும் கல்வி நிறுவனம் இது. போபால், மொகாலி, புனே, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இதில் சேர்வதற்கு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெங்களூரு நடத்தும் கே.வி.பி.ஒய்.(K.P.V.Y. - Kishore Vaigyanik Protsahan Yojana) என்கிற நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம்.

இணையதள முகவரி new.iisc.ernet.in/kvpy, new.iiserpune.ac.in

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டிசைன் அண்ட் மேனுஃபேக்சரிங் (Indian Institute of Information Technology Design and Manufacturing -IITDM)

ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் துறை சம்பந்தமான டிசைனிங் மற்றும் மேனுஃபேக்சரிங் படிப்பை கற்றுத்தரும் அரசு கல்வி நிறுவனங்கள் நம் நாட்டில் இரண்டுதான் உள்ளன. ஜபல்பூரில் உள்ள பண்டிட் துவாரகா பிரசாத் மிஸ்ரா இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.ஐ.டி.டிஎம். கல்வி நிறுவனங்கள் தான் அவை.

இணையதள முகவரி new.iiitdm.ac.in

லட்சுமிபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஸிக்கல் எஜுகேஷன் (Lakshmibai National Institute of Physical Education)

மத்திய அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் செயல்பட்டு வரும் இந்தக் கல்வி நிறுவனம், விளையாட்டு வீரர் களுக்கான பயிற்சியையும், விளையாட்டு சம்பந்தப்பட்ட அரசாங்க வேலை வாய்ப்பை யும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இணையதள முகவரி http//lnipe.nic.in

மும்பை யுனிவர்ஸிட்டி இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி (Mumbai University Institute of Chemical Technology)

1934-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது இந்தக் கல்வி நிறுவனம். மும்பை, மாதுங்காவில் உள்ள இந்த யுனிவர் ஸிட்டிதான் கெமிக்கல் டெக்னாலஜியில் இந்திய அளவில் மட்டுமல்ல... உலக அளவிலும் சிறந்த கல்வி நிறுவனமாக இது கருதப்படுகிறது.

இணையதள முகவரி new.udct.org

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
-மீண்டும் சந்திப்போம்...
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism