"எதிர்காலத்துல எங்க கைக்கு பொறுப்பு வரும்போது, 'விளைநிலங்கள வீடு கட்டறதுக்காக வாங்கக் கூடாது, கொடுக்கக்கூடாது'னு ஒரு உறுதிமொழி எடுத்துருக்கோம்!"னு சிஞ்சு சொல்ல...
ஆரம்பத்துல இருந்தே 'அட்றா சக்கை' போட்டுக்கிட்டிருந்த நிஷா, "கேர்ள்ஸ்... இன்னொரு உறுதிமொழி கூட எடுக்கலாம். 'கவர்மென்ட் சர்வன்ட்', 'ஐ.டி ஆசாமி', 'ஃபாரின் மாப்ளை'னு சாய்ஸ் சொல்றது மாதிரி, 'விவசாயி மாப்பிள்ளை'னு பொண்ணுங்க எல்லாம் அடிச்சு சொல்லிட்டா, அக்ரி காலேஜ் நிரம்பி வழியும்; மம்பட்டி, கடப்பாரை பொங்கிப் பெருகும்; விவசாயமும் செழிக்கும்!"னு படா பிளேடு போட,
"ஸ்ஸ்ஸ்... முடியல!"னு வரப்பு லயே உட்கார்ந்துட்டாங்க மற்ற விவசாயினிகள் (!)
|