Published:Updated:

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

Published:Updated:

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல வெஸ்டர்ன், ஃப்யூஷன், கிளாஸிக்னு என்னதான் வெரைட்டியா கலந்து கொடுத்தாலும், 'மொச்சக்கொட்ட பல்லழகி, முத்து முத்து சொல்லழகி...'னு ஃபோக் டான்ஸ் குரூப் வந்து ஒரு குத்தாட்டம் போடுறப்ப... மொத்த ஆடிட்டோரியமும் சேர்ந்து ஆடும் பாருங்க... அதுதாங்க நம்ம நாட்டுப்புறக்கலையோட ஸ்பெஷாலிட்டி!"னு தெம்பா ஆரம்பிச்சாங்க திருச்சி, ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரி தமிழ் டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த 'ஃபோக் ஈவன்ட்ஸ் குரூப்' கேர்ள்ஸ்!

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

கல்ச்சுரல்ஸூக்கு கல்ச்சுரல்ஸ் கரகாட்டம், ஒயிலாட் டம், தப்பாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம்னு கிராமப்புறத்து ஆட்டங்களாலேயே மேடையை ஆட்டி வச்சு, அப்ளாஸ் அள்ளற ஆத்தாஸ் இவங்க!

"பொதுவா வெஸ்டர்ன், கிளாஸிக்கைவிட ஃபோக் டான்ஸூக்கு நிறைய பிராக்டீஸ் தேவை. கொஞ்சம் தடுமாறினாலும் கரகம் சரிஞ்சு, தப்பு நழுவி, காவடி விழுந்துனு நம்மை கவுத்துடும்! ரொம்பத் தீவிரமா உழைச்சு, ரொம்ப ரொம்ப பெர்ஃபெக்ட்டா பெர்ஃபாமன்ஸ் கொடுத்தாதான்... காலரைத் தூக்கிவிட்டுக்க முடியும். அதனால, ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!"னு ரேகா ஃபர்ஸ்ட் பாராவுலயே பில்ட் அப் ஏத்த,

"அதுக்காக நீ ஒவ்வொரு கல்ச்சுரல்ஸூக்கும் கால் கிலோ ரோஸ் பவுடரை காலி பண்ற கொடுமையைத்தான் நம்ம நிதி அமைச்சகத்தால சமாளிக்க முடியல!"னு அவங்களை ஆறு மீட்டர் தூரத்துக்கு வாரிவிட்டாங்க ரேவதி!

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

"கேர்ள்ஸ்... கோ-ஆபரேஷன் ரொம்ப முக்கியம்! மொதல்ல இந்த 'நமக்கு நாமே பல்பு' திட்டத்துல இருந்து வெளிய வந்து, ஒற்றுமையா பேட்டி கொடுக்கணும். ஓ.கே-வா?!"னு சிச்சுவேஷனை சாமாளிச்ச ரேகா, "நம்மளாட காஸ்ட்யூமுக்கு நாம எப்படியெல்லாம் கஷ்டப்படுவோம்ங்கற எபிஸோடைப் பேசுவோமா..?"னு பாயின்ட் எடுத்துக் கொடுக்க, பிக்-அப் பண்ணிக்கிட்டாங்க கயல்விழி!

"அய்யோ... அதை ஏன் கேட்கறீங்க? சுங்குடி புடவை, ஜிகினா ஜாக்கெட், காசு மாலை, கரக கிளி, கனகாம்பரப் பூ, கண்ணாடி வளையல், தண்டை, தப்புனு நாயா... பேயா... அலைஞ்சு காஸ்ட்யூம் ரெடி பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிடும் சாமி. ஆனா, சேலையை கண்டாங்கிக்கட்டு கட்டிகிட்டு, கலர்ஃபுல்லா நாங்க போய் ஸ்டேஜ்ல நிக்கும்போது, ஆடிட்டோரிய கண்ணே எங்க மேல பட்டுடும் தெரியுமா... சுத்திப் போடணும்!"னு சந்தோஷப்பட்டுக்கிட்டாங்க கயல்விழி!

"இப்போ வீதிக்கு வீதி 'வெஸ்டர்ன் டான்ஸ் ஸ்கூல்' வந்துடுச்சு. ஆனா, நம்ம மண்ணோட இந்த பாரம்பரிய கலைகள கத்துக்கொடுக்க யாரும் இல்லங்கற நிலைமை வந்துகிட்டிருக்கு. நாங்ககூட இந்த டான்ஸ், பாட்டெல்லாம் 'சிடி' போட்டுத்தான் கத்துக்கறோம். இப்படியே போனா நம்ம தமிழ் குழந்தைகள் எல்லாம் 'சல்சா', 'ஹிப் ஹாப்', 'வெஸ்டர்ன்'னு வெள்ளக்காரன் ஆட்டம் ஆட, நம்மோட இந்த பாரம்பரிய கலையெல்லாம் அழிஞ்சு போயிடாதா... என்ன கொடுமை இது?!''னு ஒரேயடியா உணர்ச்சிவசப்பட்ட காயத்ரி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு,

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!

''அதனால, காலேஜ்ல 'ஃபோக் ஆர்ட்ஸ்'ங்கறதயும் விருப்பப் பாடமா கொண்டுவரணும்னு தமிழக கல்வித் துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை வைக்கறேன்!"னு மைக் பிடிக்காத குறையா கத்த (!),

"கூல்மா! காலேஜுக்கு காலேஜ் நம்மள மாதிரி சில நல்லுள்ள 'ஃபோக் ஈவன்ட் குரூப்' கண்மணிகள் இருக்கறாங்க... நாட்டுப்புறக்கலைகளுக்கு உயிர் கொடுக்கறதுக்குனே! நாம நம்ம சீனியர்ஸ்கிட்ட இருந்து வாங்கின இந்த தீப்பந்தத்தை (?!), ஜூனியர்ஸ்கிட்ட 'எங்கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கறோம்... கப் வாங்காக வந்துடாதீங்கம்மா'னு அரை கிலோ அட்வைஸோட ஒப்படைப்போம்.

ஸோ... நாமெல்லாம் இருக்கறவரைக்கும் நாட்டுப்புறக் கலைகள் அழியாது! இது அந்த 'கரகாட்டக்காரன்' ராமராஜன்-கனகா ஜோடி மேல சத்தியம்!"னு ஃபீலிங்ஸ் பாப்கார்ன் ஆனாங்க ராஜேஸ்வரி!

வந்தனம் ஃபோக் அக்காஸ்!

ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!
-சண்.சரவணக்குமார் படங்கள் பா.மணிவண்ணன்
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!
ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... ஃபோக் இஸ் த பெஸ்ட்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism