ஃப்ரெண்ட்ஸ் "நஜ்மா, நசீர், தன்வி... இந்த த்ரீ ரோஸஸ்தான் (உங்களோட சேர்த்து ஃபோர் ரோஸஸ்)!"
டூர் "இதுவரைக்கும் காலேஜ் டூர் மட்டும் ஏனோ எனக்கு மிஸ்ஸாயிட்டே வருது (விடுங்க... 'மிஸஸ்' ஆனவொடன ஹனிமூன் டிரிப் போய்க்கலாம்!) பட் நாங்க படிக்கிறது கம்யூனிகேஷன் கோர்ஸ்ங்கறதால, அடிக்கடி ஷூட்டிங் பார்க்க கிளாஸோட எங்கள கூட்டிட்டுப் போவாங்க. ரகளைதான்!"
கேங் பவர் "மொத்தம் ஏழு பேரு (வாவ்... வானவில்!). லேடீஸ் காலேஜ்ல சுடிதார் போட்ட ரவுடிங்க நாங்க. அதேசமயம் காலேஜ் ஃபங்ஷன்னா முதல் ஆளா நின்னு, இழுத்துப் போட்டுட்டு எல்லா வேலைகளையும் பார்ப்போம்."
மதிப்புக்குரிய குரு "எங்க பிரின்ஸி மேடம் பெர்ஸி! அவங்க கோபப்பட்டதா சரித்திரமே (!) இல்ல. எப்பவும் சிரிச்சுட்டேதான் இருப்பாங்க. ஃப்ரெண்ட் வீட்டுக்குள்ள போற மாதிரி தைரியமா அவங்க ரூமுக்கு போய் 'ஹாய்' சொல்லலாம்!"
எக்ஸாம் ஃபீவர் "எப்பவுமே 102 டிகிரி! எண்ட குருவாயூரப்பனுக்கு சில பல வேண்டுதல்களோடதான் எல்லா எக்ஸாமையும் அட்டண்ட் பண்ணுவேன் (அப்படியே எங்க ஊரு மாரியாத்தாவுக்கும் 'பூ' மிதிங்க! அரியர்ஸ் இல்லாம அருள் புரிவா ஆத்தா)!"
|