கல்லூரி வகுப்பில் அன்றைய தினம் 'லஞ்ச்'சுக்கு அடுத்து வந்த முதல் பீரியடில் ஹெச்.ஓ.டி. பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். சாப்பாட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு வந்த இரண்டு மாணவர்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. ஒருவன் கிட்டத்தட்ட தூங்கியேவிட, ''உண்ட மயக்கம் தொண்டனுக்கு வந்துடுச்சோ... எந்திரிடா!'' என அதட்டல்போட்டு எழுப்பிவிட்டார் ஹெச்.ஓ.டி. உடனே அடுத்தவன், ''ஸ்மால் கரெக்ஷன் சார்.... உண்ட மயக்கம் 'குண்ட'னுக்கும் உண்டு!'' என்று 'பப்ளிமாஸ்' போல இருக்கும் மற்றவனைக் காலி பண்ண... சமயோஜித நகைச்சுவை காரணமாக தன்னுடைய கோபத்தையும் மறந்து ஹெச்.ஓ.டி. சிரிக்க ஆரம்பிக்க... மொத்த வகுப்பும் சிரிப்பலையில் மிதந்தது. பதறிப்போய் பாதித் தூக்கத்தில் எழுந்தவன், 'நான் எங்க இருக்கேன்... இங்க என்ன நடக்குது' என்ற டைப்பில் நின்றுகொண்டிருந்ததுதான் அனைத்திலும் ஹைலைட்!
- ஜி.வளர்மதி செந்தில்குமார், பவானிசாகர்
இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி
அனுபவங்களையும்
எழுதி அனுப்பலாம், முகவரி
'ஃப்ளாஷ்பேக்',
அவள் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002
|