Published:Updated:

காலேஜ் ஸ்டார்!

காலேஜ் ஸ்டார்!

காலேஜ் ஸ்டார்!

காலேஜ் ஸ்டார்!

Published:Updated:

காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்தால் பசு... பாய்ந்தால் புலி! நாவுக்கரசியைப்பத்தி ஒன்லைன் இன்ட்ரோ கேட்டா இப்படித்தான் சொல்லணும்!

பேருக்கு ஏத்தமாதிரியே பொண்ணோட ப்ளஸ்... பேச்சுதான்! பேசிப் பேசியே கப்புகளை அடுக்கி வெச்சிருக்காங்க... சர்டிஃபிகேட் களை குவிச்சு வச்சிருக்காங்க... தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில எம்.ஏ. இங்கிலீஷ் செகண்ட் இயர் படிக்கற இந்தப் பேச்சழகி!

"பேச்சுல நான் இந்த அளவுக்கு ஆர்வமா இருக்கறதுக்குக் காரணமே... என்னோட தாத்தாதான். தமிழ்ச் சொற்பொழிவாளரான அவரைப் பார்த்துதான் எனக்கும் பேச்சுல ஆர்வம் வந்தது. ஒண்ணாவது படிக்கும்போது 'பாரத மாதா' வேஷம் போட்டு முதல் முதலா மேடையேறி பேசினப்போவே, மேடை பத்தின பயம்எல்லாம் பறந்து போயிடுச்சு. அதுலயிருந்து ஸ்கூல், காலேஜ், இன்டர்காலேஜ், இன்டர்ஸ்டேட்னு பல மேடைகள்ல பேசிட்டே இருக்கேன்!"னு சந்தோஷமா சொல்ற நாவுக்கரசி மேடைப்பேச்சுல ஆங்கிலம், தமிழ்னு ரெண்டு மொழியிலயும் கில்லி!

காலேஜ் ஸ்டார்!

"நான் எந்த போட்டிக்கும் முன்கூட்டியே தயார் பண்ணி வச்சுட்டு பேச மாட்டேன். குறிப்பு மட்டும் மனசுல எடுத்துக்குவேன். போட்டிக்கு நம்ம பேரைக் கூப்பிடற வரைக்கும் நகத்தைக் கடிச்சுட்டு டென்ஷனா உட்கார்ந்திருக்காம, சக மாணவிகள் மேடையில பேசுறதை அமைதியா ரசிச்சுக் கேட்பேன். பிறகு, சாவகாசமா போய் மைக் பிடிப்பேன். அப்பறம் படபட பட்டாசுதான்"னு தன் வெற்றி ஃபார்முலா சொல்ற நாவுக்கரசி, பேச்சுப் போட்டியில இதுவரைக்கும் மாவட்ட அளவுல ஏழு, யுனிவர்சிட்டி அளவுல நாலு, மாநில அளவுல மூணுனு மொத்தம் 14 தடவை முதலிடம் பிடிச்சுருக்காங்க. 12 கப்ஸ், 5 மெடல்ஸ், 5 ஷீல்டுகள், நூற்றுக்கும் மேற்பட்ட சர்ட்டிஃபிகேட்ஸ்னு அள்ளியிருக்காங்க. கல்லூரி மேடைகள் தவிர எஃப்.எம்., தொலைக்காட்சினு பிற மேடைகள்லயும் கலக்கியிருக்காங்க. 'மிஸ்.சாவரின்', 'தமிழ்ச்சுடர்', 'கவித்திலகம்'... இதெல்லாம் அவங்களோட திறமைகளைப் பாராட்டி வழங்கப்பட்ட விருதுகள்!

"ஜனவரி மாசம் 'ஹரியானா'வுல நடைபெற இருக்கற தேசிய லெவல் ஆங்கில பேச்சுப் போட்டியில கலந்துக்க இப்போ முழு நம்பிக்கையோட தயாராயிட்டு இருக்கேன்"னு சொல்ற இவங்க பேச்சுல மட்டுமில்ல... பாட்டு, மோனோ ஆக்ட்டிங், டான்ஸ், கட்டுரைப் போட்டினு எல்லா ஏரியாவுலயும் பொண்ணுதான் காலேஜ் க்வீன்! சமீபத்துல மைசூர்ல நடந்த சவுத் இண்டியா லெவல் 'யூத் ஃபெஸ்ட் 2009'-லகூட மேடம் செகண்ட் ப்ளேஸ் வின்னர்!

"வெல்டன்..." சொன்னா, "இந்த வெற்றிக்கு என்னோட முயற்சி மட்டும் காரணமில்ல. ஒருத்தருக்கு நல்ல அப்பா - அம்மா, ஆசிரியர்கள், நண்பர்கள் அமைஞ்சுட்டா... அந்த மாரல் சப்போர்ட் அவங்களுக்கு எந்த வெற்றியையும் வாங்கிக் கொடுக்கும். அதுக்கு நான்தான் உதாரணம்!"னு அட்டகாசமா 'வோட் ஆஃப் தேங்க்ஸ்' சொல்றாங்க நாவுக்கரசி!

காலேஜ் ஸ்டார்!
-இ.கார்த்திகேயன்
படம் எல்.ராஜேந்திரன்
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism