Published:Updated:

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

Published:Updated:

ஃபீலிங்... ஹீலிங்!
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சி.ஆர்.எஸ்.

ஸ் ஸ்டாப்பிங், பார்க் பென்ச், கோயில் குளப்படிக்கட்டு என்று பல இடங்களிலும் தனக்குத் தானே பேசிக் கொண்டும், சமயங்களில் சிரித்துக் கொண்டும் காட்சியளிக்கும் பெண்களை நிச்சயம் நீங்கள் கடந்து போயிருப்பீர்கள்.

'ஏதாச்சும் புலம்பல்ஸா இருக்கும்... என்ன பிரச்னையோ..?!', 'பொண்ணு மனசுக்குள்ள எதையோ நினைச்சு சிரிக்கறாபோல..!'

- இவைதான் அவர்களைப் பற்றிய உங்களின் கணிப்பாக இருந்திருக்கும்!

ஆனால், இனி உங்கள் வட்டத்தில் அப்படி யாரையாவது கடக்க நேரிட்டால், அவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கும்பட்சத்தில், அவர்களிடம் சென்று, 'இப்படி பேசறது, சிரிக்கறது அப்நார்மல். என்ன பிரச்னை?' என்று கனிவாக விசாரியுங்கள். ஏனென்றால், அது மனநோயின் ஆரம்ப நிலையாகக் கூட இருக்கலாம்!

ஃபீலிங்.. ஹீலிங்...!

என்ன... அதிர்ச்சியாக இருக்கிறதா?! மானஸாவைப் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) பற்றி தெரிந்து கொள்ளும் போது நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்.

'அடிக்கடி தனியா பேசறா... சிரிக்கறா... கேட்கற கேள்விக்கும் பதில் இல்ல' போன்ற கவலை தோய்ந்த குற்றச்சாட்டுகளுடன் என்னிடம் அழைத்து வரப்பட்ட கல்லூரி மாணவிதான் அவள். முதல் முப்பது நிமிடங் களுக்கு எதற்கும் பிடி கொடுக்காமல் பதில் சொன்னவளிடம், மனோதத்துவ முறையில்தான் பேச வேண்டி இருந்தது.

"கண்களை மூடிக்கோ மானஸா. இங்க உன்னைத் தவிர யாரும் இல்ல. உன் மனசுல நீ நினைக்கறதை அப்படியே எங்கிட்ட சொல்..." என்றேன்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு, "பரந்து விரிந்த கானகத்தின் இளவரசி இந்த மானஸா. இப்போ நான் பல்லக்குல போயிட்டு இருக்கேன். எனக்கு முன்னால, பணியாட்கள் போறாங்க. தேனும், பாலும், தினைமாவும்தான் என் மதிய உணவு. என் வருகைக்காக கானகத்து மக்கள் எல்லாம் மலர் தூவி காத்திட்டு இருக்காங்க. ஆனா... இந்த இளவரசியை தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ளளேயே வெச்சுக்கணும் பார்க்கறார் அப்பா சுந்தரமூர்த்தி! இந்த இளவரசி எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காதவனு எங்கப்பா வுக்கு நான் புரிய வைப்பேன். நீங்க ஒருநாள் கண்டிப்பா என் தேசத்துக்கு வாங்க!"

- இந்த ரீதியில் அவள் தொடர்ந்து பேசிக்கொண்டே போக... எனக்கு அதிர்ச்சியுடன் பரிதாபமும் ஏற்பட்டது அவள் மீது!

மானஸாவின் அம்மா-அப்பா இருவருமே கல்லூரிப் பேராசிரியர்கள். கால்குலேட்டரில் தட்டினால் கிடைக்கும் பதில் போல, மகளும் சொன்ன பேச்சை கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக் கிறார்கள். கட்டுப்பாடு என்ற பெயரில் ஏகப்பட்ட கட்டளைகள். ஆனால், நில்லென்றால் நிற்கவும், ஓடு என்றால் ஓடவும் அவர்கள் வீட்டு நாய்குட்டி அல்லவே பெற்ற மகள்?!

பருவ வயதில் இன்னும் அதிகமான இந்தக் கட்டுப்பாடுகளை மறக்க, தனக்குள் சில கற்பனைகளை வளர்க்க ஆரம்பித்தாள் மானஸா. தன்னைத் திட்டாத ஒரு அப்பா கிடைத்தால் எப்படி இருக்கும், அம்மா வேலைக்குப் போகாவிட்டால் எப்படி இருக்கும் என்றெல்லாம் மெல்ல விரிந்த அவள் கற்பனை சிறகுகள்தான், இன்று கானகத்து இளவரசியாகவே பறந்து கொண்டிருக்கிறது!

'சரி கற்பனைதானே..? பண்ணிட்டுப் போகட்டுமே! இதுல என்ன நஷ்டம்..?' என்பவர்களுக்கு, அந்த கற்பனையின் விளைவைப் பற்றியும் சொல்ல வேண்டும்!

ஃபீலிங்.. ஹீலிங்...!
-ஃபீல் பண்ணுவோம்...
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism