சின்னப்பொண்ணு ''அப்புறம்...?''
வேல்முருகன் '' 'தலைவாரி பூச்சூடி உன்னை'னு பாரதிதாசன் பாட்ட பாடினேன். கூட்டமே கை தட்ட... எங்கண்ணுல தாரை தாரையா தண்ணீ!
அப்படியே வளர ஆரம்பிச்சு, சினிமாக்குள்ளயும் நுழைஞ்சுட்டேன். 2004-ம் வருஷம் என்னோட தேசப்பக்தி பாட்டுக்கு... முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமோட பாராட்டு கிடைச்சுது. அதைத்தான் என் வாழ்நாள் சந்தோஷமா நெனக்கிறேன்.''
சின்னப்பொண்ணு ''ராசா... ராசா...! எங்கதை வேற மாதிரி. சிவகங்கை பக்கத்துல 'சூராணம்'தான் சொந்த ஊரு. வானம் பார்த்த பூமிங்கறதுனால மழைக்காக மொளப்பாரி வைச்சு பாடுவாங்க. எங்க அத்தை சுப்பம்மா ரொம்ப அருமையா பாடுவாங்க. அதக்கேட்டே... நானும் பாட ஆரம்பிச்சேன். பிறகு, கே.ஏ.குணசேகரன் அய்யா கொடுத்த மேடை... என்னை சினிமா அளவுக்கு வளர்த்தெடுத்திட்டுது.''
ஒரு தடவ, 'அம்மா, பாவாட சட்டை கிழிஞ்சு போச்சுதே'னு மேடையில பாடினப்ப ஓடி வந்த ஒரு அம்மா, 'எங்க வீட்டு நெலமையும் இதுதான் தாயி'னு கட்டிப்புடுச்சி அழுதுட்டாங்க. வறுமையை வெளிச்சம் போடற அந்தப் பாட்டை, எங்க பாடினாலும் கூட்டம் அழுதுடும்.''
வேல்முருகன் ''அதானேக்கா... நம்ம பாட்டுகளோட வலிமை. உழைக்கிற மக்களோட இன்பம், துன்பம் எல்லாம் கலந்துகட்டி பாடறோம். அது காதுகுள்ள நுழைஞ்சு மனச தொடுறப்ப... பாராட்டுறாங்க. அதுதானே நம்ம மாதிரியான பாடகர்களை இயக்குற சக்தியே!''
அதை ஆமோதித்து சின்னப்பொண்ணு தலையாட்ட... 'அம்மா, பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே' என்று பாடியபடியே கலைந்தனர் இருவரும்!
|