Published:Updated:

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

Published:Updated:

இரா.மன்னர்மன்னன்
திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!
திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

'வாழையடி வாழை' என்ற பெயரில் மாபெரும் ஓவியர் மறைந்த மணியத்தோடு சேர்த்து, அவருடைய மூன்று தலைமுறையும் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. அடி வாழையாக, மணியம், அதிலிருந்து வெடித்த அதிசய வாழையாக அவருடைய மகன் மணியம்செல்வன், அதிலிருந்து புறப்பட்ட இரண்டு கிளைகளாக பேத்திகள் சுபாஷினி பாலசுப்பிரமணியன், தாரிணி பாலகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகள் கண்காட்சியை அலங்கரித்தன!

மணியம் செல்வனின் இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து, குழந்தைகளையும் பெற்ற நிலையில், பிறந்த வீட்டின் பெருமைபாடும் ஓவியங்களை விடாமல் சுமந்து, உன்னத ஓவியங்களாக பெற்றெடுத்திருக்கின்றனர். கண்காட்சியைப் பார்க்க வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியோடு... இனிய உற்சாகத்தையும் கொடுக்கத் தவறவில்லை திருமதி ஆர்ட்டிஸ்டுகளின் அந்த ஓவியங்கள்!

மூத்தவர் சுபாஷினி, ஃபைன் ஆர்ட்ஸ் படித்தவர். மல்ட்டி மீடியாவில் நல்ல பரிச்சயம் உள்ளவர். இவரது ஸ்பெஷல், இசையையும் வண்ணத்தையும் கலக்கும் 'ராக மாலா' ஓவியங்கள்.

அதென்ன ராக மாலா ஓவியங்கள்..?

"மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் (16-ம் நூற்றாண்டு) வரையப்பட்ட 'ராக மாலா' ஓவியங்கள்... ஹிந்துஸ்தானி இசையோடு, கவிதையையும் கலந்து வரையப்பட்டவை. 7 ஸ்வரங்களும் அங்கே 7 நிறங்களாக உள்ளன. இந்த பாணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு கவிதை எழுதத் தெரியாது. ஆனால், முறைப்படி ஓவியத்தையும், இசையையும் படித்திருக்கிறேன். இதனால் நானும் 'ராக மாலா' ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்" என்பவர், தன்னுடைய குருவான ஸ்வாமி சாந்தானந்த சரஸ்வதி, 'சிவரஞ்சனி' ராகத்தில் எழுதிய 'மதுர மனோகர' என்ற தமிழ் பஜனுக்கு ஏற்ப, தான் வரைந்த ஓவியங்களைத்தான் கண்காட்சியில் வைத்திருந்தார்.

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

"சிவரஞ்சனி ராகமே... ஏக்கமான மனநிலையைக் குறிப்பது. இந்தப் பாடல் தனிமையில் உள்ளபோது கண்ணனை எண்ணி ஏங்கும் பெண்ணைப் பற்றியது. அந்த உள்ளம் கண்ணன் தன்னோடு இருப்பதாக கற்பனை செய்து கொள்ளும். அந்தக் கற்பனைக் காட்சிகளைத்தான் நான் படமாக்கி இருக்கிறேன். கற்பனை என்பதால் வலுவாக இல்லாமல் மிக மெல்லிய கோடுகளைக் கொண்டு, குறைந்த விவரங்களோடு வரைந்திருக்கிறேன்" என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் சுபாஷினி.

வெறும் ஓவியங்களாக மட்டும் பார்த்தால் அதன் சுவையை உணர முடியாது என்பதால், சுபாஷினி சொந்தக் குரலில் பாடிய அந்த 'மதுர மனோகர' பாடலும் ஸ்பீக்கரில் இடையூறு இல்லாமல் இசைத்துக் காட்டப்பட்டது... ஓவியக் கண்காட்சிகளில் புது முயற்சி.

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

இரண்டாவது மகள் தாரிணி, ஆர்க்கிடெக்ட். நீர் வண்ணங்களில் அதிக கவனம் செலுத்துபவர். "என் மனதுக்குப் பிடித்ததை மட்டும்தான் வரைந்திருக்கிறேன். தாஜ்மகாலையும், ஈஃபிள் டவரையும் வரையும்போது கிடைக்காத சந்தோஷம், தாய் மடியையும், தாத்தா வீட்டையும் வரையும்போது கிடைக்கும். எனக்கு மிகவும் பிடித்தவர்கள் ஒரு பூங்கொத்து கொடுத்தால், அது வாழ்நாள் முழுவதும் வாடாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி வாடாமல் இருக்க... அந்த பூங்கொத்தை ஓவியமாக வரைவதைவிட சிறந்த வழி இல்லை என நம்புகிறேன்!" என்று தத்துவார்த்துவமாகப் பேசும் தாரிணி,

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!

"ஒரு கட்டடக் கலை மாணவியாக என் தாத்தாவின் ஓவியங்களை நான் மிகவும் வியக்கிறேன். ஹம்பியில் தற்போது சிதைந்து கிடக்கும் சிற்பங்களைப் பார்த்து, ஏற்கெனவே சிதையாத நிலையில் அவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்பதை உள்ளத்தில் வடித்துக் கொண்டு, தாத்தா வரைந்து தள்ளிய ஓவியங்கள்தான் எனக்கு உலக அதிசயம்!

அப்பாவின் ஓவியங்களுக்கும் நான்தான் முதல் ரசிகை. அவர் நீர் வண்ணங்களைப் பயன்படுத்தும்போது கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பேன். அதுதான் என் ஓவியங்களிலும் அவரின் சாயல் கொஞ்சம் அப்பிக்கிடக்கிறது. அதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்!" என அடக்கமாகச் சொல்கிறார்!

நிறைகுடம்!

திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!
-படங்கள் கே.ராஜசேகரன்
திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!
திருமதி ஆர்ட்டிஸ்டுகள்..!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism