பெருமை, விளையாட்டுப் பொருளுனு தவழ்ற வயசுலயே தாலாட்டு மூலமா தமிழ் அமுதை ஊட்டினாங்க. தூளியில, தோள்ல, மார்புல, மடியில சாய்ச்சிக்கிட்டு இப்படி பாடற தாலாட்டு, யார் சொல்லி கொடுத்தா? அது கேள்வி ஞானத்தால வழிவழியா வந்ததா..இல்லையா?
மத்தப் பாட்டையெல்லாம் பாடுறப்ப ராகம் தப்பினா... அபத்தமா இருக்கும். ஆனா, தாலாட்டு மட்டும் ராகம், தாளத்தையெல்லாம் மிஞ்சினது. அதை எந்தத் தாய் பாடுனாலும், ஏன் அப்பாமாருங்க பாடுனாக்கூட, குழந்தையை சுகமாக தூங்க வெக்கக்கூடிய அற்புத சக்தி படைச்சது. பின்ன... சும்மாவா... உசுரோட கலந்து பொறந்த இசையாச்சே!'' என்று நெகிழ்ந்தவர்,
''கைக்குழந்தை தவழுறப்ப, கைத்தட்டுறப்ப, சாய்ந்தாடுறப்ப, மெதுவாக எழுந்து அடிமேல அடி வெச்சு நடக்குறப்ப, கைவீசுறப்ப, சாய்ஞ்சாடி விளையாடுறப்பனு ஒவ்வொரு கட்டத்துக்கும் பாட்டோட பரிமாணம் மாறும்.
'கை வீசம்மா கைவீசு, கடைக்கு போலாம் கைவீசு...', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு...'னு அந்தந்தப் பருவத்துக் குழந்தையோட செயலை ஊக்கப்படுத்துற மாதிரியே அதெல்லாம் அமைஞ்சிருக்கும்.
|