Published:Updated:

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

Published:Updated:

"பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!"
பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!
பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்டுத் தம்பதியின் அதிசய வாழ்க்கை!
பொன்.செந்தில்குமார்

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

"முக்காமொழம் நெல்லுப்பயிரு
முப்பதுகெஜம் தண்ணிக்கிணறு
நிக்காமதான் தண்ணி இறைச்சேன்..."

- ஒற்றையடிப் பாதையில் முன் வந்து நம்மை வரவேற்றது நாம் தேடிச் சென்ற விஜயகுமாரின் குரல்!

இவர், தர்மபுரி மாவட்டத்தின் மலையோர கிராமமான சிக்கிம்பட்டியில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தன் பண்ணையில் வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் கடந்த இருபது வருடங்களாக வசித்து வருகிறார்.

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

கண்ணுக்கு எட்டியதூரம் வரை மனித வாடையே இல்லாத அப்பிரதேசத்தில், ஒரு கையில் மாட்டைப் பிடித்தபடி கணீர் குரலில் நம்மை எதிர்கொண்ட நடுத்தர வயதுக்காரரான விஜயகுமார், "இது பத்து ஏக்கர் பண்ணை. இருவது வருஷத்துக்கு முன்ன கரும்பு, நெல், மஞ்சள்னு எல்லாம் பயிரு செஞ்சேன். பத்து, பதினஞ்சு வேலையாளுனு ஒடிக்கிட்டிருந்தது வாழ்க்கை. அப்போதான் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் எழுதின 'வாழ்க்கையா... வேளாண்மையா... கலாச்சாரமா?'ங்கற புத்தகத்தைப் படிச்சேன். அதுதான் என்னை மொத்தமா மாத்திப் போட்டுடுச்சு.

'விவசாயம் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. இயற்கையை நேசித்து அதனுடன் ஒட்டி உறவாடும் உன்னத தொழில்'னு அதுல நம்மாழ்வார் குறிப்பிட்டிருந்தார். அந்த வரிகள்தான் என்னை சிந்திக்க வெச்சுடுச்சு. 'அட, இத்தனை காலமா 'பணம் மட்டும்தான் வாழ்க்கை'னே ஓடியிருக்கோம். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்'னு புரிஞ்சுகிட்டேன். அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துக்கற அளவு பணம் இருந்தா போதும்னு முடிவெடுத்தேன்.

'இனிமே நிலத்துல விவசாயம்கிறதையும் செய்யக்கூடாது. எந்த ஆடம்பரமும் தேவையில்ல. வாழத் தேவையான வசதி மட்டும் போதும். இந்த நெலத்தோடதான் நம்ம வாழ்க்கை இருக்கணும்'னு திட்டம் போட்டேன். நாலு பசுமாடு, ஒரு காளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட தினமும் 50 லிட்டர் பால் கிடைச்சுடும். அந்த வருமானமே போதுமானதா இருக்கு!" என்று சந்தோஷமாகச் சொன்னார்.

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

இருபது ஆண்டுகளாக அந்த நிலத்தில் பயிர் செய்யாததால்... புல், களைச்செடிகள், மரங்கள் என்று வளர்ந்து நிற்கின்றன. மான், முயல், முள்ளம்பன்றி என காட்டு விலங்குகள் மேய்ச்சலுக்காக அங்கே வந்து செல்கின்றன.

"இந்த ஊர்க்காரங்கள்லாம் 'செழிப்பா விவசாயம் செஞ்ச இந்தப் பண்ணயை இப்புடி களை மண்ட விட்டுட்டாரே... இவருக்கு மூளைக் கோளாறாயி டுச்சா?'னு பரிதாபப்பட்டாங்க. ஆனா, எனக்கும் என் மனைவிக்கும் இந்த வாழ்க்கை நிறைவா இருக்கு'' என்று விஜயகுமார் சொல்ல, அருகிலிருந்த அவரின் மனைவி கல்பனாவை நோக்கினோம்.

"சென்னையில் பிறந்து, வளர்ந்தவங்கறதால...ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருந்துச்சு. 'பணம் இருந்தாதானே ஊரு, உலகமெல்லாம் நம்மள மதிக்கும்'னு நினைச்சு மறுகினேன். ஆனா, குறைஞ்ச வருமானத்தை வெச்சுக்கிட்டே நிறைஞ்ச வாழ்க்கை வாழ முடியும்கிறத அனுபவத்துல புரிஞ்சுகிட்ட பிறகு... இந்த வாழ்க்கைதான் இனிமையானதுங்கறதுல உறுதியாயிட்டேன்.

எங்களுக்கு ஒரே பையன். இன்ஜினீயரிங் படிச்சுட்டிருக்கான். புள்ளைய படிக்க வைக்கணுமேனு கண்டபடி பயிர்த் தொழிலை செய்து, கடன்லயெல்லாம் நாங்க சிக்கிக்கல. அதேசமயம், பால்மாடு வருமானத்துலயே இந்த அளவுக்கு அவனைப் படிக்க வைக்கிறோம்" என்று கணவனுக்கும் மேலாக உறுதி தெரிந்தது கல்பனாவின் குரலில்!

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!

தொடர்ந்த விஜயகுமார், ''எங்க மாடுகளுக்கு எந்தத் தீவனமும் நான் காசு போட்டு வாங்கறது இல்ல. பச்சைப் பசேல்னு மண்டிக்கிடக்கற இந்தப் புல்லுங்கதான் தீனி. தினமும் அம்பது லிட்டர் பால் கறக்கறேன். இதை வாங்கறதுக்காக பால்காரர் வருவார். ஊருக்குள்ள இருந்து எங்க எடத்துக்கு வந்துபோற ஒரே வெளியாள் அவர்தான்!" என்ற மாட்டுக்காரர் விஜயகுமார், அடுத்து பேசியவையெல்லாம் சித்தாந்தம்!

"ஒரு காலத்துல ஓடி ஓடி வித விதமா பயிர் செஞ்சத நெனச்சா எனக்கே வெட்கமா இருக்கு. தேவைக்காக சம்பாதிக்கறவன்தான் நிம்மதியா இருப்பான். கார், பங்களா பட்டம், பதவினு ஆடம்பரத்துக்காக ஓடறவனுக்கு நிம்மதி தூரமாப் போயிடும். அது, இயற்கைக்கும் விரோதமானது.

'ஒருத்தன் அங்க இருக்காணாம்டா...'னு சில நண்பர்கள் என்னப் பத்தி கேள்விப்பட்டு, இங்க என்னப் பார்க்க வருவாங்க. மரத்தையும், பூவையும், காயையும், கிணத்தையும், மாட்டையும் கன்னுக்குட்டியையும் பார்த்துக்கிட்டே, ரெண்டு நாள் யாரோட தொந்தரவும் இல்லாம இங்கயே தங்கிட்டுப் போவாங்க. நான்தான் வெளி உலகத்தோட தொடர்பில்லாம இருக்கேன். ஆனா, இயற்கையை நேசிக்கறவங்களுக்கு என் தோட்டத்துக் கதவு எப்பவுமே திறந்திருக்கும்!" என்று சிரிக்கிறார் விஜயகுமார்.

அவர் காட்டில்... ஸாரி... தோட்டத்தில் விழுகிறது சிறு தூரல்... ஆசீர்வாதமாக!

பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!
-படங்கள் க.தனசேகரன்
பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!
பணம் குறைஞ்சுது... மனசு நிறைஞ்சுது!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism