Published:Updated:

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

Published:Updated:

வாழ்க்கை
எஸ்.ஷக்தி
அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!
அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!
-இது நீலகிரி டச்!

'டீ'... களைத்துப்போன உடம்பையும், மனதையும் ரீ-சார்ஜ் செய்யும் மலிவு விலை சார்ஜர் இது. அதற்கான தேயிலையைக் கிள்ளிப் பறிக்கும் பணியை முழுக்க முழுக்க பெண்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

கொட்டும் பனியிலும்கூட தலையில் துணியையும், முதுகில் பையையும் இழுத்துக் கட்டியபடி எஸ்டேட் ஓரமாக தேயிலை பெண்கள் நடந்துபோகும் காட்சி, நீலகிரி டச்!

பாலுமகேந்திராவின் கேமரா பல முறை அள்ளிக்கொண்டு வந்து நம்முடைய கண்களுக்கு இதை விருந்தாக வைத்திருக்கிறது - பல சினிமாக்களில்!

இதையெல்லாம் மெய்சிலிர்த்துப் போய் பார்த்திருப்போம். ஆனால்... நேரடியாகச் சென்று பார்க்கும்போதுதான் நடுங்க வைக்கிறது அந்த பெண்களின் வாழ்க்கை!

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

தேயிலை தேசமான நீலகிரியில் டீ எஸ்டேட்களுக்குள் இறங்கி நடந்தோம். பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் எட்டு மணிக்கு மேல்தான் இயல்பு வாழ்க்கை ஆரம்பமாகும். அதிலும் இந்த உறைபனி மாதங்களில் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். ஆனால், வாழ்க்கைச் சக்கரம் ஓடியாக வேண்டுமே...?! பனி, மூடுபனி, தேயிலை, வாரக் கூலி இவற்றைத் தவிர வேறெதுவும் பெரிதாக தெரிந்து வைத்திருக்கவில்லை இந்தப் பெண்கள். ஆனால், கூலி கொடுக்கும் கரங்கள் ஆங்காங்கே சுருங்கிப் போனதுதான் கொடுமை.

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

"ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட நூத்தி பதினேழு ரூபா கூலி கொடுக்கணும்னு கெவருமென்ட் ஆர்டர் போட்டிருக்கு. பெரிய எஸ்டேட் ஓனருங்க இதை ஓரளவுக்கு மதிக்கிறாங்க. ஆனா...சின்ன எஸ்டேட் வெச்சிருக்கிறவங்கள்ல பலரும், எழுபத்தெட்டு, எண்பது ரூபாதான் தர்றாங்க. சமயத்துல ஆறு மாசம், ஏழு மாசம்னு கூலியை சேர்த்து வெச்சுக் கொடுக்குறாங்க. அதுவரைக்கும் கம்பெனிக்காரங்களா பார்த்து கொண்டு வந்து கொடுக்குற ரேஷன் அரிசியையும், சீமெண்ணெயையும் வெச்சுதான் காலத்தை ஓட்டணும். சில சமயம், சீமெண்ணெயையும் ஊத்தாம போயிடுவாங்க. அப்பல்லாம்... ராத்திரியில குளிருக்கு தீ போடகூட முடியாம நடுங்கிக் கெடப்பாங்க" என்று அந்த பெண்களின் சார்பாக நம்மிடம் பேசினார் முதியவர் ஒருவர்.

எல்லா எஸ்டேட்களுமே இப்படித்தான் என்று சொல்ல முடியாது. தொழிலாளர்களுக்கு வீடுகள், போனஸ், படிப்பு உதவி, திருமண நிதி என்று கொடுக்கும் நிர்வாகங்களும் உண்டு.

"காலையில பத்து மணிக்கு வேலைக்கு வந்தோம்னா... சாயங்காலம் நாலரை மணி வரைக்கும் தேயிலை பறிப்போம். எஸ்டேட்டை தொட்ட மாதிரியே எங்க வீடு இருக்குது. புள்ளைங்கள்லாம் இங்கே இருக்குற கெவருமென்ட் ஸ்கூல்ல படிச்சுப் போட்டு ஊட்டியில காலேஜுக்கும்கூட போய்க்கிறாங்க. ஆஹா ஓஹோனு இல்லாட்டியும்கூட அளவா பொழப்பு போயிட்டு இருக்குதுங்க" என்கிறார் எடப்பள்ளியைச் சேர்ந்த ராணி.

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

மிகப்பரந்து விரிந்த எஸ்டேட்களில் ஐம்பது, அறுபது அடி தொலைவில் நின்று தேயிலை பறிக்கும்போது தங்களுக்குள் விஷயங்களை பரிமாறிக் கொள்ள 'கீச்கீச்', 'லூலூ' என்று சங்கேத சப்தங்களை வைத்திருக்கிறார்கள்... ஆபத்துக்கு ஒரு சப்தம், சந்தோஷத்துக்கு ஒரு சப்தம் என்று ரகம்ரகமாக! கொஞ்சம் சோர்வு எட்டிப்பார்க்கையில், 'தேயில பறிக்கையிலே...' என்று ஒரு பெண் பாட ஆரம்பித்தால், டபுள் ஸ்ட்ராங் சாயா அடித்த சந்தோஷத்தில் அடுத்தடுத்த பெண்கள் இட்டுக்கட்டிப் பின்னியெடுக்கிறார்கள்.

"ஆயுத பூசைக்கும், ஜனவரி 1-ம் தேதியன்னிக்கும் தேயிலைத் தோட்டத்துக்கு வந்து பூஜை போட்டுட்டு வேலையை ஆரம்பிப்போம். மத்தபடி நாங்க கொண்டாடுறது பெரியநோம்பிங்கற ஊர்க்கோயில் திருவிழாவும், மாட்டுப்பொங்கலும்தான். பொழுது அடைஞ்சா டீயை குடிச்சுக்கிட்டு டி.வி-ய பார்த்துக்கிட்டு உக்காந்துக்குவோம். ராத்திரிவரைக்கும் அக்கம்பக்கத்துல அரட்டையடிக்கிற சோலியெல்லாம் இங்கே கெடையாது" என்கிறார் இளித்துறை பகுதியைச் சேர்ந்த பார்வதி.

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!

தேயிலை எஸ்டேட்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கான பெரிய ரிஸ்க்கே அட்டைப் பூச்சி மற்றும் சிறுத்தைகளின் அட்டாக்தான்.

"கொசகொசனு நெளியற அட்டைப் பூச்சிங்க கால் விரல் இடுக்குலயெல்லாம் புகுந்து கடிக்கும்ங்க. தட்டி விட்டுட்டு, வழியற ரத்தத்தைத் துணியால துடைச்சுட்டு, இலை பறிக்கப் போயிருவோம். ஊரை ஒட்டி இருக்கற எஸ்டேட்ல இலை பறிக்கறது பரவாயில்லீங்க. ஆனா, காட்டை ஒட்டியிருக்கற எஸ்டேட்டுக்குப் போற பொண்ணுங்கள யானை விரட்டுறதும், சிறுத்தை இழுத்துட்டுப் போறதும்னு இங்க நிறைய நடக்கும்!" என்றார் ஓவேலியைச் சேர்ந்த கனகு.

இனி டீ குடிக்கும்போது நன்கு நுகர்ந்து பார்த்தால்... தேயிலையோடு தொழிலாளிகளின் கஷ்ட வாடையும் வீசக்கூடும்!

அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!
-படங்கள் வி.ராஜேஷ்
அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!
அட்டை, யானை, சிறுத்தை... ஆனாலும் ஓடுது வாழ்க்கை!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism