Published:Updated:

கிராமம் 2020?

கிராமம் 2020?

கிராமம் 2020?

கிராமம் 2020?

Published:Updated:

நாச்சியாள்
கிராமம் 2020?
கிராமம் 2020?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிராமம் 2020?

ர் மத்தியில் மக்கள் கூடிப் பேசி மகிழ போடப்பட்ட கல் மேடைகள் காலி யாகவே கிடக்கின்றன.

அப்பாக்களும் சித்தப்பாக்களும் டி.வி-யில் 'மேட்ச்' பார்க்கிறார்கள்.

கிராமம் 2020?

தாவணிகள் தீர்ந்து, 'பொங்கலுக்கு அனார்க்கலி சுடிதார் வாங்கிக் கொடுங்கப்பா...' என்று மனு கொடுக்கிறார்கள் இளம்பெண்கள்.

ஆலமரத்தடியில் அமர்ந்து முடிவெட்டிவிடும் தாத்தாவைக் காணக் கிடைக்கவில்லை. ' 'அஜித்' ஆண்கள் பியூட்டி சலூன்' போய், 'தலைக்கு கலரு போட்டு விடுங்கண்ணே' என்று அமர்ந்திருக்கிறார்கள் கிராமத்து இளந்தாரிகள். ஆனாலும், அது கிராமம்!

'கிராமங்களெல்லாம் இப்படி வெளிப்பூச்சில் மட்டுமே வண்ணங்கள் ஏற்றிக்கொள்ளும் இந்த மாற்றங்கள் எல்லாம் சந்தோஷத்துக்கு உரியவைதானா? இன்னும் பத்து (2020) ஆண்டுகளில் எப்படியெல்லாம் நம் கிராமங்கள் மாறியிருக்கும்?'

மேற்கண்ட கேள்விகளை இருவர் முன் வைத்தோம்...

எழுத்தாளர் ரவிக்குமார், எம்.எல்.ஏ

"கிராமங்களில் இருந்து இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிர்ச்சிகரமான அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 72% மக்கள் கிராமங்களில்தான் வாழ்ந்தார்கள். இன்று கிட்டத்தட்ட 50% மக்கள் நகர்ப்புற மக்களாகி விட்டார்கள்.

'வளர்ச்சிதானே இது' என சந்தோஷப்பட முடியவில்லை. காரணம்... கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து நகரங்களில் குடியமரும் விவசாய மக்கள், நகரங்களில் எந்த ராஜவாழ்க்கையும் வாழ்வதற்கில்லை. பெரும்பாலும் கூலி வேலைக்குத்தான் செல்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு 27% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்த நிலை மாறி, இன்று 37% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள். அவர்களில் 40 சதவிகிதத்தினர் நகர்ப்புற மக்கள். இந்தியாவிலேயே நகரமயமாக்கல் அதிகளவிலும், வேகமாகவும் நடந்துவருவது தமிழ்நாட்டில்தான்.

இன்னொருபுறம், கிராமத்தில் உள்ள வளமான விளைநிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக, தொழிற்சாலைகளாக மாறி, விவசாய நிலங்கள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. முன்பு ஒரு சென்ட் நிலத்தை நம்பி 5 பேர் இருந்தால்... இன்று அதை நம்பி 25 பேர் இருக்கிறார்கள். இப்படி குறைந்த நிலத்தின் மீது, அதிக சார்பு உண்டாகும்போது, கட்டாயம் உணவுப் பஞ்சம் வரும்.

கிராமம் 2020?

மேலும், கிராமங்களில் உள்ள நீராதாரங்கள் பாதுகாக்கப்படாத காரணத்தால் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதையெல்லாம் தடுக்க இப்போதே கிராம மக்களுக்கான மரியாதையான வாழ்க்கைக்கான திட்டங்களை அரசு மிகுந்த பொறுப்புடன் உருவாக்க வேண்டும்."

பேராசிரியர் டாக்டர் எஸ். பழனி துரை, காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

"அழிந்துவரும் விவசாயம் உள்ளிட்ட பதறவைக்கும் பல மாற்றங்கள்தான் இன்று நம் கிராமங்களை குத்தகைக்கு எடுத்துள்ளன. கலாசார ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கிராமங்களில் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாசாரம், ஒரு பொருளை உற்பத்தி செய்யாமல் எல்லாவற்றையும் ரேஷனில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கை வளர்த்துவிடுகிறது. இது, கிராமப் பொருளாதாரத்தை நசுக்கும். அவர்களின் சேமிப்பைக் கரைக்கும்.

கிராமம் 2020?

அரசியல்வாதிகள், கிராமங்களை எப்போதுமே ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள். அரசின் திட்டங்களோ... கிராம மக்களை சுயசார்பு உடையவர்களாக, தன் சொந்தக் காலில் நிற்பவர்களாக மாற்றாமல் அவர்களுக்கான தற்காலிக இளைப்பாறலை மட்டுமே வழங்கி ஏமாற்றுகின்றன!

எப்படி எழப்போகின்றன நம் கிராமங்கள்?!"

கிராமம் 2020?
-படங்கள் து.மாரியப்பன்
கிராமம் 2020?
கிராமம் 2020?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism