Published:Updated:

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

Published:Updated:

"பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?"
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லாவண்யா
காம்பவுண்டுக்குள் ஓர் அதிசய கிராமம்

கிராமம்... நம் எதிர்கால சந்ததிகளுக்கு இது அகராதி சொல்லாக மட்டுமே அறிமுகமாகலாம் என்ற நிலையில்தான் இருக்கிறோம்

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

இப்போது நாம். அந்தளவுக்கு நமக்கும் கிராமத்துக்குமான இழையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம்!

அதை இழுத்துத் தைக்கும் விதமாகவும், கிராமத்தின் பச்சையை பரப்புவதற்காகவும், கிராமச் சுற்றுலாவை உற்சாகப்படுத்தும் விதத்திலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 'தண்டரை' கிராமத்தை 'மாதிரி கிராமம்' என அறிவித்துள்ளது. மலையடிவாரம், காடு, கிராமத்துப் பாடல், மூலிகை, முறம் என செழிக்கும் இந்தக் கிராம சுற்றுலா தலம், கிராமம் செல்ல ஏங்கும் மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நல்லதொரு அனுபவம். அந்தக் கிராமத்தின் இருளர் இன மக்கள், அந்த ஊருக்கு இன்னும் உயிரூட்டுகிறார்கள்!

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

தண்டரை... செங்கற்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சில ஏக்கர்களுக்குள் அடங்கிவிடுகிறது மொத்த ஊரும். ஊரைச் சுற்றிலும் பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஊருக்கு நடுவில் இருக்கிறது 'இருளர் பழங்குடிப் பெண்கள் நல அமைப்பு'. அதன் தலைவி நவநீதம்மாள் கையில் மஞ்சள், குங்குமம், பூ தந்து நம்மை வரவேற்றது, கிராமத்து உறவினரின் வீட்டு விசேஷத்துக்குச் சென்றது போன்ற உணர்வைத் தந்தது! சுற்றிலும் மரங்கள் குடைபிடித்திருந்த அந்த ரம்மிய சூழலில், தங்கள் கிராமத்தின் கதையை நமக்குத் தந்தார் நவநீதம்மாள்!

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

"எங்க ஆம்பளைங்களுக்குப் பாம்பு பிடிக்கறதுதான் தொழில். தவிர, காட்டுல இருக்கற முயல், பன்னி, கீரிப்பிள்ளை, உடும்புனு வேட்டை ஆடுவாங்க. பொம்பளைங்க மலைக்குள்ள போய் காய், பழம், தேன், விதைனு சேகரிச்சுக்கிட்டு வந்து விப்போம். காலப் போக்குல எங்க இனத்தை காட்டுக்குள்ள போகக்கூடாதுனு பாரஸ்ட் ஆபீசருங்க சொல்லிட்டாங்க. பொழப்புக்கு வழி..? அப்பதான் செங்கல்பட்டை சுத்தி இருக்கற எங்க இனத்து ஆளுங்கள்லாம் சேர்ந்து கவர்மென்ட்டுகிட்ட, 'எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க'னு கேட்டோம். இந்த மலையில மரம் நடற வேலையைத் தந்தாங்க. இன்னிக்கு நீங்க பார்க்கற உயர்ந்த மரங்களெல்லாம் இருபது வருஷத்துக்கு முன்ன நாங்க நட்டதுதான்!" என்றவர்,

"நாங்க ஒரு குழுவா, ஒற்றுமையா இருக்கறதைப் பார்த்த அரசாங்கம், எங்களுக்காக ஒரு என்.ஜி.ஓ. அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அந்த ஆதாரத்தை வலுவா பிடிச்சுக்கிட்டு, நாங்க சுய வேலை வாய்ப்பு, சுயஉதவிக் குழுக்கள், மூலிகை தயாரிப்புனு பல வகையிலயும் காலூன்றிக்கிட்டோம். எங்க இன மக்களுக்காக இந்த 'நல வாழ்வு அமைப்பை'யும் ஏற்படுத்திக்கிட்டோம். மூலிகை, பழ மரக்கன்றுங்கள விக்கிறதுக்காக எங்க ஊர்ல நர்சரி இருக்கு. சுயஉதவிக் குழு சார்பா கைவினைப் பொருள் செய்யறாங்க. மூலிகைப் பொருள் விற்பனையகமும் இருக்கு. மூலிகையைக் கொண்டு வர்றது, அரைச்சு காய வைச்சு மூலிகை தயாரிக்கிறதுனு வேலைகள் நடக்குது.

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

கிராமத்தோட பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காம, எங்க பொருளாதாரத்தை நாங்க மேம்படுத்திக்கிட்டதாலதான், இதை 'மாதிரி கிராமம்'னு அறிவிச்சிருக்கு அரசாங்கம். அதனால சுற்றுலாவாசிகளும் வந்துபோக, இன்னும் செழிப்பாயிடுச்சு தண்டரை!" என்று நவநீதம்மாள் பெருமைப்பட, சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிச் சொன்னார் அமைப்பின் செயலாளர் வசந்தா.

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

"காம்பவுண்டுக்குள்ள இருக்கற எங்க ஊரை டூரிஸ்ட்டுங்க சுத்திப் பார்க்க கட்டணமா அஞ்சு ரூபா வாங்கறோம். இங்க இருக்கற லைப்ரரி, நர்சரி, மூலிகை மருந்து தயாரிப்பு, ஹெர்பல் ட்ரீட்மென்ட், மசாஜ்னு அவங்களுக்குப் பொழுது போறதுக்கு நிறைய வசதிகள் இருக்கு. விருப்பப்பட்ட உணவையும் அவங்க கண் முன்னாடியே அடுப்புக் கூட்டி சமைச்சுத் தர்றோம். விருப்பப்பட்டு கேட்டா, மலைவாழ் இன மக்களின் பாட்டை பாடச் சொல்லி கேட்கலாம். சாய்ந்திர நேரத்துல எங்களோட நடனத்தையும் பார்க்கலாம். சுற்றுலா தலமா அறிவிச்சிருக்கறதால, இங்கே காட்டேஜும் இருக்கு. இருபத்தி அஞ்சு பேர் தங்கற அளவுக்கு கெஸ்ட் ஹவுஸூம் இருக்கு. சமயத்துல தனியார் கம்பெனிங்க, பெரிய வீட்டுக்காரங்க தங்களோட விசேஷங்கள இங்கே நடத்தறாங்க. பார்ட்டி வைக்கறாங்க. மத்தவங்களும் அவங்களோட புள்ளைங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டுப் போறாங்க. தங்கறது, சாப்பிடறதா இருந்தா, எங்களுக்கு முன் கூட்டியே போன் பண்ணி சொல்லணும். அப்பத்தான் அதுக்கான ஆட்கள் ரெடியா இருப்பாங்க!" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இனிய மணத்துடன் செம்பருத்தி டீ வந்தது.

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

"இங்க வர்ற டூரிஸ்ட்டுகளுக்கு ரொம்பப் பிடிச்சது... இந்த மூலிகை நிலையம்தான்..." என்ற வசந்தா, மூலிகை நிலையத்தின் வைத்தியர் லட்சுமி அம்மாளை அறிமுகம் செய்து வைத்தார். மூலிகையின் வாசத்திலேயே பிறந்து வளர்ந்த லட்சுமியம்மாள், ஆவாரம் பூக்களை அளந்தபடியே பேசினார். "இன்னிக்கு நான் பார்க்கற வைத்தியமெல்லாம் எங்கப்பா, அம்மா சொல்லித் தந்தது. சின்ன வயசுல இருந்து அவங்ககூட காட்டுக்குப் போய் எல்லா மூலிகையும் பழகிப் போச்சு. துளிகூட கெமிக்கல் உரமில்லாத இந்த நிலத்திலயும் மேல இருக்கற மலையிலயும் விளையிற மூலிகைகள் எல்லாமே உடம்புக்கு அவ்வளவு நல்லது. எத்தனையோ சித்தா டாக்டர்கள் எங்கிட்ட வந்து மூலிகை கலவையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கறாங்க. மனசார எங்கிட்ட இருக்கற மருத்துவ ரகசியத்தை சொல்லித் தரேன். ஏன்னா, இது என் கூடவே மறைஞ்சுடக் கூடாதில்லியா?!" என்று எதிர்கால சந்ததிகள் மீதான அக்கறையோடு சொன்ன லட்சுமியம்மாள், சித்த மருத்துவம் தொடர்பான செமினார்களின் மேடை களிலும் பேசியிருக்கிறார்.

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?

தொடர்ந்த நவநீதம்மாள், "இங்க வர்ற டூரிஸ்ட்டுங்க பல பேர் 'பாம்பு பார்த்ததில்லையே...'னு ஆர்வமா கேட்பாங்க. முன்கூட்டியே போன் பண்ணிட்டு வர்றவங்களுக்கு எங்க ஆட்கள் அதிகாலையிலேயே காட்டுக்குப் போய் பாம்பு புடிச்சு வெச்சிருப்பாங்க. நீங்க பாம்பை தொட்டுப் பார்க்கலாம். பக்கத்துல உட்கார்ந்து, நின்னு, படுத்துனு விதம்விதமா போட்டோ எடுத்துக்கலாம்!" என்று சொல்ல,

''பாம்பு படம் எடுத்தாலே நமக்கு நடுங்க ஆரம்பிச்சுடும். இதுல பாம்போட படமெடுத்துக்கறதா...?'' என்று உதறல் எடுத்து நமக்கு.

"இந்த உலகத்தில மனுஷங்களத் தவிர எந்த உயிரினமும் மத்தவங்களுக்கு தீங்கு நினைக்காது. மிருகங்கள்லாம் தங்களோட உயிருக்கு ஆபத்து வந்தாதான் தீண்டும். பாம்புகளும் அதே மாதிரிதான். அதுங்க வழி யில தொந்தரவு செய்யக் கூடாது'' என்று அனுபவப் பாடம் சொன்ன நவநீதம்மாள்... ''பாம்பைக் கண்டு எங்களுக்கு பயமில்ல. அப்படியே கடிச்சாலும் விஷத்தை முறிக்க எங்ககிட்ட மூலிகை இருக்கு'' என்றார் தெம்பாக! நமக்கும் கூட தெம்பு கூடத்தான் செய்தது... அந்தக் கிராமத்தில் காலை முதல் மாலை வரை இருந்ததில்!

உணவு, மூலிகை சிகிச்சை, தங்கும் வசதி என எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு நபர் ஒன்றுக்கு ஐந்நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பட்ஜெட்டாகிறது! தார் ரோடுகளையே தினம் பார்க்கும் நகரவாசிகளுக்கு, கண்ணுக்குக் குளிர்ச்சியான கிராம தரிசனம் தருகிறது தண்டரை!

தொடர்புக்கு 044-37400237, 92449-01660 இ-மெயில் irulatribethandarai@yahoo.co.in

பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
-படங்கள் எம்.உசேன்
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
பாம்போட சேர்ந்து படமெடுத்துக்க வாரீகளா?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism