Published:Updated:

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

Published:Updated:

''காது வளக்கறவள கட்டுறதுக்கு வரிசையில நிப்பாக...''
பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!
பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரம்பரியம்
இரா.முத்துநாகு

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

ரல், உலக்கை, குந்தாணி, கும்பா, வங்கி, அட்டியல் என நம் முன்னோர்கள் புழங்கி வந்த பொருட்களெல்லாம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொன்றாக விடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஒன்றுதான்... தண்டட்டி!

அந்தக் காலத்தில்... புடலைபோல் வளர்ந்து நெளிந்த நம் பாட்டிகளின் காதுகளில் தொட்டிலாடும் தண்டட்டியின் அழகை ரசிப்பதற்கே அரை நாள் வேண்டும் நமக்கு! இன்றோ... கிராமங்களில்கூட தேடினாலும் காணக் கிடைப்பதில்லை காது வளர்த்த பாட்டிகளும்... அதில் ஆடும் தண்டட்டியும்!

'தண்டட்டி கருப்பாயி, தாளையூத்து மருதாயி',

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

'ஒத்த ரூபா தாரேன், ஒன்னப்பூ (தண்டட்டி) தட்டும் தாரேன்...'

என்றெல்லாம் சினிமா வரிகளிலும், சிதிலமடைந்த கறுப்பு- வெள்ளை புகைப்படங்களிலும் அடங்கிப்போய்விட்ட அந்த தண்டட்டி கலாசாரம்... முற்றிலுமாக விடை பெற்றுவிட்டதா? அந்த தண்டட்டிக்காக நம் பாட்டிகளுக்கும், பூட்டிகளுக்கும் காது வளர்த்துவிடுவதற்காகவே இருந்த குறவர் இன குடும்பங்களும், தண்டட்டி செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவர்களும் என்ன ஆனார்கள்? இந்திய துணைக் கண்டத்தில் தமிழகத்தில் மட்டுமே இப்பழக்கம் வந்ததெப்படி? கேள்விகள் குடைந்தெடுக்க, விடை தேடி தென் மாவட்டத்துக் கிராமங்களில் தேடித் தேடி அலைந்து சிலரைச் சந்தித்தோம்.

கோவில்பட்டி பேச்சியம்மாள் சுவாரஸ்யமாகப் பேசப் பேச, அதற்கேற்றபடி அங்கிட்டும் இங்கிட்டுமாக அசைந்து கொடுக்கிறது அவர் தண்டட்டி!

''எப்போய்... காலம் எம்புட்டோ மாறிப்போச்சு. டி.வி. பொட்டியில பாத்தா... அவ அவ தொப்புள்ள வளயத்த மாட்டிக்கிட்டு திரியிறாளுவ. நீங்க இப்பதேன் தண்டட்டிய தேடி வந்திருக்கீக!'' என்று கிராமத்து குசும்போடு ஆரம்பித்தவர்,

''முட்டு வீடு (பிறந்து ஒரு மாதத்துக்குள்ளான காலம்) பிள்ளையா இருக்கறப்பவே காது வளக்க ஆரம்பிச்சுருவாக. குறவர் சமூகத்த சேர்ந்தவகதேன் நம்ம வீட்டுக்கு வந்து, புள்ளைக்கு காது குத்தி, வளத்து விடுவாக. அதுக்கு அவுகள பணம், பாக்கு எல்லாம் வச்சு அழச்சுட்டு வரணும். காது குத்தினதோட, ரெண்டு நாளைக்கு ஒரு மொற வந்து காதுல புண்ணு ஏதும் வந்துடாம பார்த்துப் பார்த்து வளப்பாக. அப்புடி அவுக வரும்போதெல்லாம் அவுகளுக்கு கோழி அடிச்சு, சோறு போடணும். மூணு மாசத்துல காதுல தொள பெருசா வந்தவொடன, காசு இருக்கறவுக... தங்கம், வெள்ளியிலயும், இல்லாதவுக... வெங்கலத்துலயும் குனுக்கான் வாங்கி மாட்டி விடுவாக. அன்னிக்கு பெரிய கெடா விருந்தே இருக்கும். காது வளத்து கொடுத்தவுகளுக்கு கூவாத சேவ(ல்), பச்ச அரிசி முக்குறுணி (மூன்று மரக்கால்... சுமார் 15 கிலோ), காலணா, வேட்டி, துண்டு, பழம், பாக்குனு வச்சு மரியாதை செய்வாக. பொறவு காதுல கணமா கெடக்க அந்த குனுக்கான் இழுக்க இழுக்க, காதும் தொங்கிட்டே வந்து வளந்துடும்!'' என்றார் வெற்றிலையைக் குதப்பியபடி.

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

குரியப்பன்பட்டி சின்னம்மாள், தோளைத் தொட்டுவிடும்படி இருந்த தண்டட்டித் தொங்கலுடன் தொடர்ந்தார் கதையை! ''ஆளாகற வரைக்குந்தேன் அந்த குனுக்கான். அப்புறம் தண்டட்டி, பாம்படம் (பாம்புவடம்), முடிச்சுனு... இதுல எதாச்சும் ஒண்ண வாங்கி போட்டுக்கிருவோம். பொறவு கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிட்டா காதுல ஒன்னப்பூத் தட்டு, குறுத்துக்காதுத் தட்டு, இலைக்காதுத் தட்டு, லோலாக்கு, கொப்பு, முறுக்கு, குச்சினு காதுல எடம்விடாம குத்துவோம். அந்தக் காலத்துல காது வளக்கறவள கட்டுறதுக்கு வரிசையில நிப்பாக. இப்பத்தேன் காது, மூக்குல, கழுத்துலனு எதுவும் போடாம திரியிறாக பொண்ணுக! ம்ம்க்கும்...'' என்று முகவாயைத் தோளுக்குத் திருப்பி அலுத்துக் கொண்டார் ஆத்தா!

இந்தக் காது வளர்ப்பை வேலையாக செய்த குடும்பங்கள் எல்லாம் இப்போது வேறு பிழைப்புத் தேடிச் சென்றுவிட, மதுரை மாவட்டம், செக்காணூராணி அருகிலுள்ள தேங்கல்பட்டியில் நமக்குக் கிடைத்தார் அந்த வம்சாவளியைச் சேர்ந்த செல்லம்மாள் பாட்டி!

''காது வளர்த்துவிடுறதும் கிட்டத்தட்ட ஒரு ஆபரேஷன் செய்யற மாதிரிதேன்! அம்புட்டு கவனமா செய்யணும். கொஞ்சம் பெசகினாலும் பொரையேறி (புண்ணாகி) போயிடும்!'' என்று ஆரம்பித்தவர், காது வளர்க்கும் முறையை நமக்கு விளக்கினார்!

''புள்ள பொறந்த மூணாவது அல்லது ஏழாவது நாளு போயி காதுல துளை போட்டு, சோளத் தக்கை (சோள தட்டையின் உள் பகுதி) சொருகி விடுவோம். ரெண்டு நா கழிச்சு வெண்டைய எடுத்துட்டு, வெள்ளாவி வாசம் போகாத துணியை சலவைக்காரர்கிட்ட வாங்கி, அதை திரிச்சு காது துளையில திணிச்சுவிடுவோம். ஒருநா விட்டு ஒருநா போயி காதை மெதுவா தடவிக் கொடுப்போம். அப்போதேன் வெரசா (வேகமாக) வளரும். பத்து, பதினஞ்சு நாளுக்கு புள்ளைக்கு காதுல தண்ணி படாம பார்த்துக்கிருவோம். மூணு மாசத்துல முழுசா கொணமாகிடும்! பிறகு, குனுக்கான் மாட்டிடவேண்டியதுதேன்!'' என்றவர்,

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

''சில பொம்பளைக வீட்டுச் சண்டையில அந்துபோன காதோட வந்து 'ஒட்டிவிடு'னு கேப்பாக. நாங்களும் ஒட்டிவிடுவோம். அறுந்த காதுல மேல் பகுதி ஆண் காது, கீழ் பகுதி பெண் காது. ரெண்டு பக்கத்தையும் கத்தியில லேசா சீவிவிட்டு, காடா துணிய தீயில கருக்கி எடுத்து, காதுல தடவி, இரண்டு காதையும் சேர்த்து வச்சா 'கிச்சு'னு பிடிச்சுக்கிரும். அப்புறம் கோழி கால் நகத்தை வெட்டி, அதோட ரத்தத்தை நாலு சொட்டு விடுவோம். செத்த நேரம் ஒட்டின காதை கையில இறுக்கமா பிடிச்சுக்கிட்டா, ஒட்டிக்கிரும். மூணாவது நாளு அந்தக் காதுல மறுபடியும் தண்டட்டிய மாட்டிற வேண்டியதுதேன்!'' என்று பழங்காலத்து 'பிளாஸ்டிக் சர்ஜரி'யை அவர் விளக்கியபோது விழிகள் விரிந்தன நமக்கு!

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!
பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!

உசிலம்பட்டியைச் சேர்ந்த குருசாமி 'ஒருகாலத்தில்' தண்டட்டி செய்துகொடுத்த பொற்கொல்லர்! ''அப்போவெல்லாம் தண்டட்டி செய்ய வரிசையில நிப்பாக. இப்ப பழைய தண்டட்டிகளை செம செய்ய (பழுது பார்க்க) மட்டுந்தேன் வர்றாக. இந்தக் காலத்துப் பொண்ணுக எல்லாம் ஒரு பவுன் தோடு போடவே 'அய்யோ ஆத்தி'ங்கறாக. ஆனா, நாலு பவுனுல ஆரம்பிச்சு, பன்னெண்டு பவுன் வரைக்கும் அந்தக் காலத்துல தண்டட்டி போட்டுக்கிருவாக!'' என்று நம்மை மலைக்க வைத்தார்.

தண்டட்டி குறித்து தமிழ் அறிஞர் க.ப.அறவாணனிடம் பேசினோம். ''ஒவ்வொரு இன குழுக்களும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள அடையாளக் குறியீடுகளை வைத்திருப்பார்கள். அந்த வகையில் காது வளர்ப்பது தமிழர்களுக்கான அடையாளம். தென்தமிழகத்துச் சிலைகளில் காது வளர்த்த சிலைகளைப் பார்க்க முடிகிறது. மகாவீரர், புத்தர் போன்றோரின் சிலைகளும் காது வளர்ந்தே காணப்படுகின்றன. வடநாட்டில் நாகர் இன மக்களும் காது வளர்த்ததாக சொல்லப்படுகிறது. என்றாலும், தண்டட்டி என்பது நமக்கே நமக்கான பிரத்யேக அடையாளம்!'' என்றார் பெருமையுடன்!

பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!
 
பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!
பாரம்பரியம்: அதெல்லாம்... ஒரு காலம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism