மாமனார் வீட்டுக்கு வந்திருக்கும் புதுமாப்பிள்ளையை கும்மி டீமுக்குள் இழுத்துவிட்டு மச்சினிகள் படு லந்து அடிப்பார்களாம். மாமன் பொண்ணு பூ பறிப்பதை பார்ப்பதற்காகவே 'ராசுக்குட்டி' படத்தில் ஜிலுஜிலுவென வரும் பாக்யராஜ் கணக்காக சிலுக்கு சட்டையும், ஜீன்ஸ் பேன்ட்டுமாக அந்த ஊருக்கு வரும் மைனர் முறைப் பையன்களின் அலம்பல்களும் இந்த நோன்பியின் ஹைலைட் காட்சிகள்!
நோன்பியின் செகன்ட் பார்ட்டை விவரிக்கும் 'சென்னிமலை' அருணாதேவி, "பறிச்சுட்டு வந்த பூ, இலையெல்லாம் வாசல்ல கொட்டி வெச்சு அதுகூடவே சாணிப்புள்ளையாரையும் எடுத்து வைப்போம். அதுக்குப் பக்கத்தாலேயே பொங்கல் விடுவோமுங்க. அப்புறம் பொங்கல்ல கொஞ்சம் எடுத்து தவக்காய்க்கு சாப்பாடு போடுவோம். அதை பூனையோ, காக்காவோ சாப்பிட்டுப் போகும்.
மறுநாள் காலையில குளிச்சுட்டு அந்த பூ, சாணிப்புள்ளையார், செங்கரும்பு, மஞ்சக்குலை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வாய்க்காலுக்கு நடப்போம். போற வழியெல்லாம் கும்மி அடிச்சுக்கிட்டு, குலவை விட்டுகிட்டே போவோம். அப்புறம் இதையெல்லாம் வாய்க்கால்ல வீசி எறிஞ்சுட்டு அந்த மஞ்சக்குலையில உள்ள மஞ்சளை எடுத்து அரைச்சு பூசிட்டு, கரும்பையெல்லாம் புள்ளைங்களோட உக்காந்து சாப்பிட்டுபோட்டு வீடு வந்து சேருவோம்.
|